Home
News

சீனாவில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி 3.!!

By Meganathan

சியோமி நிறுவனம் ரெட்மி 3 ஸ்மார்ட்போனினை சீனாவில் அறிமுகம் செய்திருக்கின்றது. இந்திய மதிப்பில் ரூ.7000க்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த கருவியின் விற்பனை நாளை முதல் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருவியின் இந்திய வெளியீடு குறித்து எவ்வித தகவலும் இல்லை.

சீனாவில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி 3.!!

சிறப்பம்சங்களை பொருத்த வரை இந்த கருவியில் 5 இன்ச் டிஸ்ப்ளே, 1.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 616 பிராசஸர், 2 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 16ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

சீனாவில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி 3.!!

கேமராவை பொருத்த வரை 13 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ் மற்றும் 5 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. செல்பீ கேமரா மூலம் ஃபுல்-எச்டி வீடியோ பதிவு செய்ய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. டூயல் சிம் ஸ்லாட் கொண்ட இந்த கருவியில் மைக்ரோ மற்றும் நானோ சிம் பொருத்த முடியும். கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை ப்ளூடூத், ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ், மைக்ரோ-யுஎஸ்பி, வை-பை வழங்கப்பட்டுள்ளன. மேலும் 4100 எம்ஏஎச் பேட்டரி மூலம் இந்த கருவி சக்தியூட்டப்படுகின்றது.

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi 3 announced with 5-inch display. Read More in Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X