ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போன் விற்பனை தொடக்கம்: விலை மற்றும் சலுகைகள் இதோ!
ரெட்மி நோட் 11 எஸ் ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை இன்று நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு விற்பனை தொடங்கியது. ரெட்மி சாதனத்தின் மிகவும் பிரபலமான நோட் பிரிவில் இருந்து இந்த புதிய ஸ்மார்ட்போன் எம்ஐ.காம் மற்றும் அமேசான் மூலம் விற்பனைக்கு வருகிறது. ரெட்மி நோட் 11 எஸ் ஸ்மார்ட்போன் சமீபத்தில் இந்தியாவில் ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 90 ஹெர்ட்ஸ் AMOLED டிஸ்ப்ளே, 108 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்ட குவாட் ரியர் கேமரா அமைப்பு மற்றும் மீடியாடெக் ஹீலியோ ஜி96 சிப்செட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

ரெட்மி நோட் 11 எஸ்: விலை
ரெட்மி நோட் 11 எஸ் இந்தியாவில் மூன்று வகைகளில் கிடைக்கிறது. 6 ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போனின் அடிப்படை மாறுபாடு இந்தியாவில் ரூ.16,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்டின் விலை ரூ.17,499 என இருக்கிறது. அதேபோல் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு கொண்ட உயர்நிலை மாடலின் விலை ரூ.18,499 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஹரிஜான் ப்ளூ, போலார் வைட் மற்றும் ஸ்பேஸ் ப்ளாக் ஆகிய நிறங்களில் கிடைக்கும். இன்று மதியம் 12 மணிக்கு ஷவோமியின் அதிகாரப்பூர்வ இணையதளம், அமேசான், எம்ஐ ஹோம் ஸ்டோர்ஸ், எம்ஐ ஸ்டூடியோஸ் மற்றும் நாடு முழுவதும் உள்ள முக்கிய சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் கிடைக்கும்.

ரெட்மி நோட் 11 எஸ்: சலுகைகள்
சியோமி மற்றும் அமேசான் இணையதளங்கள் மூலம் ரெட்மி நோட் 11 எஸ் ஸ்மார்ட்போன்களை வாங்கும் போது வாடிக்கையாளர்கள் பேங்க் ஆஃப் பரோடா வங்கி அட்டைகள் மற்றும் EMI பரிவர்த்தனைகள் ரூ.1,000 வரை உடனடி தள்ளுபடியைப் வழங்கப்படுகிறது. பல்வேறு சில்லறை விற்பனை தளங்களில் கட்டணமில்லா இஎம்ஐ விருப்பங்கள் மற்றும் பரிமாற்றச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. எம்ஐ எக்ஸ்சேஞ்ச் மூலம் செய்யப்படும் எக்ஸ்சேஞ்ச்களுக்கு சிறந்த தள்ளுபடி கிடைக்கும். செஸ்ட் மணி மூலம் ஸ்மார்ட்போனுக்கு பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,000 கேஷ்பேக் கிடைக்கும்.

ரெட்மி நோட் 11 எஸ்: அம்சங்கள்
ரெட்மி நோட் 11 எஸ் ஸ்மார்ட்போனானது முழு எச்டி ப்ளஸ் தெளிவுத்திறனுடன் வருகிறது. இது 6.43-இன்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளே மற்றும் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது. சாதனம் மீடியாடெக் ஹீலியோ ஜி96 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இது 8 ஜிபி வரை ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பகத்துடன் இயங்குகிறது. இந்த சாதனம் விர்ச்சுவல் ரேம் விரிவாக்க அம்சத்துடன் வருகிறது. ரெட்மி ஆனது 5,000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் சாதனத்துடன் வருகிறது. சாதனம் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான எம்ஐயூஐ 13 இல் இயங்குகிறது.

நான்கு பின்புற கேமராக்கள்
நோட் 11எஸ் நான்கு பின்புற கேமராக்களைக் கொண்டுள்ளது. இந்த குவாட் கேமரா அமைப்பின் மிகப்பெரிய ஈர்ப்பு 108 எம்பி முதன்மை கேமரா ஆகும். இரண்டாவது 8 எம்பி அல்ட்ரா வைட் ஸ்னாப்பர், 2 எம்பி மேக்ரோ ஷூட்டர் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் ஆகியவற்றுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 16 எம்பி செல்ஃபி கேமராவும் உள்ளது. ஐபி53 மதிப்பிடப்பட்ட சாதனத்தில் 3.5எம்எம் ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் ஒரு ஐஆர் பிளாஸ்டர் உள்ளது. ரெட்மி நிறுவனத்தின் அனைத்து ஸ்மார்ட்போன்களும் பெரும்பாலான வரவேற்பை பெற்று வருகின்றன. ரெட்மி நோட் தொடரின் கீழ் இந்தியாவில் இதுவரை 66 மில்லியனுக்கும் அதிகமான சாதனங்களை விற்பனை செய்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. ரெட்மி நோட் 11 எஸ் ஸ்மார்ட்போனுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியல் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications