சியோமியின் பலே திட்டம்: 200W பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம்.. வெறும் 10 நிமிடங்கள் போதும்...
சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்ப்பு உள்ளது. அதேபோல் இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் டிவி மாடல்கள், லேப்டாப், ஸ்பீக்கர்கள் அனைத்தும் இந்தியாவில் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்நிறுவனத்தின் சாதனங்கள் வெளிவருவதால் நல்ல வரவேற்பு உள்ளது.

அதேசமயம் இந்நிறுவனம் என்ன தான் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தினாலும் பயனர்களை ஈர்க்கும் வகையில் விலைப் புள்ளிகளை வைத்துள்ளது. எனவே தான் சியோமி நிறுவனத்தின் பொருட்களுக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது.

200 வாட் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம்
இந்நிலையில் சியோமி நிறுவனம் 200 வாட் பாஸ்ட் சார்ஜிங்கில் வேலை செய்வதாக கூறப்படுகிறது. எனவே இந்நிறுவனத்தின்வரவிருக்கும் முதன்மை ஸ்மார்ட்போன்களில் இந்த 200 வாட் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தலாம். ஆனால் இந்த புதிய தொழில்நுட்பம் எப்போது சரியாக அனைவருக்கும் கிடைக்கும் என்ற தகவலை அந்நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை. அதாவது இந்த தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தும் தேதியை இந்நிறுவனம் குறிப்பிடவில்லை.

வெறும் 10 நிமிடங்களில்
அண்மையில் சீன மைக்ரோ பிளாக்கிங் வலைத்தளமான வெய்போவில் வெளியான தகவலின்படி, சியோமி நிறுவனம் 200 வாட் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தில் வேலை செய்வதாகவும். பின்பு இந்த 200 வாட் பாஸ்ட் சார்ஜிங் முறையில் வெறும் 10 நிமிடங்களில் ஸ்மார்ட்போன்களை முழுமையாக சார்ஜ் செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன மைக்ரோ பிளாக்கிங் வலைத்தளமான வெய்போவில் டிப்ஸ்டரின் கூற்றுப்படி, சியோமி நிறுவனம் ஒரு சுவாரஸ்யமான வழியைக் கொண்டுள்ளது. அதாவது wired, வயர்லெஸ் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஆகியவற்றின் மூலம் 200W வேகமான சார்ஜிங்கை வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தொடர்ந்து சியோமி நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும். மேலும் இந்த 200 வாட் பாஸ்ட் தொழில்நுட்பம் வந்தால் பல்வேறு மக்களுக்கு உதவியாக இருக்கும். அதாவது 10 நிமடங்களில் ஸ்மார்ட்போன்களை முழுமையாக சார்ஜ் செய்ய முடியும் என்றால் அது கொஞ்சம் பெரிய விஷயம் தான்.

கடந்த காலங்களில் Mi 10 Extreme Commemorative எடிஷனுடன் 120W wired சார்ஜிங், 55W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 10W வரை ரிவர்ஸ் சார்ஜிங் உள்ளிட்ட வசதிகளை வழங்கியது இந்நிறுவனம். இந்த தொழில்நுட்பங்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதேசமயம் வரவிருக்கும் 200 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி மக்களிடம் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும்.


Click it and Unblock the Notifications