சியோமி போன் பயனர்களுக்கு ஆபத்து.. பிரௌசரில் பரவும் மால்வேர்.. நீக்குவது எப்படி?
சியோமி (Xiaomi) ஸ்மார்ட்போன் வைத்துள்ள இந்திய மக்களின் கவனத்திற்கு. சியோமி ஸ்மார்ட்போன் பயனர்களின் சாதனங்களில் புதிய மால்வேர் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய மால்வேர் பற்றிய எச்சரிக்கை செய்தியை பற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.
சியோமி (Xiaomi) பயனர்கள் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் குறித்து சர்ச்சைக்குரிய கூற்றை முன்வைத்து வருகின்றனர். இந்த பயனர்களின் கூற்றுப்படி, அவர்களின் சியோமி ஸ்மார்ட்போன்களில் மிண்டாவ் (Mintnav) என்ற மால்வேர் நிறுவப்பட்டுள்ளது. இது குரோம் பிரௌசர் (Chrome browser) ஹேக் செய்யும் என்று கூறப்படுகிறது.

இந்த மால்வேர் ஸ்மார்ட்போன்களை எவ்வாறு பாதித்தது என்பது பற்றி எந்த செய்தியும் இல்லை. ரெடிட் (Reddit) இல் அதைப் பற்றி முதலில் புகாரளித்த பயனர் இது தொடர்பான பதிவை பதிவிட்டிருக்கிறார். அவர் பதிவிட்ட பதிவில், 'நண்பர்களே, எனது எல்லா சியோமி ஸ்மார்ட் போன்களிலும் உள்ள கூகுள் குரோம் (Google Chrome) இன் முகப்புப் பக்கம் "Mintnav" என்ற தளத்திற்கு மாற்றப்பட்டதை நான் சமீபத்தில் கண்டேன்.
இத்தகைய வார்த்தையை கண்டால் அதை மாற்றுவதில் கவனமாக இருங்கள். இந்தத் தளத்தைப் பற்றிய எந்த ஆவணத்தையும் நான் காணவில்லை, எனவே இது ஒரு மோசடி என்று நினைக்கிறேன். சியோமி ஸ்மார்ட்போன்களில் அவ்வப்போது இதுபோன்ற மால்வேர் சிக்கல்களை நான் பலமுறை கண்டுபிடித்துள்ளேன்' என்று கூறியிருக்கிறார்.
இந்த ரெடிட் பதிவு சில மணி நேரத்தில், மற்ற சியோமி ஸ்மார்ட்போன் பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த பதிவை படித்த பிறகு, ட்விட்டர் / எக்ஸில் உள்ள பல பயனர்களும் இந்த மால்வேர் குறித்து பற்றி புகார் அளிக்க துவங்கினர். அதில் ஒரு டிவிட்டர் அல்லது எக்ஸ் பயனர், ஒருவர் இந்தியாவின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சரை நேராக டேக் செய்து குறிப்பிட்டிருந்தார்.
இந்த மால்வேரைப் பற்றிய கூடுதல் தகவல்களைச் சேகரிக்க முயன்றபோது, விரிவான விவரங்கள் இல்லாததைச் சந்தித்தோம். ஒரு பயிற்சி இணையதளம், (Howtoremove Guide) கூறிய தகவல் படி, மின்டனாவ் (Mintnav) பிரௌசர் பயன்பாடுகளின் மால்வேர் வகைக்குள் அடங்கும். மேலும் இது குறிப்பிடத்தக்க நேரடி தீங்கு விளைவிக்காது என்றாலும், இது நிச்சயமாக உங்கள் தினசரி இணைய உலாவல் செயல்பாடுகளுக்கு கணிசமான எரிச்சலையும் இடையூறுகளையும் ஏற்படுத்தும்.

சியோமி பயனர்களை இந்த மால்வேர் கவலை அடைய செய்துள்ளது. பெருமளவில் அறியப்படாத இந்த மால்வேர் சியோமி ஸ்மார்ட்போன்களில் எவ்வாறு நுழைந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. மற்ற பிராண்டுகளின் ஸ்மார்ட்போன் பயனர்களிடமிருந்து Mintnav பற்றி எந்தவொரு புகாரும் இதுவரை பதிவாகவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
எனவே, இந்த மிண்டாவ் மால்வேர் உடன் சியோமி நிறுவனம் எப்படியாவது சம்பந்தப்பட்டிருக்கலாம். சியோமி ஸ்மார்ட்போன்களில் அப்டேட் செய்யப்பட்ட பிறகு இந்த மால்வேர் தோன்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. உங்கள் கூகுள் குரோம் பிரௌசர் இல் இந்த மால்வேரைப் பெறுகிறீர்கள் என்றால், "ஹோம்பேஜ்" என்பதன் கீழ் உங்கள் குரோம் செட்டிங்ஸ் சென்று விருப்பத்தை முடக்கிகொள்ளலாம்.
அல்லது இயல்புநிலை Chrome முகப்புப் பக்கத்திற்கு மாற்றுவதன் மூலம் அதை அகற்றலாம் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. உங்கள் சியோமி போனிலும் இது போன்ற சந்தேகத்திற்குரிய சிக்கல்கள் எதுவும் எழுந்துள்ளதா என்று கண்டறிந்து தெரியப்படுத்துங்கள். உங்கள் ஸ்மார்ட்போனில் நடக்கும் மாற்றங்களை எப்போதும் நீங்கள் கண்காணிப்பது மிகவும் முக்கியமானது.


Click it and Unblock the Notifications








