இது சாதாரண ஸ்மார்ட்போன் இல்ல.. வேற லெவல் போன்! Xiaomi MIX Fold 2 அறிமுகம் தேதி இது தான்!

|

உங்கள் காலெண்டரில் ஆகஸ்ட் 11 ஆம் தேதியை இப்போதே குறித்து வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், இந்த ஆண்டில் நீங்கள் எதிர்பார்த்த மிக முக்கியமான சியோமி தயாரிப்புகள் எல்லாம் இந்த தேதியில் தான் அறிமுகம் செய்யப்படவுள்ளது. நீண்ட நாட்களாக Xiaomi ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் முக்கியமான தயாரிப்புகள் தான் இந்த Xiaomi MIX Fold 2 ஸ்மார்ட்போன் மற்றும் Xiaomi Pad 5 Pro டேப்லெட் சாதனங்களாகும். இவை, இன்னும் சில சாதனங்களுடன் இந்த வாரம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

Xiaomi MIX Fold 2, Xiaomi Pad 5 Pro டேப்லெட் எப்போது அறிமுகம்?

Xiaomi MIX Fold 2, Xiaomi Pad 5 Pro டேப்லெட் எப்போது அறிமுகம்?

Xiaomi நிறுவனம், வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி சீனாவில் ஒரு நிகழ்வை நடத்துகிறது. இந்த நிகழ்வில் நிறுவனம் Xiaomi MIX Fold 2, Xiaomi Pad 5 Pro டேப்லெட் டிவைஸின் 12.4' இன்ச் மாடல் மற்றும் Xiaomi Buds 4 Pro TWS இயர்பட்ஸ் சாதனம் போன்ற பல தயாரிப்புகளை அறிமுகம் செய்யவுள்ளது. இவை உள்ளூர் நேரப்படி மாலை 7 மணிக்கு அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை ஏராளமான சியோமி ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சியோமி எலெக்ட்டிரிக் வாகனத்தை அறிமுகம் செய்கிறதா?

சியோமி எலெக்ட்டிரிக் வாகனத்தை அறிமுகம் செய்கிறதா?

இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், சியோமி பிராண்ட் தனது முதல் எலெக்ட்ரிக் வாகனத்தையும் இதே தேதியில் வெளியிடக்கூடும் என்ற சில வதந்திகள் வெளியாகியுள்ளது. இந்த அறிமுகம் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டாலும், இது சில காலத்திற்குப் பின்னர் தான் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சரி, இப்போது நாம் டார்கெட் செய்யும் Xiaomi MIX Fold 2 மேட்டருக்கு செல்லலாம்.

IRCTC அலர்ட்: இனி பெர்த் காலியாக இருந்தால் உடனே இன்ஸ்டன்ட் புக்கிங் செய்யலாமா? எப்படி?IRCTC அலர்ட்: இனி பெர்த் காலியாக இருந்தால் உடனே இன்ஸ்டன்ட் புக்கிங் செய்யலாமா? எப்படி?

Xiaomi MIX Fold 2 ஸ்மார்ட்போனில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்?

Xiaomi MIX Fold 2 ஸ்மார்ட்போனில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்?

Xiaomi MIX Fold 2 ஸ்மார்ட்போன் மாடல் கடந்த வருடத்தில் அறிமுகம் செய்யப்பட்ட MIX போல்ட் ஸ்மார்ட்போன் மாடலின் வாரிசாக அறிமுகம் செய்யப்படவுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட டீஸர் புகைப்படத்தில் Xiaomi MIX Fold 2 என்ற வார்த்தைகளுடன் கோல்டு நிறத்தில் இந்த ஸ்மார்ட்போன் காட்சியளிக்கிறது. Xiaomi MIX Fold 2 ஆனது போல்டபில் ஸ்மார்ட்போன் வரிசையில் புதிய மாற்றங்களைக் கொண்டுவரப்போகும் வடிவமைப்புடன் வருகிறது என்று Xiaomi கூறுகிறது.

Xiaomi MIX Fold 2 ஸ்மார்ட்போன் சிறப்பம்சம் (எதிர்பார்க்கப்படும்)

Xiaomi MIX Fold 2 ஸ்மார்ட்போன் சிறப்பம்சம் (எதிர்பார்க்கப்படும்)

வரவிருக்கும் இந்த புதிய போல்டபில் ஸ்மார்ட்போன் பற்றிய சில முக்கியமான தகவல்கள் நமக்குக் கிடைத்துள்ளது. இதை இப்போது தெளிவாகப் பார்க்கலாம். Xiaomi MIX Fold 2 ஸ்மார்ட்போன் டிவைஸ் 6.5' இன்ச் கொண்ட Samsung AMOLED E5 கவர் டிஸ்பிளேவை 21:9 விகிதத்துடன் கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே 2520 x 1080 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 120Hz ரெப்பிரஷ் ரேட் உடன் வருகிறது. இதில் உள்ள மற்றொரு டிஸ்பிளே 120Hz ரெப்பிரஷ் ரேட் உடன் கூடிய 8' இன்ச் Eco2 AMOLED LTPO டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

Infinix Smart 6 HD: சத்தியமா நம்ப முடியல! ரூ.5000 இருந்தா இப்படி ஒரு ஸ்மார்ட்போன் வாங்கலாமா?Infinix Smart 6 HD: சத்தியமா நம்ப முடியல! ரூ.5000 இருந்தா இப்படி ஒரு ஸ்மார்ட்போன் வாங்கலாமா?

சியோமி மிக்ஸ் போல்ட் 2 சாதனத்தின் ஸ்டோரேஜ்

சியோமி மிக்ஸ் போல்ட் 2 சாதனத்தின் ஸ்டோரேஜ்

இந்த புதிய போல்டபில் ஸ்மார்ட்போன் Qualcomm Snapdragon 8 Plus Gen1 சிப்செட் மூலம் இயக்கப்படும். TENAA பட்டியல் வெளியிட்டுள்ள தகவலின் படி, இது 12GB ரேம் + 512GB ஸ்டோரேஜ் கொண்ட ஒரு மாடலாகவும், மற்றும் 12GB ரேம் + 1TB ஸ்டோரேஜ் கொண்ட மாடலாகவும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. MIX Fold 2 டிவைஸ் OIS ஆதரவுடன் கூடிய 50MP Sony IMX766 பிரைமரி கேமராவுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

கேமரா மற்றும் பாஸ்ட் சார்ஜிங் அம்சம்

கேமரா மற்றும் பாஸ்ட் சார்ஜிங் அம்சம்

இந்த பிரைமரி கேமரா, 13MP OmniVision OV13B அல்ட்ரா-வைட் ஸ்னாப்பர் மற்றும் 2x ஆப்டிகல் ஜூம் கொண்ட டெலிஃபோட்டோ கேமரா ஆகியவற்றுடன் இணைந்திருக்கும் என்று கூறப்படுகிறது. வெளியான டீஸர் படத்தின் தகவலை வைத்து பார்க்கையில், போல்டபில் ஸ்மார்ட்போன் லைகா ஆப்டிக்ஸ் இடம் பெற்றுப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. அதேபோல், இந்த டிவைஸ் 67W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் பற்றிய மற்ற விபரங்களை அறிமுகத்திற்குப் பின் அப்டேட் செய்கிறோம்.

Best Mobiles in India

English summary
Xiaomi MIX Fold 2 Launch Date Confirmed Know The Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X