ரூ.10,000 பட்ஜெட்டில் பட்டையை கிளப்பிய சியோமி : புதுக் கருவிகள் அறிமுகம்!
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமான சில காலகட்டத்தில் வேகமாக வளர்ந்த சீன நிறுவனம் தான் சியோமி. சில ஆண்டுகளுக்கு அறிமுகமானாலும் இந்திய வாடிக்கையாளர்களை நன்கு புரிந்து கொண்டு அதற்கேற்ற கருவிகளை வழங்கி இன்று ஆசியாவின் மிக முக்கிய ஸ்மார்ட்போன் நிறுவனமாக உயர்ந்திருக்கின்றது.
அந்த வகையில் கடந்த சில வாரங்களாக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சியோமி நிறுவனத்தின் ரெட்மி 3எஸ் கருவி இன்று இந்தியாவில் வெளியிடப்பட்டது. ரூ.10,000 பட்ஜெட்'இல் இரு கருவிகளை, வழக்கம் போல விலை உயர்ந்த அம்சங்களாலேயே நிரப்பியுள்ளது.

சியோமி ரெட்மி 3எஸ்
சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்ததைப் போல் சியோமி ரெட்மி 3எஸ் மற்றும் ரெட்மி 3எஸ் பிரைம் என இரு கருவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இவற்றின் விற்பனை அடுத்த வாரம் துவங்க இருக்கின்றது.

வடிவமைப்பு
ரெட்மி 2 கருவியின் அடுத்த மாடல் வடிவமைப்பு எம்ஐ4 மற்றும் ரெட்மி நோட் 3 கருவிகளைத் தழுவி வடிவமைக்கப்பட்டுள்ளது. 8.5 எம்எம் தட்டையாக, மெட்டல் வடிவமைப்பில் கருவி பார்க்க அழகாக இருக்கின்றது.

பேட்டரி
ரெட்மி 3எஸ் மற்றும் 3எஸ் பிரைம் கருவியில் ரெட்மி 2 கருவியை விட இரு மடங்கு அதிகமாக சுமார் 4100 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

பிராசஸர்
ரெட்மி 3எஸ் கருவியில் 1.1 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

மெமரி
ரெட்மி 3எஸ் கருவியில் 2 ஜிபி ரேம் 16ஜிபி இன்டர்னல் மெமரியும், 3எஸ் பிரைம் கருவியில் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் மெமரியும் வழங்கப்பட்டுள்ளது. இரு கருவிகளிலும் மெமரியை 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

திரை
சியோமி ரெட்மி 3எஸ் கருவியில் 5 இன்ச் எச்டி ஐபிஎஸ் திரை மற்றும் 720*1280 பிக்சல் ரெசல்யூஷன் வழங்கப்பட்டுள்ளது.

கேமரா
கேமராவை பொருத்த வரை 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், 5 எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது. மேலும் வெவ்வேறு வெளிச்சங்களிலும் சிறப்பான புகைப்படம் எடுக்க பல்வேறு கேமரா அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மென்பொருள்
ரெட்மி 3எஸ் கருவியில் MIUI 7 சார்ந்த ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் கருவியில் MIUI 8 விரைவில் வழங்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.

கனெக்டிவிட்டி
ரெட்மி 3எஸ் கருவியில் 4ஜி, வை-பை, ப்ளூடூத், ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதோடு ரெட்மி 3எஸ் பிரைம் கருவியில் மட்டும் கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது.

விலை
சியோமி ரெட்மி 3எஸ் விலை ரூ.6,999 மற்றும் சியோமி ரெட்மி 3எஸ் பிரைம் விலை ரூ.8,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஆகஸ்டு 9 ஆம் தேதி துவங்கும் என அந்நிறுவனத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications