8720 எம்ஏஎச் பேட்டரி, சியோமி பென், கீபோர்ட் ஆதரவோடு இந்தியாவில் அறிமுகம்: சியோமி பேட் 5 விலை இதுதான்!

|

சியோமி பேட் 5 சாதனமானது ஸ்னாப்டிராகன் 860 செயலி ஆதரவு, 8720 எம்ஏஎச் பேட்டரி அம்சத்தோடு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சியோமி பேட் 5 ஆனது சியோமி பென் மற்றும் சியோமி கீபோர்ட் ஆதரவுடன் வருகிறது. அதேபோல் சியோமி பேட் 5 ஆனது சியோமி பென் மற்றும் சியோமி கீபோர்ட் ஆதரவோடு வருகிறது. சியோமி ஸ்மார்ட் 5ஏ டிவி உடன் சியோமி பேட் 5 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனமானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 860 செயலி, பெரிய 8720 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 120 ஹெர்ட்ஸ் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே உடன் வருகிறது. சியோமி பேட் 5 சாதனத்தின் இந்திய விலை ரூ.26,999 என தொடங்குகிறது.

சியோமி பேட் 5

சியோமி பேட் 5

சியோமி இந்தியாவில் சியோமி 12 ப்ரோ உடன் இணைந்து சியோமி பேட் 5 மற்றும் சியோமி ஸ்மார்ட் 5ஏ டிவி சாதனத்தை வெளியிட்டது. சியோமி பேட் 5 ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 860 செயலி ஆதரவோடு வருகிறது. இது பெரிய பேட்டரி ஆதரவைக் கொண்டிருக்கிறது. அது 8720 எம்ஏஎச் பேட்டரி ஆகும். இந்த சாதனம் 120 ஹெர்ட்ஸ் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. சியோமி இரண்டு உற்பத்தி திறன் கருவிகளை அறிமுகப்படுத்தியது. இது சியோமி பென் மற்றும் சியோமி பேட் கீபோர்ட் ஆதரவோடு வருகிறது. இந்த சாதனம் டால்பி விஷன் மற்றும் டால்பி அணுகல் ஆதரவோடு வரும் முதல் டேப்லெட் ஆக இருக்கிறது. சியோமி அதன் டேப்லெட்டில் எம்ஐயூஐ பேட் ஓஎஸ்-ஐ அறிமுகப்படுத்தியது.

8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதி

8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதி

சியோமி பேட் 5 ஆனது இரண்டு சேமிப்பு விருப்பங்களில் வருகிறது. அது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த சாதனத்தின் விலை ரூ.26,999 என கிடைக்கிறது. அதேபோல் இதன் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இதன் விலை ரூ.28,999 என கிடைக்கிறது. அதேபோல் அறிமுக சலுகையாக 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் ரூ.24,999 எனவும் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு விலை ரூ.26,999 என கிடைக்கிறது. இந்த சலுகை ஆனது மே 7-ஆம் தேதி வரை செல்லுபடியாகும். நிகழ்வில் சியோமி பேட் 5 வண்ண விருப்பங்களை சியோமி அறிவிக்கவில்லை.

சியோமி பேட் 5 சிறப்பம்சங்கள்

சியோமி பேட் 5 சிறப்பம்சங்கள்

சியோமி பேட் 5 சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இது 10.95 இன்ச் டபிள்யூ க்யூஎச்டி ப்ளஸ் எல்சிடி 10 பிட் ட்ரூ கலர் டிஸ்ப்ளே உடன் வருகிறது. 2560×1600 பிக்சல் தீர்மானம், 650 நிட்ஸ் பிரகாச ஆதரவோடு வருகிறது. டால்பி விஷன், டால்பி 12 ஹெர்ட்ஸ் ரேட் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. பேட் 5 சாதனமானது அட்ரீனோ 640 ஜிபியூ உடனான குவால்காம் ஸ்னாப்டிராகன் 860 செயலி ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த சாதனம் 6 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் வசதியோடு 128 ஜிபி உள்சேமிப்பு மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியைக் கொண்டிருக்கிறது. இந்த சாதனம் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த சாதனம் 8720 எம்ஏஎச் பேட்டரி பேக்அப்-ஐ கொண்டுள்ளது. இந்த சாதனம் 22.5 வாட்ஸ் சார்ஜரை கொண்டுள்ளது.

சியோமி பேட் 5 கேமரா அம்சங்கள்

சியோமி பேட் 5 கேமரா அம்சங்கள்

சியோமி பேட் 5 கேமரா அம்சங்களை பொறுத்தவரையில், இதன் பின்புறத்தில் 13 எம்பி முதன்மை கேமராவைக் கொண்டிருக்கிறது. இந்த சாதனம் 1080 பிக்சல் முழு எச்டி ப்ளஸ் வீடியோ பதிவு செய்யும் திறனைக் கொண்டிருக்கிறது. முன்பக்கத்தில் 8 எம்பி ஸ்னாப்பர் செல்பி கேமராவைக் கொண்டுள்ளது. சியோமி பேட் 5 ஆனது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான எம்ஐயூஐ 12 ஆதரவைக் கொண்டுள்ளது. பேட் 5 ஆனது ஸ்பிளிட் டிஸ்ப்ளே, குவாட் ஸ்பீக்கர்கள் மற்றும் சேனல் மேப்பிங் அம்சங்களை ஆதரிக்கிறது. சியோமி பேட் 5 ஆனது சியோமி பென் மற்றும் சியோமி கீபோர்ட் ஆதரவோடு வருகிறது. இந்த சாதனம் யூஎஸ்பி டைப்-சி ஓடிஜி ஆதரவோடு வருகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
xiaomi Pad 5 Launched in India with 8720 mAh Battery, xiaomi Pen and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X