Home
News

Redmi Note 10 and Redmi Note 10 Pro அறிமுகம் இந்த தேதியில் தான்.. அடுத்த மிரட்டலான போன் வாங்க ரெடியா?

சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வரும் மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று சில லீக் செய்திகளைக் கடந்த வாரத்திலிருந்து நாம் கேட்டுவருகிறோம். இப்போது, ரெட்மி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியச் சந்தையில் மார்ச் 10ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று நமபதன்மையான செய்திகள் வெளியாகியுள்ளது. இது பற்றிய கூடுதல் தகவலை பார்ப்போம்.

Redmi Note 10 and Redmi Note 10 Pro அறிமுகம் இந்த தேதியில் தான்..

ரெட்மி நோட் 10 சீரிஸ் வரிசையில் ரெட்மி நோட் 10 மற்றும் ரெட்மி நோட் 10 ப்ரோ ஆகிய இரண்டு மாடல்களை நாம் இந்திய சந்தையில் எதிர்பார்க்கலாம். இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கான டீஸர் விளம்பரம் இப்போது அமேசான் வலைத்தளத்தில் காணப்பட்டுள்ளது. இதில் மார்ச் 10ம் தேதி ரெட்மி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும் என்று இதில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று கிஸ்மோசீனா வலைத்தளம் தெரிவித்துள்ளது.

ரெட்மி நோட் 10 சீரிஸ் அமேசான் இந்தியா, Mi.com மற்றும் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் Mi ஸ்டோர்களில் பிரத்தியேகமாக அறிமுகப்படுத்தப்படும். புதிய ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வகைகளில் வரும். அதேபோல், ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆகிய மூன்று வகைகளில் வர உள்ளது.

ரெட்மி நோட் 10 க்ரெய், வைட் மற்றும் க்ரீன் வண்ண விருப்பங்களில் வரும், ரெட்மி நோட் 10 ப்ரோ மாடல் பிரான்ஸ், ப்ளூ மற்றும் க்ரேய் வண்ணங்களில் வரும். இதன் சில முக்கிய சிறப்பம்சங்களாக ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 732 ஜி சிப்செட் உடன் 5,050 எம்ஏஎச் பேட்டரியை கொண்டிருக்கும். இது ஆண்ட்ராய்டு 11 மேல் MIUI 12 இயங்கும் இயங்குதளத்துடன் வரும்.

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi Note 10 series May Be Launch On March 10th In India : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X