ஜனவரி முதல் ரெட்மி 3.!!
சியோமி நிறுவனத்தி.ன் ரெட்மி 3 கருவியானது ஜனவரி மாதம் 12 ஆம் தேதி வெளியாகும் என அந்நிறுவனத்தின் விளம்பரத்தின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் விலையில் எதிர்பார்க்கப்படும் இந்த கருவியில் 5 இன்ச் டிஸ்ப்ளே உள்பட சில சிறப்பம்சங்கள் வழங்கப்படும் என கூறப்படுகின்றது. முன்னதாக ரெட்மி 1எஸ், 2 மற்றும் ரெட்மி 2 ப்ரைம் போன்ற கருவிகளில் 4.7 இன்ச் திரை மற்றும் ப்ளாஸ்டிக் வடிவமைப்பு கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

திரை
ரெட்மி 3 கருவியில் 5 இன்ச் திரை 720பி டிஎஃப்டி டிஸ்ப்ளே மற்றும் முழுமையான மெட்டல் வடிவமைப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகின்றது.

பிராசஸர்
சியோமி ரெட்மி 3 கருவியில் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ரோம் வழங்கப்பட்டுள்ளது. இதோடு மெமரியை நீட்டிக்க வசதியாக மைக்ரோ எஸ்டி ஸ்லாட் வழங்கப்படலாம்.

இயங்குதளம்
ரெட்மி 3 கருவியானது ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1.1 இயங்குதளம் மற்றும் எம்ஐயுஐ 7 வழங்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.

கேமரா
ரெட்மி 3 கருவியில் 13 எம்பி ப்ரைமரி கேமரா, ப்ளாஷ் மற்றும் 5 எம்பி செல்பீ கேமரா வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேட்டரி
4ஜி சேவை வழங்கப்பட்டுள்ளதால் முந்தைய கருவிகளை விட அதிக திறன் கொண்ட பேட்டரி வழங்கப்படலாம்.

விலை
மேற்கொண்ட சிறப்பம்சங்களை வைத்து பார்க்கும் போது இந்த கருவி இந்தியாவில் ரூ.7,000 பட்ஜெட்டில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முகநூல்
மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.


Click it and Unblock the Notifications
