சியோமியின் அடுத்த அதிரடி 'சியோமி ரெட்மி 4' மேட் ப்ளாக்-இந்தியாவில் இன்று முதல்.!

இந்தியாவில் இன்று முதல் தனது விற்பனையை துவக்குகிறது சியோமி ரெட்மி 4-மேட் ப்ளாக்.

By Ilamparidi
|

தற்போது நடைபெற்று வரும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் மாநாட்டில் அனைத்து ஸ்மார்ட்போன் தாயாரிப்பு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்குகாக பல புதிய அம்சங்கள் சேர்த்து தமது தாயாரிப்புகளை வெளியிட்டும்,அறிமுகப்படுத்தியுள்ள வருகின்றன.அத்தகைய சூழலில்,சியோமி நிறுவனம் தனது தயாரிப்பான சியோமி ரெட்மி 4 மேட் ப்ளாக் வகை இன்று முதல் இந்தியாவில் விற்பனைக்கு வருமென அறிவித்துள்ளது.

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி நேற்றைய எம்டபுள்யூசி நிகழ்வில் சியோமி எட்மி 4எக்ஸ் எனும் புதிய தயாரிப்பினை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சியோமி ரெட்மி 4:

சியோமி ரெட்மி 4:

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி இந்த ஆண்டின் துவக்கத்தில் அதாவது ஜனவரி மாதத்தில் தனது தயாரிப்பான சியோமி ரெட்மி 4யை வெளியிட்டிருந்தது.
வாடிக்கையாளர்களிடத்திலேயும்,ஸ்மார்ட்போன் பயனாளர்கள் மத்தியிலும் வரவேற்பினையும்,விமர்சன ரீதியாக நன்மதிப்பினையும் பெற்றிருந்தது.

அம்சங்கள்:

அம்சங்கள்:

சியோமி ரெட்மி 4 ஸ்மார்ட்போன் ஆனது மெட்டல் யுனிபாடி,5.5 இன்ச் எச் டி டிஸ்பிளே ஸ்னாப்ட்ராகன் 625 எஸ்ஓசி ப்ரோசஸர்,சென்ஸாருடன் 13 எம்பி மெயின் கேமரா,சென்ஸாருடன் கூடிய 5 எம்பி முன்புற கேமரா,இரண்டு எல்இடி பிளாஷ் லைட்ஸ்,எம்ஐயுஐ ஆண்ட்ராய்டு 6 மார்ஷ்மல்லோவ்,கைரேகை சென்ஸார்,வோல்ட்,4100 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல அம்சங்களைப் பெற்றுள்ளது.

அமோக வரவேற்பு-அதிகப்படியான விற்பனை:

அமோக வரவேற்பு-அதிகப்படியான விற்பனை:

சியோமி நிறுவனத்தின் கூற்றுப்படி சியோமி ரெட்மி நோட் 4 விற்பனைக்கு வந்தபோது,இனிதிய சந்தையில் அதன் முந்தைய மாடல்களான ரெட்மி 3எஸ்,ரெட்மி நோட் 3 ஆகியனவற்றினை விட முறையே மூன்று மற்றும் ஐந்து மடங்கு அதிகமான விற்பனையானது.ஆகையால் சியோமி நிறுவனம் வெவ்வேறு நிறங்களில் புதுப்புது அம்சங்களுடன் மீண்டும் களமிறங்குகிறது தனது சியோமி ரெட்மி நோட் 4யை.

மூன்று வகையாக:

மூன்று வகையாக:

தற்போது சியோமி நோட் 4 ஆனது,2 ஜிபி ரேம்-32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடைய மொபைல் ரூபாய் 9,999க்கும்,3 ஜிபி ரேம்-32 ஜி பி இன்டெர்னல் ஸ்ட்ரோரேஜ் உடைய மொபைல் ரூபாய் 10,999க்கும் மற்றும் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மொபைல் ரூபாய் 12,999க்கும் விற்பனைக்கு வருகிறது.

நிறங்கள்:

நிறங்கள்:

நிறங்களைப் பொறுத்தமட்டில் சியோமி ரெட்மி நோட் 4 ஆனது கோல்டு,கிரே,சில்வர் ஆகிய நிறங்களுடன் இன்று முதல் மேட் ப்ளாக் நிறத்திலும் விற்பனையாக உள்ளது.சியோமி ரெட்மி நோட் 4 பிளிப்கார்ட் மற்றும் மி.கம் ஆகிய வலைத்தளங்களில் விற்பனையாக உள்ளது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

அறிமுகம் : 3ஜிபி ரேம், 4100எம்ஏஎச் கொண்ட சியோமி ரெட்மீ 4எக்ஸ்.!

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi Note 4 Matte Black Colour Variant to Go on Sale in India Today.Read more about this in Tamil Gizbot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X