அதிரடி விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் ரெட்மீ 4.!
இந்த ரெட்மீ 4 ஸ்மார்ட்போன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
சியோமி நிறுவனம் நேற்று அசத்தலான ரெட்மீ 5 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது, அதைத் தொடர்ந்து இப்போது ரெட்மீ 4 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பை அறிவித்துள்ளது, அதன்படி இந்த விலைகுறைப்பு ஆஃபரை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சியோமி ரெட்மீ 4 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக ஸ்னாப்டிராகன் 435 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு விலைகுறைக்கப்பட்ட இந்த அட்டகசமான ரெட்மீ 4 ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் மற்றும் மி.காம் வலைதளங்களில் வாங்க
முடியும்.

விலைகுறைப்பு:
சியோமி ரெட்மீ 4 (32ஜிபி) ஸ்மார்ட்போன் மாடலுக்கு தற்சமயம் ரூ.500-வரை வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.8,499-விலையில்
விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்மாடல்.

ரெட்மீ 4 :
ரெட்மீ 4 ஸ்மார்ட்போன் பொதுவாக 5-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 720பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் வெளிவந்துள்ளது.

ஆண்ட்ராய்டு ஓரியோ:
ரெட்மீ 4 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 435 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ரெட்மீ 4 ஸ்மார்ட்போன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

13எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் ; எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.


இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றஇணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். ரெட்மீ 4 ஸ்மார்ட்போனில் 4100எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications