இந்தியாவில் சியோமி ரெட்மி 2 விலை குறைப்பு..!
சியோமி நிறுவனத்தின் ரெட்மி 2 மாடல் ஸ்மார்ட்போனின் விலை ரூ.1000 குறைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் வெள்ளை மற்றும் சாம்பல் நிறங்களில் கிடைக்கும் இந்த கருவி எம்.காம் மற்றும் ப்ளிப்கார்ட், அமேசான், ஸ்னாப்டீல் போன்ற இணையதளங்களிலும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை அந்நிறுவனம் தனது சமூக வலைதள பக்கங்களில் புகைப்படம் வாயிலாக தெரிவித்திருந்தது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்சமயம் ரூ.6,999க்கு கிடைக்கும் ரெட்மி 2 இந்த அறிவிப்பை தொடர்ந்து ரூ.5,999க்கு கிடைக்கும் என்பதோடு சியோமி நிறுவனம் ரெட்மி 2 ஏ கருவியை வெளியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. முன்னதாக சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 4ஜி, சியோமி எம்ஐ 4 (16 ஜிபி) போன்ற மாடல்களின் விலையை குறைத்திருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறப்பம்சங்களை பொருத்த வரை ரெட்மி 2 கருவியில் 4.7 இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே 1280*720 பிக்சல் ரெசல்யூஷன் 64-பிட் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 410 பிராசஸர் 1ஜிபி ரேம் மற்றும் அட்ரினோ 306 ஜிபியு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 4.4 கிட்காட், 8ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக மெமரியை நீட்டிக்கும் வசதி 8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமராவும் இருக்கின்றது.
ரெட்மி 2ஏ கருவியில் 4.7 இன்ச் எச்டி டிஸ்ப்ளே 1.5 ஜிகாஹெர்ட்ஸ் லீட்கோர் L1860C சிப்செட், குவாட்கோர் கார்டெக்ஸ் A7 CPU மற்றும் Mali T628MP2 GPU, 1ஜிபி ரேம், 8ஜிபி இன்டர்னல் மெமரி, 8எம்பி ப்ரைமரி கேமரா, 2எம்பி முன்பக்க கேமரா இருப்பதோடு 2200 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.


Click it and Unblock the Notifications