10' இன்ச் டிஸ்பிளே.. மிரட்டும் பெர்ஃபார்மன்ஸ்.. தூள் கிளப்பப் போகும் Xiaomi Pad 7 Pro டேப்லெட்..
சியோமி (Xiaomi) நிறுவனம் அதன் அடுத்த புதிய டேப்லெட் சாதனத்தை அறிமுகம் செய்ய ரெடியாகி வருகிறது. சியோமி பேட் 7 ப்ரோ (Xiaomi Pad 7 Pro) என்ற டேப்லெட்டை சக்தி வாய்ந்த சிப்செட் உடன் அறிமுகம் செய்யவிருக்கிறது.
சியோமி நிறுவனம் (Xiaomi), இந்த 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சியோமி பேட் 6 ப்ரோ (Xiaomi Pad 6 Pro) டேப்லெட் சாதனத்தை வெளியிட்டது. இருப்பினும், நிறுவனம் வெகு விரைவில் அதன் அடுத்த தலைமுறை டேப்லெட் சாதனத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய டேப்லெட் சாதனம் புதிய தலைமுறை சிப்செட் மற்றும் உயர் திறன் கொண்ட டிஸ்பிளே உடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது.

சியோமி பேட் 6 ப்ரோ உடன் ஒப்பிடுகையில், சியோமி பேட் 7 ப்ரோ (Xiaomi Pad 7 Pro) பெரிய மேம்படுத்தல்கள் உடன் வருகிறது. ஜிஎஸ்எம் சீனா (GSMChina) இன் அறிக்கையின் படி, புதிய சியோமி பேட் 7 ப்ரோ (Xiaomi Pad 7 Pro) ஆனது ஷெங்க் ('Sheng'), என்ற மாடல் பெயருடன் இந்த டேப்லெட் மாடல் குறியீட்டு பெயருடன் காணப்படுகிறது. இது ஒரு இசைக்கருவியின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.
சியோமி பேட் 7 ப்ரோ (Xiaomi Pad 7 Pro):
சியோமி நிறுவனம் இசைக்கருவிகளின் பெயர்களை தொடர்க்கு மாடல் பெயராக பயன்படுத்தும் நடைமுறையை நீண்ட காலமாக பின்பற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நாம் இங்கு பேசிக்கொண்டிருக்கும் புதிய சியோமி பேட் 7 ப்ரோ சாதனத்தை இணையதள பட்டியல் ஷெங்க் என்81ஏ (Sheng N81A) என்ற பெயருடன் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்திய அறிக்கையின் படி, சியோமி பேட் 7 ப்ரோ (Xiaomi Pad 7 Pro) ஆனது கடந்த ஆண்டின் ஃபிளாக்ஷிப் சிப்செட் மாடலான ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 (Snapdragon 8 Gen 2) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இதற்கு முந்தைய மாடலான சியோமி பேட் 6 ப்ரோ சாதனம் ஸ்னாப்டிராகன் 8+ ஜெனரல் 1 சிப்செட்டுடன் வந்தது என்பது கவனிக்கத்தக்கது. இதன் மூலம் புதிய தலைமுறை டேப்லெட் மேம்படுதலை பெறுகிறது.
சியோமி பேட் 7 ப்ரோ டிஸ்பிளே (Xiaomi Pad 7 Pro display):
சியோமி பேட் 7 ப்ரோ (Xiaomi Pad 7 Pro) சாதனம் 1480 x 2367 தீர்மானம் மற்றும் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷ் ரேட் வீதத்துடன் 10' இன்ச் எல்சிடி டிஸ்ப்ளேவைக் (LCD display) கொண்டுள்ளது. இந்த டேப்லெட் ப்ரைமரி சென்சார் மற்றும் டெப்த் சென்சார் கொண்ட டூயல் ரியர் கேமரா அமைப்புடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், இது என்ன கேமரா அம்சத்தை கொண்டிருக்கும் என்ற விபரம் தெளிவாக தெரியவில்லை.
இந்த டேப்லெட் சாதனம் ஆண்ட்ராய்டு 14 (android 14) இல் இயங்கும் சியோமி (Xiaomi) இன் புதிய ஹைப்பர் ஓஎஸ் (HyperOS) இல் இயங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது டால்பியின் ஆதரவுடன் குவாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர் அமைப்புடன் வெளி வரலாம் என்று சியோமி தொடர்பான லீக் தகவல் குறிப்பிடுகிறது. அறிக்கையின்படி, Xiaomi அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் Xiaomi 14 Ultra போனுடன் புதிய Mi Pad 7 வரிசையை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








