108 எம்பி கேமராவோடு அறிமுகமாகிறதா ரெட்மி நோட் 10?- இதோ விவரங்கள்!
சியோமி நிறுவனம் தங்களது புதிய மாடலான ரெட்மி கே30 சீரிஸ் மற்றும் ரெட்மி நோட் 10 புதிய மாடலை சீன சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரெட்மி நோட் 10 ஐரோப்பிய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட எம்ஐ 10டி லைட் ஸ்மார்ட்போனின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாகும்.

ரெட்மி நோட்10
இந்திய ஸ்மார்ட்போன்கள் சந்தையை ஆக்கிரமித்த நிறுவனங்களில் முதன்மையானவை சியோமி. இந்த ஸ்மார்ட்போன் குறித்த தகவல் விப்ஸ்டர் முன்னதாகவே வெளியிட்டது. ரெட்மி நோட்10 தொடர் புதிய குவால்காம் ஸ்னாப்டிராகன் அம்சம் மூலம் ஸ்மார்ட்போன் இயக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சாதனம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட்மி நோட் 10: எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்
ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனை சியோமி விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு நடுவில் இந்த ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் சில கசிந்துள்ளது. அதுகுறித்து பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போனானது புதிய குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 சிப்செட்டைக் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கின்றன. லீக்கான தகவல் உண்மையெனில் இந்த சிப்செட் மூலம் இயக்கப்படும் முதல் சியோமி ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 10 என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை
ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் வெளியீடு அல்லது அம்சங்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் சில கசிவுத் தகவலின்படி, மாடல் எண் M2007J17C உடன் MI10T ரெட்மி நோட் 10 ஆக சீனாவிற்கு வரும் என கூறப்படுகிறது.

108 எம்.பி கேமரா
ரெட்மி நோட் 10 108 எம்.பி கேமரா சென்சாருடன் வரும் முதல் ரெட்மி ஸ்மார்ட்போன் ஆகும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 5 ஜி அம்சத்தை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

4,820 எம்ஏஎச் பேட்டரி
இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4,820 எம்ஏஎச் பேட்டரியுடன் வரும் என்று கூறப்படுகிறது. அதோடு இந்த சாதனத்தின் கேமரா மற்றும் காட்சி குறித்து எந்த தகவலும் இல்லை.

ரெட்மி நோட் 10 எப்போது அறிமுகம்
இந்தியாவிலும் சீனாவிலும் ரெட்மி நோட் 10 எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்து சியோமி எந்த தகவலையும் வெளியிடவில்லை. இருப்பினும் குறிப்பிட்ட சாதனங்கள் அக்டோபரில் வெளியாகும் என கூறப்படுகிறது. விரைவில் இந்த சாதனம் குறித்த தகவல்கள் வெளியாகும் எனவும் இதன் அறிமுகத் தேதி மற்றும் அம்சங்கள் அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications