Home
News

இந்தியாவில் விரைவில் எதிர்பார்க்கப்படும் சியோமி ரெட்மி 2

By Meganathan

சியோமி ஒரு வழியாக ரெட்மி2 ஸ்மார்ட்போனை வெளியிட்டது. ஜனவரி 9 முதல் சீனாவில் விற்பனையை துவங்கும் ரெட்மி 2 இந்தியாவில் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் இந்தியா மற்றும் இந்தோனேஷியாவில் விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

[இன்றைய தொழில்நுட்பங்கள் உருவாக காரணமாக அமைந்த முக்கிய கருவிகள்]

டூயல் சிம் கொண்ட சியோமி ரெட்மி 2, 4.7 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே எஹ்டி ரெசல்யூஷன் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சியோமி நிறுவனத்தின் சொந்த MIUI 6 கொண்டு ஆன்டிராய்டு 4.4 கிட்காட் மூலம் இயங்குகின்றது.

இந்தியாவில் விரைவில் எதிர்பார்க்கப்படும் சியோமி ரெட்மி 2

சியோமி ரெட்மி 2 64-பிட் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 410 பிராசஸர், 1 ஜிபி ராம் மற்றும் 306 GPU கொண்டுள்ளது. கேமரா அம்சங்களை பொருத்த வரை 8 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் முன்பக்க கேமராவும் இருக்கின்றது. ரெட்மி 1 எஸ் 1.6 எம்பி முன்பக்க கேமரா கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

[எஸ்எம்எஸ் மூலம் ரயில் பயனச்சீட்டு முன்பதிவு செய்வது எப்படி]

மெமரி திறனை பொருத்த வரை 8 ஜிபி இன்டெர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் உள்ளது. மேலும் இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனில் வைபை, ப்ளூடூத் மற்றும் ஜிபிஎஸ் வசதிகள் இருப்பதோடு 4ஜி LTE வசதியும் உள்ளது.

மஞ்சள், இளஞ்சிவப்பு, பச்சை, வெள்ளை மற்றும் கருப்பு என ஐந்து வித வண்னங்களில் கிடைக்கும் ரெட்மி 2, 2200 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi 2' will be available from Jan 9 in China and its release outside china remains as a suspense till now, but it can be expected to be made available in India shortly.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X