ரெட்மி நோட் 10 எப்போது அறிமுகம் தெரியுமா?- மிரட்டலான அம்சங்கள்: விலை என்ன தெரியுமா?
Redmi Note 10 ஸ்மார்ட்போன் எதிர்பார்க்கப்படும் நாளைவிட விரைவில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் மற்றும் விலை குரித்து பார்க்கலாம்.

ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன்
ரெட்மி நோட் 10 குறிப்பிடப்பட்ட நாட்களை விட விரைவில் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. சியோமி நிறுவனம் இந்த மாத இறுதியில் ரெட்மி நோட் தொடரை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த தொடரின் கீழ் ரெட்மி நோட் 10, ரெட்மி நோட் 10 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் ஆகியவை வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

ரெட்மி நோட் 10 குறித்த தகவல்
ரெட்மி நோட் 10 குறித்த தகவல் தொடர்ந்து வெளியான வண்ணம் உள்ளது. ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் இந்தியாவில் எப்போது அறிமுகமாகும், விலை என்ன என்பது குறித்த தகவல்களை பார்க்கலாம். ரெட்மி நோட் 10 பிப்ரவரி மாத இறுதியில் அறிமுகமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தர நிர்ணய சான்றிதழ்
இந்த ஸ்மார்ட்போன் பிஐஎஸ் இந்திய தர நிர்ணய சான்றிதழ் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இது ரெட்மி நோட் 10 எதிர்பார்க்கப்பட்ட நாளை விட விரைவில் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி இதுவரை இந்த ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதியை உறுதிப்படுத்தவில்லை.

இந்தியாவில் ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் விலை குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் சுமார் ரூ.10,000 விலையில் அறிமுகம் செய்யப்படும் என வதந்திகள் வெளியாகியுள்ளன. ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனின் அடிப்படை விலை குறித்து பார்க்கையில் இதன் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு விலை ரூ.11,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

5ஜி ஆதரவோடு வெளியாகும் என தகவல்
ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனை விட ரெட்மி நோட் 10 ப்ரோ அதிக அம்சங்களோடு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்மி நோட் 10 அம்சங்கள் குறித்து பார்க்கையில், இது 5ஜி ஆதரவுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்மி நோட் 10 மாடல் 1080X2400 பிக்சல்கள் தீர்மானத்துடன் வரும் என கூறப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்
ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் 6.57 இன்ச் டிஸ்ப்ளே 8 ஜிபி ரேம் உடன் வரும் எனவும் மீடியா டெக் 720 5ஜி செயலி மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது. ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா கொண்டிருக்கும் எனவும் 4800 எம்ஏஎச் பேட்டரி 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வரும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications