Home
News

ரூ.8000 விலைக்குள் சைலெண்டாக அறிமுகமான Xiaomi Redmi 12C! யார்லாம் வாங்கலாம்?

Xiaomi Redmi 12C இரண்டு நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக டீஸ் செய்யப்பட்ட பின்னர், இப்போது நிறுவனம் இந்த போனை சைலெண்டாக இந்தோனேசியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

பிராண்ட் இந்தோனேசியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் IDR 1,399,000 என்ற விலையில் இந்த ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்திய மதிப்பின் படி, இது ரூ. 7,500 என்ற விலையில் ஸ்மார்ட்போன் பட்டியலிட்டுள்ளது. இது டிசம்பரில் 2022 முதல் சீனாவில் ஏற்கனவே கிடைக்கும் என்பதால், சாதனத்தின் உலகளாவிய அறிமுகத்தை இது குறிக்கிறது.

ரூ.8000 விலைக்குள் சைலெண்டாக அறிமுகமான Xiaomi Redmi 12C!

Redmi 12C சிறப்பம்சம்.! என்ன ஸ்பெஷல்?

இப்போது இந்த ஸ்மார்ட்போன் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் இது இந்திவையும் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Redmi 12C பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே. Redmi 12C இந்தியாவில் மூன்று வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, அதாவது. 3 ஜிபி + 32 ஜிபி மாடல், 4 ஜிபி + 64 ஜிபி மாடல், மற்றும் 4 ஜிபி + 128 ஜிபி மாடல் உடன் வருகிறது. இது கிராஃபைட் கிரே அல்லது ஓஷன் ப்ளூ வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

இந்தோனேசியாவில் மார்ச் 10 ஆம் தேதி முதல் பல சேனல்களில் வழியாக இந்த சாதனம் விற்பனைக்கு வரும். Redmi 12C ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆகும். Redmi 12C இன் சாதனம் 6.71' இன்ச் டாட் டிராப் டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே ஆகும். இந்த பேனல் HD+ 1,650 x 720 பிக்சல்கள் கொண்ட திறனுடன் 20.6:9 விகிதம், 500nits பீக் பிரைட்னஸ், 1,500:1 உடன் டிஸ்பிளே வருகிறது.

இந்த ஸ்மார்ட்போன் 12nm ஆக்டா கோர் MediaTek Helio G85 சிப்செட் உடன் 3ஜிபி அல்லது 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி, 64ஜிபி மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் ஆதரிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ரேம் மற்றும் சேமிப்பகத்திற்காக LPDDR4X மற்றும் eMMC 5.1 தரநிலைகளைப் பயன்படுத்துகிறது. இது 1TB வரையிலான microSD கார்டுகளை ஆதரிக்கிறது.

ரூ.8000 விலைக்குள் சைலெண்டாக அறிமுகமான Xiaomi Redmi 12C!

Redmi 12C கேமரா அம்சம்.!

கேமரா பிரிவில், Redmi 12C பின்புறத்தில் 50MP பிரைமரி கேமரா சென்சாரை கொண்டுள்ளது. இரண்டாம் நிலை QVGA லென்ஸ் ஆழமான தகவலுக்காக முதன்மை லென்ஸுடன் உள்ளது. முன்பக்கத்தில், செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புக்காக 5MP கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமராக்கள் 30fps வேகத்தில் 1080p வரை வீடியோ பதிவு செய்யும் திறன் கொண்டவை.

Redmi 12C ஆனது Android 12 ஐ அடிப்படையாகக் கொண்ட MIUI 13 இடைமுகத்தை துவக்குகிறது. சமீபத்திய MIUI 14 உடன் இயங்குகிறது. இது 10W சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரி உடன் வருகிறது. இந்த சாதனம் அதன் பின்புற கைரேகை ஸ்கேனர், இரட்டை சிம் ஆதரவு, Wi-Fi, புளூடூத் 5.1, FM ரேடியோ, 3.5mm ஆடியோ ஜாக் மற்றும் பல அடங்கும்.

இந்த சாதனம் என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் சாதனம் என்பதனால், குறைந்த விலையில் பெஸ்டான ஸ்மார்ட்போனை வாங்க விரும்புவோர், இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம். இந்த சாதனம் பற்றி உங்களுடைய கருத்து என்ன என்பதை தெரியப்படுத்துங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi 12C launched silently under the price of Rs 8000
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X