Home
News

நம்பமுடியாத விலைகுறைப்பில் விற்பனைக்குவரும் சியோமி ரெட்மி நோட் 4.!

இரட்டை சிம் (மைக்ரோ + நானோ) ஆதரவு வழங்கும் இக்கருவி ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ சார்ந்த எம்ஐயூஐ (MIUI) 8 மூலம் இயக்கப்படுகிறது.

By Prakash

சியோமி நிறுவனம் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி சியோமி ரெட்மி நோட் 4 என்ற ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பை அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பொறுத்தவரை பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. விலைக்குறைக்கப்பட்ட ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன் மாடலை பிளிப்கார்ட் மற்றும் அமேசான் வலைதளம் மூலம்
பெறமுடியும்.

சியோமி ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் கைரேகை சென்சார் வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அட்டகாசமான சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலைகுறைப்பு:

விலைகுறைப்பு:

சியோமி ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.12,999-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.2000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.10,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ

ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ

இரட்டை சிம் (மைக்ரோ + நானோ) ஆதரவு வழங்கும் இக்கருவி ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ சார்ந்த எம்ஐயூஐ (MIUI) 8 மூலம் இயக்கப்படுகிறது.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

ஒரு 5.5-அங்குல முழு எச்டி (1080x1920 பிக்சல்கள்) 2.5டி வளைந்த கண்ணாடி 401பிபிஐ பிக்சல் அடர்த்தி கொண்ட டிஸ்ப்ளேவும் கொண்டுள்ளது. மேலும் மாலி டி880, எம்பி 4 ஜிபியூ கொண்ட டீகா -கோர் மீடியா டெக் ஹெலியோ எக்ஸ்20 மூலம் இயக்கப்படுகிறது.

நீங்கள் ஆன்லைனில் வாங்குவது திருடப்பட்ட கருவியா..? Simple tips
கேமரா

கேமரா

கேமரா துறையை பொருத்தமட்டில் சியோமி ரெட்மீ நோட் 4 கருவியானது பிடிஏஎப் (PDAF), எப்/2.0 அப்பெர்ஷர், டூவல் டோன்டு எல்இடி பிளாஷ் கொண்ட ஒரு 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 85 டிகிரி லென்ஸ் கொண்ட 5 மெகாபிக்சல் அளவிலான முன்பக்க கேமரா கொண்டுள்ளது.

ஹை-ப்ரிட் டூவல் சிம்

ஹை-ப்ரிட் டூவல் சிம்

இந்த ஸ்மார்ட்போன் ஹை-ப்ரிட் டூவல் சிம் ஆதரவை வழங்குகிறது அதாவது ஒரு கலப்பு இரட்டை சிம் அட்டை ஸ்லாட் உடன் மைக்ரோஎஸ்டி அட்டை (128ஜிபி வரை) ஒன்றையும் ஆதரிக்கிறது.

 பேட்டரி

பேட்டரி

இக்கருவி ஸ்மார்ட்போன் ஒரு 4100எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. அளவீடுகளில் 151x76x8.35எம்எம் மற்றும் 175 கிராம் எடை கொண்டுள்ளது.

கைரேகை ஸ்கேனர்

கைரேகை ஸ்கேனர்

தவிர இக்கருவியில் கைரேகை ஸ்கேனர், ஒரு அகச்சிவப்பு சென்சார் ஆகியவைகளும் அடக்கம். இணைப்பு விருப்பங்களை பொருத்தமட்டில் ஜிபிஆர்ஸ்/எட்ஜ், 4ஜி வோல்ட், ப்ளூடூத், ஜிபிஎஸ், மைக்ரோ-யுஎஸ்பி மற்றும் கிளோ நாஸ் ஆகியவைகள் அடங்கும்.

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi Note 4 gets Rs 2000 price cut available at Rs 10999 ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X