ஆண்ட்ராய்டு 11 அறிமுகம்: எந்தெந்த ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கும்.! முழுவிவரம்.!

|

அனைவரும் எதிர்பார்த்த ஆண்ட்ராய்டு 11ஒஸ்(இயங்குதளம்) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புத்தம் புதிய ஆண்ட்ராய்டு வெர்ஷன் ஆனது உங்களது உரையாடல்கள் இணைக்கப்பட்ட சாதனங்கள் தனியுரிமை மற்றும் பலவவற்றை நிர்வகிக்க உதவும் எளிய வழிகளை வழங்குகின்றன.

ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தில்

குறிப்பாக ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தில் இருந்து ஆண்ட்ராய்டு 11-க்கு மறுவதின் வழியாக உங்கள் ஸ்மார்ட்போனில் நீங்கள் கொண்டுவரும் முக்கிய சேர்தல்களில் ஒன்று உரையாடல்களுக்கான பிரத்யேக இடம் ஆகும். சுருக்கமாக சமீபத்திய ஆண்ட்ராய்டுவெர்ஷன் புதிய தனியுரிமை மையப்படுத்தப்பட்ட மாற்றங்களையும் கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

க்சல் 2 மற்றும் அதற்கு பிறகு

இப்போது கூகுள் பிக்சல் 2 மற்றும் அதற்கு பிறகு வெளிவந்த மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 11 வழங்கப்பட்டுவருகிறது. எனவே உங்களிடம் இல்லையென்றாலும் கவலை வேண்டாம், கூடிய விரைவில் ஒன்பிளஸ், ஒப்போ, ரியல்மி, சியோமி உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வரும்.

பள்ளி மாணவன் உருவாக்கிய மொபைல் ஆப்ஸ்! 152 நாடுகளில் பயன்படுத்த கூகிள் அனுமதி!பள்ளி மாணவன் உருவாக்கிய மொபைல் ஆப்ஸ்! 152 நாடுகளில் பயன்படுத்த கூகிள் அனுமதி!

 உங்களிடம் கூகுள் பிக்சல் 2 அல்லது

தற்போது உங்களிடம் கூகுள் பிக்சல் 2 அல்லது அதற்கு பின் வெளிவந்த பிக்சல் போன்கள் இருந்தால் ஆண்ட்ராய்டு 11-ஐ ஓவர் தி ஏரில் பதிவறக்குவதற்கான அறிவிப்பை கூகுள் உங்களுக்கு வழங்கும்.

செட்டிங்ஸ்-சிஸ்டம்-சிஸ்டம் அப்டேட்-க்கு

அதன்படி செட்டிங்ஸ்-சிஸ்டம்-சிஸ்டம் அப்டேட்-க்கு சென்று புதிய ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் அப்டேட்டை சரிபார்க்கலாம். இதில் இணக்கமான அனைத்து பிக்சல் போன்களுக்கான ஆண்ட்ராய்டு 11 ஓடிஏ அப்டேட் பைல்களையும் கூகுள் வெளியிட்டுள்ளது. அதை உங்கள் ஸ்மார்ட்போனில் பதிவிறக்கிய பின்பு, எளிமையாக இன்ஸ்டால் செய்யலாம்.

ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ்-ஐ உங்கள்

குறிப்பாக இந்த ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ்-ஐ உங்கள் போனில் பிளாஸ் செய்ய ஆண்ட்ராய்டு 11 பேக்டரி இமேஜுகளும் கிடைக்கும். மேலும் இந்த அப்டேட் பிளாஷ் செய்வதால் கண்டிப்பாக உங்களது எல்லா டேட்டாவும் அழிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே கண்டிப்பாக பேக்-அப் எடுத்துக்கொள்ளுங்கள்.

1-க்கான சாதனங்களின் பட்டியலை

ஆண்ட்ராய்டு 11-க்கான சாதனங்களின் பட்டியலை குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் கூகுள் பிக்சல் 2, பிக்சல் 3, பிக்சல் 2எக்ஸ்எல், பிக்சல் 3எக்ஸ்எல், பிக்சல் 4, பிக்சல் 4எக்ஸ்எல், பிக்சல் 4ஏ போன்றவை இடம்பெற்றுள்ளன. பின்பு ஒன்பிளஸ் 8, ஒன்பிளஸ் 8ப்ரோ ஆகியவை வட அமெரிக்கா, ஐரோப்பாக மற்றும் ந்தியாவில் ஆக்ஸிஜன்ஓஎஸ் 11-இன் ஓப்பன் பீட்டா மூலம் ஆண்ட்ராய்டு 11 புதுப்பிப்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நூற்றுக்கணக்கான மம்மிகள் எகிப்தில் கண்டுபிடிப்பு! எதிர்பாராத விதமாக அவிழும் மர்ம முடிச்சு!நூற்றுக்கணக்கான மம்மிகள் எகிப்தில் கண்டுபிடிப்பு! எதிர்பாராத விதமாக அவிழும் மர்ம முடிச்சு!

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2, ஒப்போ

அதேபோல் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2, ஒப்போ ரேனோ 3 சீரிஸிற்கான ஆண்ட்ராய்டு 11 ஓபன் அணுக கிடைக்கும். பின்பு ரியல்மி எக்ஸ் 50 ப்ரோவிற்கான ஆண்ட்ராய்டு 11 முன்னோட்ட வெளியீட்டையும் ரியல்மி அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சியோமியின் மி10,மி10 ப்ரோ போன்ற சாதனங்களுக்கும் இந்த புதிய அப்டேட் கிடைக்கும். சுருக்கமாக இனி வரும் புதிய ஸ்மார்ட்போன்களில் இந்த அப்டேட் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Google Announces Android 11 Rollout for Select Xiaomi, Oppo, OnePlus, and Realme Smartphones: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X