Home
News

Xiaomi தான் காரணம்.. உலக ஸ்மார்ட்போன்களின் உருவமே மாறப்போகுது.. பட்டன்களே இல்லாத முதல் பட்டன்லெஸ் போன் ரெடி?

சியோமி (Xiaomi) நிறுவனம் விரைவில் பட்டன்களே இல்லாத ஒரு புதுமையான ஸ்மார்ட்போனை வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆம், சியோமி நிறுவனம் இப்போது அதன் தயாரிப்பு பட்டியலில் மிகவும் சீக்ரெட்டாக ஒரு சியோமி பட்டன்லெஸ் ஸ்மார்ட்போன் (Xiaomi Buttonless Smartphone) சாதனத்தை உருவாக்கி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆப்பிள் (Apple) நிறுவனமும் இதேபோன்ற கான்செப்டில் இயங்கி வருவதாக கடந்த வருடம் கூறப்பட்டு வந்தது. ஆனால், இறுதியில் ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro) சாதனங்கள் வழக்கமான பிஸிக்கல் பட்டன்களுடன் வெளிவந்து, ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏமாற்றத்தை மட்டும் தந்தது.

சியோமி நிறுவனம் சைலெண்டாக அதன் தயாரிப்பு தளத்தில் ஒரு புது வகையான அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போன் சாதனத்தை உருவாக்கி வருவதாக கூறப்பட்டு வருகிறது. இந்த புதிய தலைமுறை ஸ்மார்ட்போன் சாதனத்தில் எந்தவொரு பிஸிக்கல் பட்டன்களும் இடம்பெறாது என்று கூறப்பட்டுள்ளது. இந்த புது வகை ஸ்மார்ட்போன் ஒரு ஆள்-ஸ்கிரீன் வடிவமைப்பை (all-screen design) கொண்டிருக்கும் என்று வதந்திகள் குறிப்பிடுகின்றன.

Xiaomi தான் காரணம்.. உலக ஸ்மார்ட்போன்களின் உருவமே மாறப்போகுது..

Xiaomi தான் காரணம்.. உலக ஸ்மார்ட்போன்களின் உருவமே மாறப்போகுது:

இந்த புதிய சியோமி பட்டன்லெஸ் ஸ்மார்ட்போன் (Xiaomi Buttonless Smartphone) சாதனத்தை சுற்றி ஒரு இடத்தில் கூட எந்தவிதமான அழுத்தத்தை அனுமதித்து இயங்கும் பட்டன்களை நாம் பார்க்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது. பிஸிக்கல் பட்டன்களுக்கு பதிலாக, இந்த பட்டன்லெஸ் போனில் டச் கண்ட்ரோல் மற்றும் பிரஷர் கண்ட்ரோலில் இயங்கும் புதிய அம்சங்களை பயனர்கள் பயன்படுத்துவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இன்னும் பல சுவாரசியமான அம்சங்களையும் இந்த

இந்த புதிய ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் கண்களுக்கு தெரியாத அண்டர் டிஸ்பிளே செல்பி கேமராக்கள் இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. சியோமி பட்டன்லெஸ் ஸ்மார்ட்போன் (Xiaomi Buttonless Smartphone) சாதனம் தற்போது ஆரம்பக்கட்ட தயாரிப்பில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சாதனத்தை சியோமி நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் ஏதேனும் ஒரு காலப்பகுதில் அறிமுகம் செய்யுமென்று லீக் தகவல் கூறுகிறது.

சமீபத்தில் வெளியான டிப்ஸ்டர் சுன் பாய் (Chun Bhai) தகவல் படி, இந்த புதிய சியோமி பட்டன்லெஸ் ஸ்மார்ட்போன் (Xiaomi Buttonless Smartphone) சாதனம் ஜுக்யூ (Zhuque) என்ற கோட் நேம் உடன் காணப்பட்டது என்பது குறிப்பிட்டுள்ளது. இந்த பட்டன்லெஸ் போனில் பவர் ஆன் / ஆஃப் பட்டன்கள் மற்றும் வால்யூம் பட்டன்கள் போன்றவற்றை நாம் பார்க்க முடியாது. எந்த விதமான பட்டன்களும் இல்லாமல் இந்த போனை எப்படி இயக்குவது என்று சிலருக்கு சந்தேகமாக இருக்கலாம்.

சியோமி ஜுக்யூ பட்டன்லெஸ் ஸ்மார்ட்போன் (Xiaomi Zhuque Buttonless Smartphone):

இந்த புதிய ஜுக்யூ பட்டன்லெஸ் ஸ்மார்ட்போன் (Zhuque Buttonless Smartphone) கெஸ்ச்சர் கண்ட்ரோல், வாய்ஸ் கண்ட்ரோல் மற்றும் ப்ரெஷர் சென்சிடிவ் எட்ஜ் அம்சத்தின் மூலம் இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய வகை போனில், மக்கள் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 4 சிப்செட்டை (Snapdragon 8+ Gen 4 SoC) எதிர்பார்க்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக இந்த சிப்செட்டை நிறுவனம் சியோமி 15S ப்ரோ மாடலில் பயன்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு ஆப்பிள் நிறுவனமும் கூட, அதன் ஐபோன் 15 ப்ரோ சாதனங்களை பட்டன்லெஸ் போன்களாக அறிமுகம் செய்யவுள்ளது என்ற தகவல்கள் வெளியானது. ஆனால், ஐபோன் 15 ப்ரோ பட்டங்களுடன் மட்டுமே சந்தைப்படுத்தப்பட்டது. அதேபோல், மெய்ஸு நிறுவனம் அதன் மெய்ஸு ஜீரோ ஸ்மார்ட்போனில் எந்த பட்டனையும் வழங்காமல் அதை ஒரு அசல் பட்டன்லெஸ் போனாக அறிமுகம் செய்துள்ளது. விவோ எபெக்ஸ் 2019 கான்செப்ட் போனில் கூட பட்டன்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Plans to Launch First Buttonless Flagship Smartphone Next Year Codename Zhuque Found Online
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X