வெடித்துச்சிதறிய ரெட்மீ; வெடிப்பின் காரணத்தை ஒற்றுக்கொண்டது சியோமி.!
சமீபத்தில் ஆந்திர மாநிலத்தில் சூர்யகிரன் என்பவரது சியோமி ஸ்மார்ட்போன் வெடித்துசிதறியது இதனால் அவர் தொடை கருகியது, மேலும் பலத்த காயம் ஏற்ப்பட்டது.
இந்தியா மற்றும் சீனாவில் அதிக அளவு சியோமி ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தப்படுகின்றன, மேலும் இந்த ஆண்டு பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்தது சியோமி நிறுவனம். அந்த வரிசையில் சியோமி ரெட்மீ நோட் 4 மொபைல் இந்தியாவில் அதிகமாக விற்பனை செய்யப்பட்டது.

சமீபத்தில் ஆந்திர மாநிலத்தில் சூர்யகிரன் என்பவரது சியோமி ஸ்மார்ட்போன் வெடித்துசிதறியது இதனால் அவர் தொடை கருகியது, மேலும் பலத்த காயம் ஏற்ப்பட்டது.

சூர்யகிரன்:
ஆந்திரப் பிரதேச மாநிலம் கிழக்கு கோதாவரியைச் சேர்ந்தவர் சூர்யகிரன், இவர் 20நாட்களுக்கு முன்பு சியோமி ரெட்மீ நோட் 4 ஸ்மார்ட்போனை வாங்கியுள்ளார். இந்த மொபைல் வாங்கிய சில நாட்களிலேயே வெடித்துச் சிதறியது சியோமி ஸ்மார்ட்போன்.

தொடை கருகியது:
சூர்யகிரன் சியோமி ரெட்மீ நோட் 4 ஸ்மார்ட்போனை பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்தபோது தீடிரென வெடித்துச்சிதறியதுஇதனால் அவரது தொடை கருகியது, மேலும் பலத்த காயம் ஏற்ப்பட்டது.

சியோமி நிறுவனம்:
சியோமி ரெட்மீ நோட் 4 ஸ்மார்ட்போன் வெடித்ததை அடுத்து, சியோமி நிறுவனம் அந்த இளைஞரை தொடர்புகொண்டுவெடித்துச்சிதறிய ஸ்மார்ட்போனை பெற்று ஆய்வு மேற்க்கொண்டது.

அழுத்தம்:
சியோமி நிறுவனம் ஆய்வு மேற்க்கொண்டு கூறிய காரணம், அதிகப்படியான அழுத்தம் தரப்பட்டதால் இந்த ஸ்மார்ட்போன்வெடித்திருக்கலாம் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. இதனால் பேட்டரியும் திரையும் சேதமடைந்துள்ளது என சியோமி
நிறுவனம் தெரிவித்துள்ளது.

இழப்பீட்டுத் தொகை:
சூர்யகிரன் வெடித்துசிதறிய ஸ்மார்ட்போனுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்குமாறு நீதிமன்றத்திற்குசெல்ல இறுப்பதாக தெரிவித்தார்.

ஸ்மார்ட்போன்:
ஸ்மார்ட்போனில் அதிக அழுத்தம் ஏற்படாத வண்ணம் பயன்படுத்த வேண்டும் என சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








