Home
News

சத்தமில்லாமல் ஸ்மார்ட்போன் விலையில் டேப்லெட் உருவாக்கும் Xiaomi.. எந்த மாடல் என்ன விலை?

சியோமி (Xiaomi) நிறுவனம் அதன் போர்ட்போலியோவில் பல புதிய தயாரிப்புகளை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. இதில் ஸ்மார்ட்போன் (smartphone), டேப்லெட் (tablet), இயர்போன்ஸ் (earphones), ஸ்மார்ட்வாட்ச் (smartwatch) என்று பல தயாரிப்புகளை தொடர்ந்து நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது.

இந்த வரிசையில், சியோமி நிறுவனம் அடுத்தபடியாக அறிமுகம் செய்யவிருக்கும் புதிய சாதனத்தை பற்றிய தகவல்கள் தான் இப்போது இணையத்தில் லீக் ஆகியுள்ளது. சியோமி நிறுவனம் அதன் டேப்லெட் சீரிஸ் வரிசையில் புதிதாக சியோமி பேட் 7 ப்ரோ (Xiaomi Pad 7 Pro) என்ற சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளதாக டெக் வட்டார தகவல் வெளியாகியுள்ளது.

சத்தமில்லாமல் ஸ்மார்ட்போன் விலையில் டேப்லெட் உருவாக்கும் Xiaomi..

இந்த சியோமி பேட் 7 ப்ரோ டேப்லெட் சாதனம் அதன் முந்தைய மாடலை விட அதிகப்படியான மேம்படுத்தல்களை பெற்றிருக்கும் என்றும் அத்தகவலில் கூறப்பட்டுள்ளது. தெரியாதவர்களுக்கு, சியோமி நிறுவனம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தான் அதன் சியோமி பேட் 6 ப்ரோ டேப்லெட் சாதனத்தை அறிமுகம் செய்தது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 (Qualcomm Snapdragon 8+ Gen 1) சிப்செட் உடன் வெளிவந்தது.

சியோமி பேட் 7 ப்ரோ (Xiaomi Pad 7 Pro):

சியோமி பேட் 6 ப்ரோ (Xiaomi Pad 6 Pro) இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. இப்போது, ​​சீன தொழில்நுட்ப பிராண்ட் இந்த சாதனத்தின் வாரிசாக சியோமி பேட் 7 ப்ரோ (Xiaomi Pad 7 Pro) சாதனத்தை களமிறக்குவதற்கான வேலையை படு வேகத்தில், மும்முரமாக செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த டேப்லெட்டை நிறுவனம் எப்போது அறிமுகம் செய்யுமென்ற சரியான காலம் குறித்த அதிகாரப்பூர்வ வார்த்தை எதுவும் இல்லை.

ஆனால், சியோமி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்கும் முன்னதாக, இந்த புதிய சியோமி பேட் 7 ப்ரோ டேப்லெட்டின் விவரக்குறிப்புகள் பற்றிய விபரங்கள் இணையத்தில் வெளிவந்துள்ளன. சியோமி பேட் 7 ப்ரோ (Xiaomi Pad 7 Pro) டேப்லெட் சாதனம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 (Qualcomm Snapdragon 8 Gen 2) சிப்செட் உடன் வெளிவரும் என்று லீக் தகவல் குறிப்பிட்டுள்ளது.

சியோமி பேட் 7 ப்ரோவில் எதிர்பார்க்கப்படும் டிஸ்பிளே (Xiaomi Pad 7 Pro Display):

இது 144Hz ரெஃப்ரஷ் ரேட் வீதத்துடன் கூடிய எல்சிடி (LCD) டிஸ்பிளேவைக் கொண்டிருக்க வாய்ப்பு அதிகம். வெய்போவில் உள்ள டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்ட தகவலின் படி, சியோமி பேட் 7 ப்ரோ (Xiaomi Pad 7 Pro) ஆனது 144Hz புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய LCD டிஸ்ப்ளேவைப் பெறும் என்று பதிவிட்டுள்ளது. வெய்போ தகவலில் இந்த சாதனம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 SoC இல் இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகம் செய்யப்பட்ட சியோமி பேட் 6 ப்ரோ டிவைஸில் ஸ்னாப்டிராகன் 8+ ஜெனரல் 1 SoC இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல், வரவிருக்கும் டேப்லெட்டில் பின்புற பேனலின் மேல் இடது மூலையில் அமைக்கப்பட்ட சதுர வடிவ கேமரா தொகுதி இடம்பெறும் என்று கூறப்படுகிறது. Xiaomi Pad 6 Pro ஆனது சீனாவில் Xiaomi Pad 6 உடன் ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

சியோமி பேட் 7 ப்ரோ டேப்லெட் விலை (Xiaomi Pad 7 Pro Expecting Price) என்ன?

இதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி வேரியண்ட் மாடலின் விலை CNY 2,399 ஆகும். இந்திய மதிப்பில் இதன் விலை தோராயமாக ரூ. 28,500 இல் தொடங்குகிறது. வரவிருக்கும் புதிய சியோமி பேட் 7 ப்ரோ டேப்லெட் சாதனம் ரூ.30,000 விலைக்குள் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டேப்லெட் சாதனம் இன்னும் என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும் என்பதை விரைவில் அப்டேட் செய்கிறோம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Pad 7 Pro Tablet Could Launch With Snapdragon 8 Gen 2 Soc and 144Hz Refresh Rate Display
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X