டேப்லெட் சந்தையே அரளுது.. 50MP கேமரா.. 10,000mAh பேட்டரி.. 16GB ரேம்.. 1TB மெமரி.. என்ன மாடல்?
சியோமி (Xiaomi) நிறுவனம் வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி அதன் புதிய டேப்லெட் சாதனமான சியோமி பேட் 6S ப்ரோ (Xiaomi Pad 6S Pro) டிவைஸை அறிமுகம் செய்கிறது. அறிமுகத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், இது பற்றிய சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளது.
சியோமி டேப்லெட்: இந்த அறிமுக நிகழ்வு சீனாவில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வின் பொழுது சியோமி நிறுவனம் சியோமி 14 அல்ட்ரா பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சாதனத்தையும் அறிமுகம் செய்யுமென்று கூறப்படுகிறது. இந்த புதிய சியோமி 14 டிவைஸ் மீது அதிக எதிர்பார்த்து வைக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக, சியோமி நிறுவனம் அறிமுகம் செய்யவிருக்கும் சியோமி பேட் 6S ப்ரோ (Xiaomi Pad 6S Pro) சாதனத்தின் மீது தான் அதிக எதிர்பார்ப்பு வைக்கப்பட்டுள்ளது.

Xiaomi Pad 6S Pro: சியோமி நிறுவனம் சீனாவில் இப்போது 2 போஸ்டர்களை வெளியிட்டுள்ளது. இதில் சியோமி பேட் 6S ப்ரோ (Xiaomi Pad 6S Pro) டேப்லெட் சாதனத்தின் டிசைன் மற்றும் சில முக்கிய அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஒரு போஸ்டரில், டேப்லெட்டின் கேமரா மாட்யூல் வடிவமைப்பும் தெளிவாக காண்பிக்கப்பட்டுள்ளது. சியோமியின் முதல் போஸ்டர் இது பெரிய டிஸ்பிளேவுடன் சிறந்த வியூவிங் எக்ஸ்பீரியன்ஸ் உடன் வரும் என்பதை காண்பிக்கிறது.
சியோமி பேட் 6S ப்ரோ (Xiaomi Pad 6S Pro) டேப்லெட்: ஸ்லிம் பேசல் உடன் பெரிய டிஸ்பிளேவை வழங்குகிறது. இதன் பின்புறத்தில் சதுர வடிவ கேமரா மாட்யூல் இருப்பதை போஸ்டர் காண்பிக்கிறது. இது சியோமி 14 ஸ்மார்ட்போனில் காணப்படும் கேமரா மாட்யூல் போல காட்சியளிக்கிறது. இது 50MP மெயின் கேமரா உடன் LED பிளாஷ் கொண்ட டூயல் கேமரா அம்சத்தை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

10,000mAh பேட்டரி: வலதுபுறத்தில், இது வால்யூம் ராக்கர் கீ மற்றும் மேல் எட்ஜில் பவர் பட்டன் உடன் கூடிய பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் போன்ற அம்சங்களை இது கொண்டிருக்கும். சியோமி பேட் 6S ப்ரோ (Xiaomi Pad 6S Pro) டேப்லெட் சாதனம் குவாட் ஸ்பீக்கர் சிஸ்டத்துடன் வெளிவரும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த புதிய சியோமி பேட் 6S ப்ரோ (Xiaomi Pad 6S Pro) டேப்லெட் சாதனம் 10,000mAh பேட்டரியை கொண்டிருக்கும்.
டிஸ்பிளே: இது 120W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வெளிவரும் என்று புதிய தகவல் குறிப்பிட்டுள்ளது. இதுமட்டுமின்றி, சியோமி இடம் இருந்து வெளிவரும் முதல் ஹைப்பர் ஓஎஸ் (Hyper OS) இயங்குதளத்தில் இயங்கும் டேப்லெட்டு சாதனமாக இந்த டேப்லெட் இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் டிஸ்பிளே அளவை பற்றி பேசுகையில், இது 12.4" இன்ச் LCD டிஸ்பிளேவுடன் 3K ரெசொலூஷன் உடன் வரும் என்று கூறப்பட்டுள்ளது.
ஸ்டோரேஜ்: இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் உடன் 16GB ரேம் மற்றும் 1TB ஸ்டோரேஜ் கொண்ட மாடலாக வெளிவரும். இதில் வைஃபை 7 (Wi-Fi 7) டெக்னலாஜி அம்சமும் இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் விலை பற்றிய விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.


Click it and Unblock the Notifications