எம்ஐ ஸ்டோர்களில் நம்பர் 1 எம்ஐ ரசிகர்கள் விற்பனை துவக்கம்: ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.3 ஆயிரம் வரை தள்ளுபடி
தனது ஆன்லைன் ஸ்டோரில் நம்பர் 1 ரசிகர்கள் விற்பனையை வழங்கிய சியோமி, இப்போது அதை நேரடியாக வழங்கும் வகையில், நாடெங்கும் உள்ள தனது எம்ஐ ஸ்டோர்களில் "நம்பர் 1 எம்ஐ ரசிகர்கள் விற்பனையை துவங்கியுள்ளது.

இது குறித்து அந்நிறுவனத்தின் இணையதளத்தில் கூறியுள்ளதாவது, "இது தான் ஆண்டின் சரியான நேரம். மிக குறைந்த விலை, மெகா தள்ளுபடிகள் மற்றும் அதிக சேமிப்புகள் என்று நம்பர் 1 எம்ஐ ரசிகர்கள் விற்பனையை, எம்ஐ ஹோம் கொண்டாடுகிறது. எம்ஐ ஹோமின் மிகப்பெரிய ஷாப்பிங் நிகழ்ச்சியான நம்பர் 1 எம்ஐ ரசிகர்கள் விற்பனையானது, டிசம்பர் 23 இலிருந்து ஜனவரி முதல் தேதி வரை எல்லா எம்ஐ விற்பனையகங்களிலும் நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போதைக்கு சியோமி நிறுவனத்திற்கு 6 இந்திய நகரங்களில் 15 எம்ஐ ஹோம்கள் உள்ளன. இதன்மூலம் ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.3 ஆயிரம் வரையும், மற்ற உதிரிப் பாகங்களுக்கு ரூ.500 வரையும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
சியோமியின் தள்ளுபடி, எம்ஐ மிக்ஸ் 2, எம்ஐ ஏ1, எம்ஐ மேக்ஸ் 2, ரெட்மீ நோட் 4 மற்றும் ரெட்மீ 4 போன்ற மொபைல்போன்களுக்கு அளிக்கப்படுகிறது. இதில் சியோமி எம்ஐ மிக்ஸ் 2க்கு அதிகபட்ச தள்ளுபடி (ரூ.3 ஆயிரம் குறைவு) அளிக்கப்பட்டு, ரூ.32,999க்கு கிடைக்கிறது. எம்ஐ ஏ1 ஸ்மார்ட்போன் ரூ.14,999 இலிருந்து குறைக்கப்பட்டு, ரூ.12,999க்கு விற்கப்படுகிறது. எம்ஐ மேக்ஸ் 2-ன் 32ஜிபி ரேம் வகை ரூ.12,999க்கும், அதன் 64ஜிபி கொள்ளவு கொண்ட பதிப்பு ரூ.14,999க்கும் கிடைக்கிறது.
4ஜிபி ராம் மற்றும் 64ஜிபி ரேம் கொண்ட ரெட்மீ நோட் 4க்கான விலை ரூ.11,999க்கு பதிலாக ரூ.10,999க்கு கிடைக்கிறது. மேலும் 3ஜிபி ராம் மற்றும் 32ஜிபி கொள்ளளவு கொண்ட ரெட்மீ 4, ரூ.500 தள்ளுபடியில், ரூ.8,499க்கு அளிக்கப்படுகிறது. ரெட்மீ 4 (4ஜிபி ராம் மற்றும் 64ஜிபி ரேம்) விலை ரூ.10,999-ல் இருந்து குறைக்கப்பட்டு, ரூ.9,999க்கு அளிக்கப்படுகிறது.
சியோமி நிறுவனம் வெளியிடும் உதிரிப் பாகங்களைப் பொறுத்த வரை, எம்ஐ இன்-இயர் ப்ரோ ஹெச்டி, எம்ஐ வைஃபை ரிப்பீட்டர் 2, ரெட்மீ நோட் 4 சாஃப்ட் கேஸ், ரெட்மீ நோட் 4 ஸ்கீரின் ப்ரோட்டேக்டர், ப்ளூடூத் ஸ்பீக்கர் மினி மற்றும் பல தயாரிப்புகளுக்கு தள்ளுபடி அளிக்கப்படுகிறது.
சியோமி ரவுட்டர் 3சிக்கு ரூ.200 தள்ளுபடி அளிக்கப்பட்டு, ரூ.999 விலையில் அளிக்கப்படுகிறது. எம்ஐ காற்று தூய்மையாக்கி ஃபில்டர் மீது ரூ.500 தள்ளுபடி அளிக்கப்பட்டு, ரூ.1,999 விலையில் கிடைக்கிறது. சியோமி எம்ஐ இன்-இயர் ஹெட்ஃபோன்ஸ் பேஸிக் மீது ரூ.499 விலையிலும், எம்ஐ கேப்சூல் இயர்ஃபோன் ரூ.899க்கும் அளிக்கப்படுகிறது. எம்ஐ ஹெட்ஃபோன்ஸ் கம்ஃபோர்ட் ரூ.2,699க்கு கிடைக்கிறது.
இதை தவிர, இந்த விற்பனையின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தயாரிப்புகளை வெல்லும் வாய்ப்பை அந்நிறுவனம் அளிக்கிறது. இதற்காக நம்பர் 1 எம்ஐ ரசிகர்கள் விஷ் பட்டியல் போட்டியை, சியோமி நடத்துகிறது.
இதன்படி, மேற்கூறிய தள்ளுபடி விற்பனையின் ஒரு பாகமாக, சியோமி அளித்துள்ள பட்டியலில் இருந்து ஒரு தயாரிப்பை பயனர்கள் தேர்ந்தெடுத்து, அதை ஒரு கூப்பனாக சமர்ப்பிக்க வேண்டும். விதிமுறைகளின்படி, ஒரே ஒரு தயாரிப்பை மட்டுமே தேர்ந்தெடுக்கலாம். ஒன்றிற்கும் மேற்பட்ட தயாரிப்புகளைத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூப்பன்கள் இருந்தால் ரத்து செய்யப்படும்.
இதிலிருந்து, வரும் ஜனவரி 5 ஆம் தேதி நடைபெறும் குலுக்கலில், ஒவ்வொரு எம்ஐ ஹோமில் இருந்தும் 5 அதிஷ்டசாலிகளை சியோமி நிறுவனம் தேர்ந்தெடுக்க உள்ளது. இதில் வெற்றிப் பெற்றவர்கள் அளித்த விஷ் பட்டியல் கூப்பனில் இருக்கும் மொபைல் நம்பருக்கு அழைத்து தகவல் தெரிவிக்கப்படும்.
வெற்றிப் பெற்ற நபர், தகுந்த அரசு அங்கீகாரத்துடன் கூடிய அடையாள அட்டையை சமர்ப்பித்து, தங்களின் விஷ் பட்டியல் பரிசை பெற்று கொள்ளலாம். இந்தப் பரிசை, வரும் ஜனவரி 20 ஆம் தேதிக்கு முன் பெற்று கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications