Home
News

சொன்னா நம்பமாடீங்க.. இனி ரூ.8000 விலைக்கு 5G Mobile.. இந்திய ஸ்மார்ட்போன் சந்தையே மலிவா மாறப்போகுது..

இந்திய மக்களை குஷிப்படுத்தும் விதமாக ஒரு புதிய செய்தி வெளியாகியுள்ளது. இந்திய மக்கள் இன்னும் ஒரு சில மாதங்களில் வெறும் 8000 ரூபாய் செலவில் புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களை (5G smartphones under Rs 8000) இந்திய சந்தையில் இருந்து வாங்கி பயன்படுத்தலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆம் மக்களே, வெறும் ரூ. 8,000 விலையில் இருந்தே இனி 5ஜி (5G) நெட்வொர்க்குடன் இயங்கும் ஸ்மார்ட்போன்களை மக்கள் வாங்கி பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு குவால்காமின் (Qualcomm) புதிய பட்ஜெட் செக்மென்ட் சிப்செட் ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

சரி, எப்படி ரூ.8000 விலைக்கு புதிய 5ஜி போன் வாங்க கிடைக்கும்? இதில் என்னென்ன அம்சங்களை நாம் எதிர்பார்க்கலாம் என்ற முழு விபரம் இதோ. இந்திய ஸ்மார்ட்போன் சந்தை விரைவில் ஒரு புதிய எழுச்சியை சந்திக்கபோகிறது. விரைவில் 5ஜி போன்கள் எல்லாம் ரூ. 10,000 விலையை விட மிகமிக குறைந்த விலைக்கு விற்பனைக்கு வரவுள்ளது. மலிவான பட்ஜெட் 5ஜி ஸ்மார்ட்போன்களின் (Budget 5G smartphone) எழுச்சி துவங்க போகிறது.

சொன்னா நம்பமாடீங்க.. இனி ரூ.8000 விலைக்கு 5G Mobile.. உண்மை தான்..

அடிமட்ட விலையில் இனி புது 5ஜி மொபைல்.. இந்திய மக்கள் மகிழ்ச்சி:

சியோமி (Xiaomi) போன்ற பிராண்டுகள் இன்னும் சில மாதங்களுக்குள் மலிவு விலையில் 5G சாதனங்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகின்றன. இது நுகர்வோருக்கு அற்புதமான அம்சங்களை உறுதியளிக்கிறது. குவால்காம் (Qualcomm) நிறுவனத்தின் புதிய ஸ்னாப்டிராகன் 4s ஜென் 2 (Snapdragon 4s Gen 2) சிப்செட் மூலம் இது சாத்தியமாகியுள்ளது. அதிக விலை இல்லாமல் 5G-யை அணுகக்கூடியதாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு இந்த புதிய சிப்செட் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புதிய சிப்செட் மூலம் 5 முக்கிய மாற்றங்களை மலிவு விலை 5ஜி போன்களில் நாம் எதிர்பார்க்கலாம். அது என்ன? இந்த புதிய சிப்செட் மூலம் இனி மலிவு விலை போன்களிலும் முழு HD+ தெளிவுத்திறனுடன் 90Hz ரெஃப்ரஷ் ரேட் டிஸ்பிளே கிடைக்கப்போகிறது. தற்போது, ​​பட்ஜெட் போன்களில் வெறும் HD தெளிவுத்திறனுடன் 60Hz ரெஃப்ரஷ் ரேட் மட்டுமே கிடைக்கிறது. இந்த மேம்படுத்தல் பல பயனர்களை பட்ஜெட் 5G ஃபோன்களுக்கு மாற தூண்டும்.

ஸ்னாப்டிராகன் 4s ஜென் 2 சிப்செட் கணிசமான செயல்திறன் மேம்பாடுகளைக் கொண்டுவருகிறது. இது 8ஜிபி ரேம் மற்றும் யுஎஃப்எஸ் 3.1 ஸ்டோரேஜ்ஜை ஆதரிக்கிறது. இது தற்போதுள்ள பட்ஜெட் போன்களில் இருந்து குறிப்பிடத்தக்க மேம்படுத்தலை வழங்குகிறது. தற்போதைய பட்ஜெட் செக்மென்ட்டில் 4ஜிபி ரேம் அல்லது 6ஜிபி ரேம் வரை மட்டுமே கிடைக்கிறது. இந்த மேம்படுத்தல் வேகமான ஆப் செயல்திறன் மற்றும் சிறந்த மல்டிடாஸ்கிங் திறன்களை உறுதியளிக்கிறது.

இனி ரூ.8000 விலைக்கு 5G Mobile வாங்கலாமா? இந்திய ஸ்மார்ட்போன் சந்தையே மலிவா மாறப்போகுது:

மற்றொரு அற்புதமான அம்சம், இந்த சிப்செட் பொருத்தப்பட்ட கேமராக்களில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) சேர்க்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுவரை உயர்நிலை போன்களில் மட்டுமே காணப்பட்ட அம்சம் இனி மலிவு விலை போன்களுக்கும் வரலாம். அதேபோல், இந்த சிப்செட் 40W வரை பாஸ்ட் சார்ஜிங் வேகத்தை ஆதரிக்கும் என்று Qualcomm தெரிவிக்கிறது.

Xiaomi இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்த சிப்செட் மூலம் தனது முதல் 5G போனை அறிமுகப்படுத்தும் திட்டத்தை உறுதிப்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து இன்பினிக்ஸ் (Infinix), ரியல்மி (Realme) மற்றும் விவோ (Vivo) போன்ற பிற பிராண்டுகளும் இதைப் பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்திய நுகர்வோருக்கு ரூ. 8,000 என்ற மலிவு விலை முதல் 5ஜி போனை அணுக வழிவகுக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த புதிய சிப்செட் போன்களை எதிர்பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Realme Vivo 5G Phones Becoming Cheaper Under Rs 8000 Soon In India Snapdragon 4s Gen 2 SoC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X