Home
News

சியோமி இப்படி ஒரு போனை ரிலீஸ் செய்கிறதா? உண்மையா? இது இந்தியா வருமா?

Xiaomi நிறுவனம் மிக விரைவில் புதிய போல்டபில் ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளது. இதை நிறுவனம் சியோமி மிக்ஸ் ஃபோல்ட் 3 (Xiaomi Mix Fold 3) என்ற பெயரில் அறிமுகம் செய்யுமென்று அறிவித்துள்ளது. இந்த போனின் விபரங்களை இப்போது பார்க்கலாம்.

இதற்கு முன் சியோமி நிறுவனம், சியோமி மிக்ஸ் ஃபோல்ட் 2 என இரண்டு போல்டபில் போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால், இந்த சாதனங்கள் இந்தியாவிற்கு வரவில்லை. இது சீனாவிற்கு மட்டும் பிரத்தியேகமானதாக இருந்தது. இருப்பினும், Xiaomi இப்போது மிக்ஸ் ஃபோல்ட் 3 ஐ அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. வரவிருக்கும் Xiaomi போல்டபில் ஸ்மார்ட்போன் பற்றிய எந்த விவரங்களையும் நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை.

சியோமி இப்படி ஒரு போனை ரிலீஸ் செய்கிறதா? உண்மையா? இது இந்தியா வருமா?

இதற்கிடையில், Xiaomi Mix Fold 3 பற்றிய புதிய விவரங்கள் ஆன்லைனில் லீக் செய்யப்பட்டுள்ளது. டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் விவரங்கள் படி, சியோமி மிக்ஸ் ஃபோல்ட் 3 ஆனது சமீபத்திய ஸ்னாப்டிராகன் ஃபிளாக்ஷிப் சிப்செட் உடன் வெளிவரும். Xiaomi Mix Fold 3 இந்த ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்படலாம். இது Samsung Galaxy Z Fold 5 மற்றும் சீனாவில் Oppo Find N2 மாடலுடன் போட்டியிடும் என்று கூறப்படுகிறது.

இது குவாட் கேமரா அமைப்புடன் வரும் என்று கூறப்பட்டுள்ளது. புதிய வாட்டர் டிராப் நாட்ச் உடன் வளைந்த டிஸ்பிளேவை கொண்டிருக்கும். இது டூயல் டிஸ்பிளேவுடன் வெளிவரும். இது ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 சிப்செட்டை கொண்டிருக்கும். இந்த சாதனம் 67W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவையும் வழங்கும். பேட்டரி திறன் பற்றி எந்த வார்த்தையும் இல்லை. முந்தைய மாடலான சியோமி மிக்ஸ் ஃபோல்ட் 2 மாடல் 4500mah பேட்டரியுடன் வந்தது.

Xiaomi இரண்டு டெலிஃபோட்டோ கேமரா சென்சார்களையும் கொண்டிருக்கும். இரண்டு சென்சார்களில் ஒன்று 3.2x ஆப்டிகல் ஜூம் வழங்கும், அதேசமயம் பெரிஸ்கோப் லென்ஸ் 5x ஜூம் வழங்கும். எதிர்பார்த்தபடி, மற்ற இரண்டு சென்சார்கள் வைடு மற்றும் அல்ட்ரா-வைட் சென்சர்களாக செயல்படும். Xiaomi கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் Mix Fold 2 மாடலை அறிமுகப்படுத்தியது. சியோமி மிக்ஸ் ஃபோல்ட் 3 இந்த ஆண்டு இதே காலவரிசையில் தொடங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

சியோமி இப்படி ஒரு போனை ரிலீஸ் செய்கிறதா? உண்மையா? இது இந்தியா வருமா?

சியோமி மிக்ஸ் ஃபோல்ட் 2 பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்புடன் தொடங்கப்பட்டது. இது 8.02' இன்ச் போல்டபில் 2K AMOLED டிஸ்ப்ளே மற்றும் 6.56' இன்ச் கவர் டிஸ்ப்ளேவுடன் வந்தது. இரண்டு டிஸ்பிளேக்களும் 120Hz வரை ரெஃப்ரஷ் ரேட்டை ஆதரிக்கிறது. இது 20MP செல்பி கேமரா, 50எம்பி பிரைமரி கேமரா சென்சார், 13எம்பி அல்ட்ராவைடு கேமரா மற்றும் 2எக்ஸ் ஜூம் கொண்ட 8எம்பி டெலிஃபோட்டோ கேமராவுடன் டிரிபிள் கேமரா அமைப்புடன் வந்தது.

சியோமி மிக்ஸ் ஃபோல்ட் 2 ஆனது ஸ்னாப்டிராகன் 8+ Gen 1 SoC, 4500mAh பேட்டரி மற்றும் டூயல் ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது. இதன் எடை சுமார் 262 கிராம் மற்றும் விரிக்கப்படும் போது 5.4 மிமீ அளவைக் கொண்டுள்ளது. இதற்கு மேம்பட்ட அம்சங்களுடன் Xiaomi Mix Fold 3 வெளிவரும் என்று கூறப்படுகிறது. இது இந்தியா வருமா என்பதை பொறுத்திருந்து தான் நாம் பார்க்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
Xiaomi Mix Fold 3 Foldable Smartphone Details Leaked Ahead Of Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X