Home
News

அறிமுகத்திற்கு முன்பே அமேசான் பட்டியலில் வந்தது ரெட்மி 9:எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் அம்சங்கள்

சியோமி ரெட்மி 9 அமேசான் இந்திய வலைத்தள பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

அமேசான் இந்தியா வலைதளத்தில் ரெட்மி 9

அமேசான் இந்தியா வலைதளத்தில் ரெட்மி 9

ரெட்மி 9 அமேசான் இந்தியா வலைதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 27 ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ள நிலையில் இந்த ஸ்மார்ட்போன் அமேசான் இந்திய வலைதள பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 27 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்படும் என சியோமி கடந்த வாரம் அறிவித்தது.

கவுண்டவுன் டைமருடன் நிகழ்வு பக்கம் புதுப்பிப்பு

கவுண்டவுன் டைமருடன் நிகழ்வு பக்கம் புதுப்பிப்பு

மேலும் புதிய தகவல்களை ரெட்மி இந்தியா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. சியோமி இந்திய நிகழ்வு நேரத்தை குறிப்பிட்டு கவுண்டவுன் டைமருடன் நிகழ்வு பக்கத்தை புதுப்பித்துள்ளது.

ரெட்மி 9 ஸ்மார்ட்போன் குறித்து கூடுதல் விவரங்கள்

ரெட்மி 9 ஸ்மார்ட்போன் குறித்து கூடுதல் விவரங்கள்

சியோமி நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கும் ரெட்மி 9 ஸ்மார்ட்போன் குறித்து கூடுதல் விவரங்கள் எதவும் கிடைக்கவில்லை. அதேபோல் ரெட்மி 9 ப்ரைம் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. அதேபோல் ரெட்மி 9ஏ மற்றும் ரெட்மி 9 சி மாடலை நிறுவனம் மலேசியாவில் ஜூன் மாதம் அறிமுகம் செய்தது. நேற்று(புதன் கிழமை) சியோமி இந்திய தலைவர் ரெட்மி 9 அறிமுகம் குறித்து டுவீட் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

ரெட்மி 9 ஏ ரெட்மி 9சி மாடல்

ரெட்மி 9 ஏ ரெட்மி 9சி மாடல்

ரெட்மி 9 மாடல் ரெட்மி 9 ஏ ரெட்மி 9சி மாடலின் மறுபெயரிட்ட பதிப்பாக இருக்கலாம் என கருதப்படுவதால் அதன் அம்சங்களை சற்று ஆராய்ந்து பார்க்கலாம். இந்த இரண்டு மாடல்களும் மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. ரெட்மி 9 ஏ 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு வசதியோடு தோராயமாக இந்திய விலைப்படி ரூ.6,300-க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனானது மிட்நைட் க்ரே, மயில் பச்சை போன்ற வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டது.

2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு வசதி

2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு வசதி

இதன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக ரெட்மி 9 கருதப்பட்டாலும் இந்திய அறிமுகத்திற்கு முன்பு இதன் ரேம் மற்றும் சேமிப்பு வசதி ஜிபியை அதிகரிக்கலாம். அதேபோல் ரெட்மி 9சி 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு வசதி தோராயமாக ரூ.7500-க்கு விலை நிர்ணயிக்கப்பட்டது.

6.53 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே

6.53 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே

ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான MIUI 11, 6.53 இன்ச் எச்டி + (720x1,600 பிக்சல்கள்) டிஸ்ப்ளே மற்றும் இரட்டை சிம் ஆதரவுடன் இருக்கிறது. அதேபோல் ரெட்மி 9 சி மீடியா டெக் ஹீலியோ ஜி35 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. ரெட்மி 9 ஏ மீடியா டெக் ஹீலியோ ஜி 25 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

பின்புறத்தில் இரண்டு கேமரா

பின்புறத்தில் இரண்டு கேமரா

ரெட்மி 9 சி பின்புறத்தில் இரண்டு கேமராக்களும் ரெட்மி 9 ஏ ஒரு கேமராவையும் கொண்டுள்ளது. இரண்டு தொலைபேசிகளிலும் 5 மெகாபிக்சல் செல்பி கேமராவை கொண்டுள்ளது. மேலும் ஸ்மார்ட்போனில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மற்றும் 5,000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி உள்ளது. எப்படி பார்த்தாலம் ரெட்மி 9 இந்தியாவில் ரூ.10,000 பிரிவில் அறிமுகம் செய்யப்படலாம்.

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi 9 Listed on Amazon india Here the Expected Price and Specs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X