Xiaomi No.1 Mi Fan sale: சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
சியோமி நிறுவனம் Xiaomi No.1 Mi Fan sale என்கிற தலைப்பில் ஸ்மார்ட்போன், லேப்டாப் மற்றும் சில சாதனங்களுக்கு தள்ளுபடி மற்றும் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. மேலும் சியோமி நிறுவனம் அறிவித்துள்ள இந்த சிறப்பு விற்பனை ஆனது வரும் டிசம்பர் 22-ம் தேதி வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையில் சியோமி மொபைல்கள் மீது ரூ.8000 வரையிலான தள்ளுபடி, மி டிவிகளில் ரூ.4000 வரைதள்ளுபடி, லேப்டாப்களில் ரூ.9000 வரை தள்ளுபடி மற்றும் Mi ecosystem-இல் ரூ.6,000 வரை தள்ளுபடியை பெறலாம்என்பது குறிப்பிடத்தக்கது.

சியோமி நிறுவனம் அறிவித்துள்ள இந்த சிறப்பு விற்பனையானது டிசம்பர் 18-ம் தேதி தொடங்கி டிசம்பர் 22-ம் தேதி வரை இருக்கும். பின்பு இந்த விற்பனையின் கீழ் அணுக கிடைக்கும் சிறந்த சலுகைகள் மற்றும் ஒப்பந்தகளின் முழு பட்டியலைப் பார்ப்போம்.

ரெட்மி நோட் 9 சீரிஸ்
- ரெட்மி நோட் 9 மாடல் ரூ.14,999-க்கு பதிலாக ரூ.11,999-க்கு வாங்க கிடைக்கும்.
- ரெட்மி நோட் 9 ப்ரோ மாடல் ரூ.16,999-க்கு பதிலாக ரூ.12,999-க்கு வாங்க கிடைக்கும்.
- ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ரூ.16,999-க்கு வாங்க கிடைக்கும்.
- ரெட்மி 9ஏ மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.6,999-க்கு வாங்க கிடைக்கும்.
- ரெட்மி 9ஐ மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.8,299-க்கு வாங்க கிடைக்கும்.
- ரெட்மி 9 மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.8,999-க்கு வாங்க கிடைக்கும்.
- ரெட்மி 9 ப்ரைம் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.9,999க்கு வாங்க கிடைக்கும்.
- மி பேண்ட் 4 மாடல் ரூ.2,499-க்கு பதிலாக ரூ.1,999-க்கு வாங்க கிடைக்கும்.
- மி 10,000 எம்ஏஎச் பவர் பேங் மாடல் ரூ.1,999-க்கு வாங்க கிடைக்கும்.
- மி டூயல் டிரைவர் இயர்போன்ஸ் ஆனது ரூ.999-க்கு பதிலாக ரூ.599-க்கு வாங்க கிடைக்கும்.
- மி பியர்ட் டிரிம்மர் மாடல் ரூ.1499-க்கு பதிலாக ரூ.1299-க்கு வாங்க கிடைக்கும்.
- மி பியர்ட் டிரிம்மர் 1சி ஆனது ரூ.899-க்கு வாங்க கிடைக்கும்.

ரெட்மி 9 சீரிஸ்

மி நோட்புக் 14 சீரிஸ்
அசத்தலான மி நோட்புக் 14 சீரிஸுக்கும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
மி நோட்புக் 14 256 ஜி / யுஎச்.டி வேரியண்ட் ரூ.41,999-க்கு வாங்க கிடைக்கிறது. அதேபோல் இதன் 512 மாடல் ஆனது ரூ.43,999-க்கும், 512 ஜி / எம்எக்ஸ் 250 மாடல் ரூ.47,999-க்கும் வாங்க முடியும். பின்பு மி நோட்புக் ஹொரைசன் 14 லேப்டாப்பின் விலை ரூ.50,999 முதல் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மி ஆக்சஸெரீஸ்கள்

சியோமி ஸ்மார்ட் வாட்ச்
சியோமி நிறுவனத்தின் மி வாட்ச் ரிவால்வ் ஆனது ரூ.15,999-க்கு பதிலாக ரூ.9,999-க்கு வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications