இந்தியாவில் இன்று முதல் -'சியோமி ரெட்மி 4ஏ'.!
ஸ்மார்ட்போன் தாயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான சியோமி தனது புதிய தயாரிப்பான ரெட்மி 4ஏ வினை இந்தியாவில் இன்று முதல் களமிறக்குகிறது.
பல்வேறு புதிய அம்சங்களை உள்ளடக்கிய தனது தாயாரிப்புகளாலும்,மலிவான விலையுள்ள தயாரிப்புகளை வெளியிடுவதானாலும் ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் மத்தியில் தனக்கென தனியானதோர் இடத்தினைக் கொண்டுள்ள சியோமி நிறுவனம் தனது,புதிய தயாரிப்பான சியோமி ரெட்மி 4ஏ வினை இன்று முதல் இந்தியாவில் வெளியிடவுள்ளது.
அந்நிறுவனத்தின்,இத்தகைய அதிகாரப்பூர்வமான அறிவிப்பானது அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதன் புதிய ஸ்மார்ட்போன் குறித்த ஆர்வத்தினை அதிகப்படுத்தியுள்ளது.
சியோமி ரெட்மி 4ஏ எப்போது வெளியிடப்படுகிறது,அதுகொண்டுள்ள அம்சங்கள் மற்றும் விலை உள்ளிட்ட மேலதிக தகவல்கள் கீழே..

சியோமி:
கடந்த 2010 ஆம் ஆண்டு சீனாவில் பீஜிங்கினை தலைமையிடமாகக் கொண்டு துவங்கப்பட்ட சியோமி நிறுவனம்,ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் பாராட்டக்கூடிய அளவில் தனது தாயாரிப்புகளை வெளியிட்டு வருகிறது.இந்நிறுவனம்,உலகின் 4வது மிகப்பெரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமாகும்.இது ஸ்மார்ட்போன்கள் மட்டுமன்றி ஸ்மார்ட்போன் செயலிகள்,மடிக்கணினிகள் உள்ளிட்டவற்றையும் தயாரித்து வெளியிட்டுவருகின்றது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

சியோமி ரெட்மி 4ஏ:
அத்தகைய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி தனது புதிய தயாரிப்பான சியோமி ரெட்மி 4ஏ வினை இன்று முதல் இந்தியாவில் வெளியிடுகிறது.இந்திய நேரப்படி 12.30 அளவில் புதுதில்லியில் நடைபெறவுள்ள அந்நிறுவனத்தின் நிகழ்வில் வெளியிடப்படுகிறது.அமேசான் வலைத்தளம் வழியே பிரத்தியேகமாக வெளியிடப்படவுள்ளது.

அம்சங்கள்:
இன்று வெளியிடப்படவுள்ள சியோமி ரெட்மி 4ஏ கொண்டிருக்க கூடிய அம்சங்களாவன 5 இன்ச் ஹெச்டி டிஸ்பிளே,ஆக்டா கோர் குவால்கம் ஸ்னாப்ட்ராகன் 430 எஸ்ஓசி,2 ஜிபி ரேம்,16 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வசதி,4100 எம்ஏஎச் திறனுள்ள பேட்டரி,13 எம்பி மெயின் கேமரா,5 எம்பி முன்புற கேமரா ஆகியவற்றினைக்கொண்டும் ஸ்போர்ட்ஸ் ஏ வானது 5 இன்ச் டிஸ்பிளே,1.4 ஜிஎச்இசட் குவாட் கோர் ஸ்னாப்ட்ராகன் 425 எஸ்ஓசி,2 ஜிபி ரேம்,13 எம் பி மெயின் கேமரா,5 எம்பி முன்புற கேமரா,16 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்,3120 எம்ஏஎச் திறனுள்ள பேட்டரி உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது.

விலை:
சியோமி ரெட்மி 4 ஏ வினுடைய விலையானது ரூபாய் 5,900 இருக்க கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

அமேசான்:
சியோமி ரெட்மி 4ஏ வானது இந்திய நேரப்படி 12.30 அளவில் பிரத்யேகமாக அமேசான் வலைத்தளத்தில் வெளியிடப்படவுள்ளது.இந்த அறிவிப்பானது ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் மற்றும் ஆர்வலர்களிடத்தே அதிகப்படியான வரவேற்பினைப் பெற்றுள்ளது.

மேலும் படிக்க
2017 ரேஸில் முந்துவது எது? ஐபோன் 8 vs கேலக்ஸி S8 vs ஒன்ப்ளஸ் 5.


Click it and Unblock the Notifications
