அறிமுகமான 4 மாசத்துல.. இவ்ளோ பெரிய Price Cut-ஆ.. இந்த 11-இன்ச் டேப்லெட்-ஐ போட்டிபோட்டு வாங்குறாங்க!
இந்தியாவில் அறிமுகமாகி வெறும் 4 மாதங்களே ஆன நிலைப்பாட்டில், ஷாவ்மீ நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு டேப்லெட் ஒன்றின் மீது விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதென்ன மாடல்? அதன் பழைய மற்றும் புதிய விலை நிர்ணயம் என்ன? என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:
என்ன மாடல்? நாம் இங்கே பேசுவது ஷாவ்மீ பேட் 6 (Xiaomi Pad 6) ஆண்ட்ராய்டு டேப்லெட்டை பற்றித்தான். தற்போது இந்த டேப்லெட்டின் மீது ரூ.2000 விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சுவாரஸ்யமாக இந்த விலைகுறைப்பானது ஷவமே பேட் 6 டேப்லெட்டின் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் மீதும் அணுக கிடைக்கிறது.

பழைய மற்றும் புதிய விலை நிர்ணயம் என்ன? கடந்த ஜூன் மாதத்தில் ஷாவ்மீ பேட் 6 டேப்லெட்டின் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் முறையே ரூ.26,999 க்கும் மற்றும் ரூ.28,999 க்கும் இந்தியாவில் அறிமுகமானது.
தற்போது ரூ.2000 என்கிற விலைக் குறைப்புக்கு பிறகு, 6ஜிபி ரேம் வேரியண்ட் ரூ.24,999 க்கும், 8ஜிபி ரேம் வேரியண்ட் ரூ.26,999 க்கும் வாங்க கிடைக்கிறத்து. ஷாவ்மீயின் இந்த ஆண்ட்ராய்டு டேப்லெட் ஆனது மிஸ்ட் ப்ளூ (Mist Blue) மற்றும் கிராஃபைட் கிரே (Graphite Grey) என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.

இதர சலுகைகள்: ஷாவ்மீ பேட் 6 டேப்லெட் மீது விலைக்குறைப்பு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். ஷாவ்மீ பேட் 6 மீது மற்ற சில சலுகைகளும் அணுக கிடைக்கிறது. நீங்கள் ஐசிஐசிஐ வங்கியின் (ICICI Bank) கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட்டை பயன்படுத்தினால் ரூ.3,000 உடனடி தள்ளுபடி கிடைக்கும்.
ஒருவேளை நீங்கள் எச்டிஎப்சி வங்கியின் (HDFC Bank) கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட்டை பயன்படுத்தி ஷாவ்மீ பேட் 6 டேப்லெட்டை வாங்கினால் ரூ.3,000 உடனடி தள்ளுபடியையும், ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் (IDFC First Bank) கிரெடிட் கார்டை பயன்படுத்தினால் ரூ.2,000 பிளாட் தள்ளுபடியையும் பெறலாம்.

ஷாவ்மீ பேட் 6 டேப்லெட்டின் அம்சங்கள்: இது 144ஹெர்ட்ஸ் வரையிலான டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2880 x 1800 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் உடனான 11-இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 ப்ரொடெக்ஷனையும் கொண்டுள்ளது.
ப்ராசஸரை பொறுத்தவரை, ஷாவ்மீ பேட் 6 டேப்லெட் ஆனது ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் (Octa-core Qualcomm Snapdragon 870 chipset) மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இந்த ஆண்ட்ராய்டு டேப்லெட் ஆனது 8ஜிபி வரையிலான ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 13 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் (Android 13 OS) இயங்கும் சியோமி பேட் 6 டேப்லெட் ஆனது, டேப்லெட்டுகளுக்காக வடிவமைக்கப்பட்ட ஷாவ்மீயின் சொந்த எம்ஐயுஐ 14 (MIUI 14) உடன் வருகிறது. கேமராக்களை பொறுத்தவரை இதில் 13எம்பி சிங்கிள்-லென்ஸ் ரியர் கேமரா (எஃப்/2.2 அப்பெர்ச்சர்) மற்றும் 8எம்பி செல்பீ கேமரா உள்ளது.
கடைசியாக பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங்கை பொறுத்தவரை, ஷாவ்மீ பேட் 6 டேப்லெட் ஆனது 8840எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது. இது 33வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வருகிறது. ஒருவேளை நீங்கள் ஷாவ்மீ பேட் 5 டேப்லெட்டை வாங்க விரும்பினால், இதன் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ரூ.22,999 க்கு வாங்க கிடைக்கிறது.
இந்த இடத்தில் ஷாவ்மீயின் அடுத்த டேப்லெட் ஆக ஷாவ்மீ பேட் 7 ப்ரோ கூடிய விரைவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் (Snapdragon 8 Gen 2 SoC) மற்றும் 144ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் உடனான எல்சிடி டிஸ்பிளே (144Hz refresh rate LCD Display) போன்ற அம்சங்களை பேக் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








