Home
News

சியோமி ஸ்மார்ட்போன்கள் ரூ.1க்கு விற்பனை.!!

By Meganathan

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி இந்திய சந்தையில் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்ய இருக்கின்றது. இதனைச் சிறப்பிக்கும் விதமாக மூன்று நாட்களுக்குச் சிறப்பு விற்பனை திருவிழாவிற்கு ஏற்பாடு செய்திருக்கின்றது. இந்தத் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு போட்டிகள், குறுகிய கால விலை குறைப்பு மற்றும் ரூ.1க்குப் பிளாஷ் விற்பனை போன்றவற்றை வழங்க இருக்கின்றது.

ஜூலை 20 ஆம் தேதி துவங்கும் சியோமி திருவிழா மூன்று நாட்களுக்கு நடைபெற இருக்கின்றது. இந்தத் திருவிழாவில் வழங்கப்பட இருக்கும் பிரத்தியேக சலுகைகள் மற்றும் பிளாஷ் விற்பனை குறித்த வரிவான தகவல்கள் ஸ்லைடர்களில்..

பிளாஷ் விற்பனை

பிளாஷ் விற்பனை

பிளாஷ் விற்பனை தள்ளுபடியில் சியோமி நிறுவனம் தனது கருவிகளை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1க்கு விற்பனை செய்ய இருக்கின்றது.

முதல் நாள்

முதல் நாள்

முதல் நாள் அதாவது ஜூலை 20 ஆம் தேதி 10 சியோமி எம்ஐ5 மற்றும் 100 எம்ஐ பவர் பேங்க் (20000mAh) கருவிகளும் ஜூலை 21 ஆம் தேதி சியோமி ரெட்மி நோட் 3 மற்றும் 100 எம்ஐ பேன்ட் கருவிகள் மற்றும் இறுதி நாள் 10 சியோமி எம்ஐ மேக்ஸ் மற்றும் 100 எம்ஐ ப்ளூடூத் ஸ்பீக்கர்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

நேரம்

நேரம்

பிளாஷ் விற்பனை தினமும் மதியம் 2.00 மணிக்கு நடைபெற இருக்கின்றது. இதற்கான முன்பதிவுகள் ஜூலை 19 ஆம் தேதி துவங்குகின்றது. முன்பதிவுகளை முழுமை செய்யச் சியோமி சலுகைகளை ஃபேஸ்புக் தளத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறுகிய காலச் சலுகை

குறுகிய காலச் சலுகை

பிளாஷ் விற்பனையைத் தவிர்த்து சியோமி நிறுவனம் 10000mAh எம்ஐ பவர் பேங்க், எம்ஐ இன்-இயர் கேப்ஸ்யூல் ஹெட்போன் மற்றும் எம்ஐ இன்-இயர் ஹெட்போன் ப்ரோ கோல்டு போன்றவற்றையும் விற்பனை செய்ய இருக்கின்றது.

கேஷ் கூப்பன்

கேஷ் கூப்பன்

இரண்டாம் ஆண்டு நிறைவு போட்டிகளில் கலந்து கொள்பவர்களுக்கு எம்ஐ கேஷ் கூப்பன் மற்றும் இலவச எம்ஐ மேக்ஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விலை குறைப்பு

விலை குறைப்பு

சியோமி ப்ளூடூத் ஸ்பீக்கர் கருவி ரூ.700 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.1,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சலுகை மூன்று நாட்களுக்கு மட்டுமே.

இலவசம்

இலவசம்

சியோமி எம்ஐ 5 கோல்டு நிற கருவியை வாங்கும் போது எம்ஐ இன்-இயர் ஹெட்போன் இலவசமாக வழங்கப்படுகின்றது. சியோமி எம்ஐ 4ஐ கருவியுடன் இலவச யுஎஸ்பி கேபிள் மற்றும் யுஎஸ்பி ஃபேன் வழங்கப்படுகின்றது.

ரெட்மி நோட் 3

ரெட்மி நோட் 3

இதோடு ரெட்மி நோட் 3, 20000mAh பவர் பேங்க் கருவிகளுக்கும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எம்ஐ ஸ்டோர் ஆப் மூலம் கருவிகளை வாங்கும் போது எம்ஐ தொலைக்காட்சி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகை

வருகை

சியோமி நிறுவனம் எம்ஐ3 கருவியை 2014 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்து இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அடியெடுத்து வைத்தது. சீனாவின் ஆப்பிள் என அழைக்கப்படும் சியோமி நிறுவனம் குறைந்த காலத்திலேயே தனக்கென வாடிக்கையாளர்களை ஈர்த்திருக்கின்றது.

இடம்

இடம்

இந்தியா மட்டுமில்லாமல் இதர ஆசிய நாடுகளிலும் சியோமி நிறுவனம் வேகமாக வளர்ந்து வருவது இந்நிறுவன கருவிகளின் விற்பனையை வைத்தே தெரிந்து கொள்ள முடியும்.

Best Mobiles in India

English summary
Xiaomi to Offer Phones and More at Re. 1 Tamil
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X