இன்று மதியம் 12 மணிக்கு: ரெட்மி நோட் 9 ப்ரோ விற்பனை!
சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் இன்று மதியம் 12 மணி அளவில் அமேசான், எம்ஐ.காம் ஆகிய தளங்களில் பிளாஷ் விற்பனைக்கு வருகிறது.

ரெட்மி நோட் 9 புரோ
ரெட்மி நோட் 9 புரோ ஸ்மார்ட்போனின் ஃபிளாஷ் விற்பனை இன்று மதியம் 12 மணிக்கு அமேசான் மற்றும் எம்ஐ.காம் வழியாக நடைபெறுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸுடன் மார்ச் மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

5020 எம்ஏஎச் பேட்டரி
இரண்டு ஸ்மார்ட்போன்களும் இதுவரை பல ஃபிளாஷ் விற்பனை நடந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் குவாட் ரியர் கேமரா அமைப்பு, 5020 எம்ஏஎச் பேட்டரி, இரண்டு ரேம் சேமிப்பக உள்ளமைவுகள் மற்றும் இரண்டு வண்ண விருப்பங்கள் உள்ளன.

ரெட்மி நோட் 9 ப்ரோவின் விலை
ரெட்மி நோட் 9 ப்ரோ 4 ஜிபி + 64 ஜிபி விருப்பத்தின் விலை 13,999 ரூபாய். 6 ஜிபி + 128 ஜிபி வேரியண்டின் விலை ரூ .16,999 ஆகும். இதில் அரோரா ப்ளூ இன்டர்ஸ்டெல்லர் பிளாக் ஆகிய வண்ண விருப்பங்களில் இந்த சாதனம் கிடைக்கிறது. சாதனத்தின் ஃபிளாஷ் விற்பனை இன்று மதியம் 12 மணி முதல் அமேசான் மற்றும் எம்ஐ.காம் மூலம் தொடங்கும்.

48 எம்பி பிரதான கேமரா
இந்த ஸ்மார்ட்போனில் 48 எம்பி பிரதான கேமரா மற்றும் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி ப்ராசஸர் உட்பட பல்வேறு சிறப்பம்சங்கள் இதில் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 48 எம்பி பிரதான கேமரா உட்பட பல்வேறு சிறப்பம்சங்கள் இருக்கிறது.

முழு எச்டி ப்ளஸ் டிஸ்பிளே
முழு எச்டி ப்ளஸ் டிஸ்பிளே வடிவமைப்பு ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6.67-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 x2400 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதி, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளுடன் விற்பனைக்கு வந்துள்ளது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 720 ஜி பிராசஸர் வசதி
குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் 2 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720 ஜி பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 உடன் MIUI 11 ஆதரவு இருப்பதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

48 எம்பி பிரைமரி சென்சார் கேமரா
ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48 எம்பி பிரைமரி சென்சார்+ 8எம்பி செகன்டரி சென்சார் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் உட்பட பல ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்

4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி
இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.குறிப்பாக வெள்ளை, கருப்பு, வெள்ளை உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும்.

18வாட் பாஸ்ட் சார்ஜிங்
5020 எம்ஏஎச் பேட்டரி ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போனில் 5020 எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது. எனவே இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடலில் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. புளூடூத், என்எப்சி, வைஃபை 802.11, யூ.எஸ்.பி டைப்-சி, 3.5மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications