Home
News

அதிரடியாய் விலை குறைப்பு! Xiaomi Pad 5 வாங்க 3 நல்ல காரணம்! 2 மோசமான கரணம் இதுவே! முடிவு?

Xiaomi தனது புதிய தலைமுறை சியோமி பேட் 6 (Xiaomi Pad 6) டேப்லெட் சாதனத்தை நாளை ஜூன் 13 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதன் அறிமுகத்திற்கு முன்னதாக, Xiaomi Pad 5 சாதனத்தின் விலையை நிறுவனம் இப்போது குறைத்துள்ளது.

சியோமி பேட் 5 சாதனம் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் மாடல் ரூ.25,999 விலைக்கு விற்கப்படுகிறது. இது அசல் விற்பனை விலையான ரூ.26,999 விலையிலிருந்து குறைக்கப்பட்டது. இதன் 256ஜிபி மாடல் ரூ.500 தள்ளுபடியுடன் வெறும் ரூ.26,499 விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தை மேலும் இனிமையாக்க, ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுகளைக் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,000 உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

அதிரடியாய் விலை குறைப்பு! Xiaomi Pad 5 வாங்க 3 நல்ல காரணம்!

அதாவது சியோமி பேட் 5 சாதனத்தை ரூ.23,999 மற்றும் 26,499 விலைக்கு வாங்க முடியும். செல்லுபடியாகும் அடையாள அட்டை வைத்திருக்கும் மாணவர்களுக்கு கூடுதலாக 500 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும்.

Xiaomi Pad 6 மிகவும் மதிப்புமிக்க ஆண்ட்ராய்டு டேப்லெட்டுகளில் ஒன்றாக உள்ளது. சில பயனர்கள் அதை ஆப்பிளின் குறைந்த அளவிலான ஐபாட்களுடன் ஒப்பிட்டாலும், சியோமி பேட் 5 ஆப்பிள் அளவிற்கு சிறந்தது இல்லை. இருப்பினும், அலுவலக வேலை மற்றும் கேமிங்கிற்காக நீங்கள் பிரீமியம் டேப்லெட்டைத் தேடுகிறீர்களானால், Xiaomi Pad 5 பொருத்தமான தேர்வாகும்.

சியோமி பேட் 5 சிறந்த டிஸ்பிளே உடன் வருகிறது. பெரிய டிஸ்பிளேவில் வாட்ஸ்அப், திரைப்படங்களைப் பார்க்க, செய்திகளைப் படிக்க மற்றும் குடும்பத்துடன் அரட்டையடிக்க ஒரு பெஸ்ட் பட்ஜெட் டேப்லெட் வேண்டுமானால், சியோமி பேட் 5 போதுமானதாக இருக்கும். கூடுதலாக, 8 மெகாபிக்சல் முன் கேமராவுடன் இது வருகிறது. இது 10.95' இன்ச் WQHD+ கொண்ட 1,600 x 2,560 பிக்சல் உடைய LCD டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

இந்த டிஸ்பிளே 120Hz ரெஃப்ரஷ் ரேட் வீதம், கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு மற்றும் டால்பி விஷன் ஆதரவு போன்ற அம்சங்களை ஆதரிக்கிறது. இந்த பேட் 5 ஒரு சிறந்த குவாட்-ஸ்பீக்கர் அமைப்புடன் வருகிறது. பெரும்பாலான பட்ஜெட் டேப்லெட்டுகளில் இரட்டை ஸ்பீக்கர்கள் அல்லது குவாட் அறைகள் கொண்ட இரட்டை ஸ்பீக்கர்கள் இருந்தாலும், பேட் 5ல் நான்கு ஸ்பீக்கர்கள் உள்ளன.

அவை போதுமான பாஸுடன் சிறப்பான ஆடியோ வெளியீட்டை வழங்குகின்றன. கேட்கும் அனுபவத்தை மேம்படுத்த ஸ்பீக்கர்கள் Dolby Atmos ஆதரவையும் பெற்றுள்ளனர். Xiaomi Pad 5 ஆனது Snapdragon 860 சிப்செட் உடன் வருகிறது. இது OnePlus பேடில் உள்ள Dimensity 9000 SoC ஐ விட அதிக சக்திவாய்ந்த சிப்செட்டாக இருக்காது, ஆனால் அது சிறப்பாக செயல்படுகிறது.

இந்த டேப்லெட்டை வாங்க வேண்டாம் என்பதற்கு இரண்டு காரணங்கள் மட்டுமே உள்ளது. இது Android 13 அப்டேட்டை பெறவில்லை. Apple iPad-களைப் போலல்லாமல், Xiaomi வரையறுக்கப்பட்ட இயக்க முறைமை புதுப்பிப்புகளுக்கு உறுதியளித்துள்ளது. இதன் பொருள் பயனர்கள் சமீபத்திய Android புதுப்பிப்புகளை அனுபவிக்க முடியாது. Xiaomi Pad 5 ஸ்டைலஸ் ஆதரவைக் கொண்டுள்ளது. இருப்பினும் முதல் தலைமுறை Xiaomi Pen உடன் இது நாட்டில் கிடைக்கவில்லை.

தற்போது குறைக்கப்பட்டுள்ள விலையில் இந்த சாதனத்தை வாங்கலாமா வேண்டாமா என்பது உங்களுடையா தனிப்பட்ட விருப்பமே.

Best Mobiles in India

English summary
Xiaomi Pad 5 gets price cut 3 reasons to buy and 2 to avoid
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X