Home
News

சியோமி ரெட்மீ நோட் 4 : வெளியீடு தேதி, விலை, அம்சங்கள்.!

மிகவும் வியப்பிற்குள்ளாக்கும் மெட்டல் பாடி, டீகா-கோர் எஸ்ஓசி போன்றவைகள் மட்டுமின்றி இக்கருவியில் பல சிறப்பம்சங்கள் உள்ளன.

By Muthuraj

சியோமி நிறுவனம் ஜனவரி 19-ஆம் தேதியன்று புது தில்லியில் நிகழும் ஒரு தொடக்க நிகழ்விற்கான அழைப்பிதழ்களை அனுப்ப தொடங்கியுள்ளது. இந்த விழாவில் சியோமி நிறுவனம் மிகவும் எதிர்பார்க்கப்படும் அதன் ரெட்மீ நோட் 4 கருவியை இந்தியாவில் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மிகவும் வியப்பிற்குள்ளாக்கும் மெட்டல் பாடி, டீகா-கோர் எஸ்ஓசி போன்றவைகள் மட்டுமின்றி இக்கருவியில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. அப்படியான சியோமி ரெட்மீ நோட் 4 கருவியின் இந்திய வெளியீடு தேதி என்ன மற்றும் இக்கருவியின் விலை, அம்சங்கள் என்னென்ன என்பதை பற்றிய விவரமான தொகுப்பே இது.!

விலை, ரேம்

விலை, ரேம்

நினைவூட்டும் வண்ணம் சியோமி ரெட்மீ நோட் 4 கருவிக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சீனாவில் தொடங்கப்பட்டது. சுமார் ரூ.9,000/- என்ற விலைக்கு 2ஜிபி ரேம் / 16ஜிபி உள்ளடிக்கிய சேமிப்பு மாறுபாடு மற்றும் சுமார் ரூ.12,000/- என்ற விலைக்கு 3ஜிபி ரேம் / 64 ஜிபி உள்ளடக்க சேமிப்பு மாறுபாடு என இரண்டு வகைகளில் வெளியானது.

நிறங்கள், கைரேகை ஸ்கேனர்,

நிறங்கள், கைரேகை ஸ்கேனர்,

ரெட்மீ நோட் 4 கருவியின் விலை நிர்ணயம் ஆனது சீனாவில் விற்கப்பட்ட அதே விலைக்கு இந்தியாவிலும் எதிர்பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போன் ஆனது தங்கம், சாம்பல், மற்றும் வெள்ளி நிறங்கள் தொடங்கப்பட்டது மற்றும் பின்புறத்தில் ஒரு கைரேகை ஸ்கேனர் தாங்கியுள்ளது.

ஆண்ட்ராய்டு

ஆண்ட்ராய்டு

இரட்டை சிம் (மைக்ரோ + நானோ) ஆதரவு வழங்கும் இக்கருவி ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ சார்ந்த எம்ஐயூஐ (MIUI) 8 மூலம் இயக்கப்படுகிறது.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

ஒரு 5.5-அங்குல முழு எச்டி (1080x1920 பிக்சல்கள்) 2.5டி வளைந்த கண்ணாடி 401பிபிஐ பிக்சல் அடர்த்தி கொண்ட டிஸ்ப்ளேவும் கொண்டுள்ளது. மேலும் மாலி டி880, எம்பி 4 ஜிபியூ கொண்ட டீகா -கோர் மீடியா டெக் ஹெலியோ எக்ஸ்20 மூலம் இயக்கப்படுகிறது.

கேமிரா

கேமிரா

கேமிரா துறையை பொருத்தமட்டில் சியோமி ரெட்மீ நோட் 4 கருவியானது பிடிஏஎப் (PDAF), எப்/2.0 அப்பெர்ஷர், டூவல் டோன்டு எல்இடி பிளாஷ் கொண்ட ஒரு 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 85 டிகிரி லென்ஸ் கொண்ட 5 மெகாபிக்சல் அளவிலான முன்பக்க கேமிரா கொண்டுள்ளது.

ஹை-ப்ரிட் டூவல் சிம்

ஹை-ப்ரிட் டூவல் சிம்

இந்த ஸ்மார்ட்போன் ஹை-ப்ரிட் டூவல் சிம் ஆதரவை வழங்குகிறது அதாவது ஒரு கலப்பு இரட்டை சிம் அட்டை ஸ்லாட் உடன் மைக்ரோஎஸ்டி அட்டை (128ஜிபி வரை) ஒன்றையும் ஆதரிக்கிறது.

பேட்டரி

பேட்டரி

இக்கருவி ஸ்மார்ட்போன் ஒரு 4100எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. அளவீடுகளில் 151x76x8.35எம்எம் மற்றும் 175 கிராம் எடை கொண்டுள்ளது

கைரேகை ஸ்கேனர்

கைரேகை ஸ்கேனர்

தவிர இக்கருவியில் கைரேகை ஸ்கேனர், ஒரு அகச்சிவப்பு சென்சார் ஆகியவைகளும் அடக்கம். இணைப்பு விருப்பங்களை பொருத்தமட்டில் ஜிபிஆர்ஸ்/எட்ஜ், 4ஜி வோல்ட், ப்ளூடூத், ஜிபிஎஸ், மைக்ரோ-யுஎஸ்பி மற்றும் கிளோ நாஸ் ஆகியவைகள் அடங்கும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

பட்ஜெட் வாசிகளுக்கான, டூயல் கேமிரா கொண்ட பிளேட் வி8 (அம்சங்கள்).!

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi Note 4 India Launch Expected on January 19. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X