சியோமி ரெட்மி நோட் மற்றும் கூகுள் நெகசஸ் 6, உங்க தேர்வு எது

By Meganathan
|

சில வருடங்களுக்கு முன் வரை யாரும் ஸ்மார்ட்போன்கள் பற்றி கவலை கொள்ள வில்லை என்ற நிலையில் அனைவரும் நோக்கியா பீச்சர் போன்களை மட்டுமே பயன்படுத்தி வந்தனர். அதன் பின் மொபைல் சந்தை பல புதிய ஸ்மார்ட்போன்களை கடந்து தற்சமயம் பல வகை ஸ்மார்ட்போன்களை பல்வேறு விலைகளில் கிடைக்கின்றது.

[பேஸ்புக் கேம் ரிக்வஸ்ட்களை ப்ளாக் செய்வது எப்படி]

அவைகளை ஓரம் கட்டி தற்சமயம் புதிதாக வெளியாகியிருக்கும் சியோமி ரெட்மி நோட் மற்றும் கூகுள் நெக்சஸ் 6 பற்றி பார்ப்போமா. இந்த இரு கருவிகளும் அதன் அம்சங்கள் மற்றும் செயல்பாசடுகளில் நிறைய ஒற்றுமைகளை கொண்டுள்ளது என்றே கூறலாம்.

1

1

இந்த இரண்டு போன்களையும் அதன் சிறப்பம்சங்களோடு ஒப்பிட்டால் எந்த போன் சிறந்ததாக இருக்கும் என்று நினைக்கின்றீர்கள், அவை எது பார்ப்போமா

2

2

ரெட்மி நோட் கூகுளின் ஆன்டிராய்டு ஜெல்லி பீன் ஓஎஸ் மூலம் இயங்குகின்றது, ஆனால் கூகுள் நெக்சஸ் 6 ஆன்டிராய்டு லாலிபாப் மூலம் இயங்குகின்றது. இருந்தும் 4ஜி வகை நோட் ஆன்டிராய்டு கிட்காட் மூலம் இயங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது

3

3

சியோமி ரெட்மி நோட் 5.5 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன் மற்றும் 1280*720 பிஎக்ஸ் ரெசல்யூஷன் கொண்டுள்ளது.

கூகுள் நெக்சஸ் 6 5.96 இன்ச் ஏஎம்ஓஎல்ஈடி கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன் மற்றும் 1440*2560 பிஎக்ஸ் ரெசல்யூஷன் கொண்டுள்ளது.

4

4

சியோமி ரெட்மி நோட் கேமராவை பொருத்த வரை 13 மெகாபிக்சல் எல்ஈடி ப்ளாஷ் கொண்ட ஆட்டோபோகஸ் ப்ரைமரி கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் முன்பக்க கேமராவும் உள்ளது.

கூகுள் நெக்சஸ் 6, 13 மெகாபிக்சல் டூயல் எல்ஈடி ப்ளாஷ் கொண்ட ஆட்டோபோகஸ் கேமராவும் 5 மெகாபிக்சல் முன்பக்க கேமராவும் உள்ளது.

5

5

ரெட்மி நோட் 1.7 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் கார்டெக்ஸ் ஏ-7 பிராசஸர் கொண்டு இயங்குகின்றது, கூகுள் நெக்சஸ் 6 2.7 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 805 பிராசஸர் கொண்டுள்ளது.

6

6

சியோமி ரெட்மி நோட் மெமரியை பொருத்த வரை 8 ஜிபி இன்டெர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் உள்ளது.

நெக்சஸ் 6 மெமரியை பொருத்த வரை 32 ஜிபி மற்றும் 64 ஜிபி என இரு வித ஆப்ஷன்களை கொண்டுள்ளது

7

7

ரெட்மி நோட் 2 ஜிபி ராம் கொண்டு இயங்குகின்றது

நெக்சஸ் 6, 3 ஜிபி ராம் கொண்டுள்ளது

8

8

ரெட்மி நோட் பேட்டரியை பொருத்த வரை 3200 எம்ஏஎஹ் பேட்டரியும் நெக்சஸ் 6, 3200 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் இயங்குகின்றது

9

9

சிோமி ரெட்மி நோட் விலை பொருத்த வரை ரூ.8,999க்கு கிடைக்கின்றது, கூகுள் நெக்சஸ் 6 விலையை பொருத்த வரை 32 ஜிபி ரூ.44,000 என்றும் 64 ஜிபி ரூ.49,000 என நிர்ணயக்கப்பட்டுள்ளது.

10

10

சியோமி பேப்ளெட் மற்றும் நெக்சஸ் 6 போன்களும் அதன் அம்சங்களுக்கு ஏற்று விலையில் கிடைக்கின்றது. சந்தையை பொருத்த வரை விலைகளில் பெரிய மாற்றம் இருக்கின்றது என்று தான் கூற வேண்டும். விலையை தவிர்த்தால் நெக்சஸ் 6 பெரிய போனாக இருக்கின்றது.

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi Note Vs Google Nexus 6 When Favorites Go Head to Head. comparing the spces and price of Xiaomi Redmi Note Vs Google Nexus 6 which is your pick

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X