Home
News

ரெட்மீ நோட் 4 : ப்ளிப்கார்டில் பிரத்தியேக வெளியீடு எப்போது.!?

ஒரு புதிய டீஸர் வெளியிடானது ரெட்மீ நோட் 4 கருவியானது ப்ளிப்கார்ட் வலைத்தளத்தில் பிரத்தியேகமாக கிடைக்கும் என்று சூசகமாக கூறியுள்ளது.

By Muthuraj

தற்போது வெளியாகியுள்ள சியோமி நிறுவனத்தின் ஒரு புதிய டீஸர் வெளியிடானது ரெட்மீ நோட் 4 சாதனம் ப்ளிப்கார்ட் வலைத்தளத்தில் பிரத்தியேகமாக கிடைக்கும் என்று சூசகமாக கூறியுள்ளது. அதற்கேற்ப ப்ளிப்கார்ட் இ-காமர்ஸ் நிறுவனமும் மபெரும் வீடியோ ட்வீட் ஒன்றை பரப்பி சியோமி ரெட்மீ நோட் 4 கருவியின் அடுத்த வெளியீடு தங்களிடம் தான் பிரத்தியேக இருக்கும் என்பதை உறுதி செய்துள்ளது.

சியோமி ரெட்மீ நோட் 4 கருவி பிற கருவிகளுடன் ஒப்பிடப்படும் போது, அதன் பிரிவில் ஒரு ஆல்-ரவுண்டராக திகழும் மற்றும் அதிர்ச்சி தரும் தோற்றம், மின்னல் வேகம், நம்பமுடியாத சகிப்பு தன்மை மற்றும் முழுமையான தொகுப்பாக இருக்கும் என்று டீஸர்கள் இக்கருவி மீதான ஆர்வத்தை பெருமளவில் தூண்டிவிட்டுள்ளது. அப்படியான சியோமி ரெட்மீ நோட் 4 கருவியின் விலை, அம்சங்கள் மற்றும் வெளியீட்டு தேதி ஆகிய விவரங்களை கொண்ட தொகுப்பே இது.!

விலை, ரேம்

விலை, ரேம்

நினைவூட்டும் வண்ணம் சியோமி ரெட்மீ நோட் 4 கருவிக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சீனாவில் தொடங்கப்பட்டது. சுமார் ரூ.9,000/- என்ற விலைக்கு 2ஜிபி ரேம் / 16ஜிபி உள்ளடிக்கிய சேமிப்பு மாறுபாடு மற்றும் சுமார் ரூ.12,000/- என்ற விலைக்கு 3ஜிபி ரேம் / 64 ஜிபி உள்ளடக்க சேமிப்பு மாறுபாடு என இரண்டு வகைகளில் வெளியானது.

நிறங்கள், கைரேகை ஸ்கேனர்,

நிறங்கள், கைரேகை ஸ்கேனர்,

ரெட்மீ நோட் 4 கருவியின் விலை நிர்ணயம் ஆனது சீனாவில் விற்கப்பட்ட அதே விலைக்கு இந்தியாவிலும் எதிர்பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போன் ஆனது தங்கம், சாம்பல், மற்றும் வெள்ளி நிறங்கள் தொடங்கப்பட்டது மற்றும் பின்புறத்தில் ஒரு கைரேகை ஸ்கேனர் தாங்கியுள்ளது.

ஆண்ட்ராய்டு

ஆண்ட்ராய்டு

இரட்டை சிம் (மைக்ரோ + நானோ) ஆதரவு வழங்கும் இக்கருவி ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ சார்ந்த எம்ஐயூஐ (MIUI) 8 மூலம் இயக்கப்படுகிறது.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

ஒரு 5.5-அங்குல முழு எச்டி (1080x1920 பிக்சல்கள்) 2.5டி வளைந்த கண்ணாடி 401பிபிஐ பிக்சல் அடர்த்தி கொண்ட டிஸ்ப்ளேவும் கொண்டுள்ளது. மேலும் மாலி டி880, எம்பி 4 ஜிபியூ கொண்ட டீகா -கோர் மீடியா டெக் ஹெலியோ எக்ஸ்20 மூலம் இயக்கப்படுகிறது.

கேமிரா

கேமிரா

கேமிரா துறையை பொருத்தமட்டில் சியோமி ரெட்மீ நோட் 4 கருவியானது பிடிஏஎப் (PDAF), எப்/2.0 அப்பெர்ஷர், டூவல் டோன்டு எல்இடி பிளாஷ் கொண்ட ஒரு 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 85 டிகிரி லென்ஸ் கொண்ட 5 மெகாபிக்சல் அளவிலான முன்பக்க கேமிரா கொண்டுள்ளது.

ஹை-ப்ரிட் டூவல் சிம்

ஹை-ப்ரிட் டூவல் சிம்

இந்த ஸ்மார்ட்போன் ஹை-ப்ரிட் டூவல் சிம் ஆதரவை வழங்குகிறது அதாவது ஒரு கலப்பு இரட்டை சிம் அட்டை ஸ்லாட் உடன் மைக்ரோஎஸ்டி அட்டை (128ஜிபி வரை) ஒன்றையும் ஆதரிக்கிறது.

பேட்டரி

பேட்டரி

இக்கருவி ஸ்மார்ட்போன் ஒரு 4100எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. அளவீடுகளில் 151x76x8.35எம்எம் மற்றும் 175 கிராம் எடை கொண்டுள்ளது

கைரேகை ஸ்கேனர்

கைரேகை ஸ்கேனர்

தவிர இக்கருவியில் கைரேகை ஸ்கேனர், ஒரு அகச்சிவப்பு சென்சார் ஆகியவைகளும் அடக்கம். இணைப்பு விருப்பங்களை பொருத்தமட்டில் ஜிபிஆர்ஸ்/எட்ஜ், 4ஜி வோல்ட், ப்ளூடூத், ஜிபிஎஸ், மைக்ரோ-யுஎஸ்பி மற்றும் கிளோ நாஸ் ஆகியவைகள் அடங்கும்.

தயாராக இருங்கள்

தயாராக இருங்கள்

சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான சியோமி நிறுவனம் இந்தியாவில் ஜனவரி 19-ஆம் தேதியன்று அதன் ரெட்மீ நோட் 4 ஸ்மார்ட்போனை வெளியீடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

5100 எம்ஏஎச் பேட்டரி கொண்ட லெனோவா பி2 - விலை & அம்சங்கள் என்ன.?

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi Note 4 Teased as Flipkart Exclusive, Launch Set for January 19. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X