Xiaomi செஞ்சுட்டான்யா.. கலர் டிஸ்பிளே.. 180 நாள் பேட்டரி.. சூப்பரான எலக்ட்ரிக் டூத்ப்ரஷ் ரிலீஸ்.. என்ன விலை?
சியோமி (Xiaomi) நிறுவனம் அதன் கேட்ஜெட்ஸ் வரிசையில் புதிதாக சியோமி மிஜியா சோனிக் வைப்ரேஷன் எலக்ட்ரிக் டூத்ப்ரஷ் ப்ரோ (Xiaomi Mijia Sonic Vibration Electric Toothbrush Pro) என்ற ஸ்டைலான புதிய பல் துலக்கி சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. டூத்ப்ரஷ் என்பது தான் தமிழில் பல் துலக்கி என்று அழைக்கப்படுகிறது. சியோமி நிறுவனம் நமது அன்றாட வாழ்க்கையில் தேவைப்படும் பல சாதனங்களை ஸ்மார்ட் டிவைஸாக மாற்றி, இந்த காலத்திற்கு ஏற்றார் போன்ற பல ஸ்மார்ட் தொழில்நுட்பங்களை இணைத்து நமக்கு வழங்கி வருகிறது.
அந்த வரிசையில் சியோமி நிறுவனம், இப்போது புதிய எலக்ட்ரிக் டூத்ப்ரஷ் (Xiaomi Toothbrush) சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மிஜியா சோனிக் வைப்ரேஷன் எலக்ட்ரிக் டூத்ப்ரஷ் ப்ரோ (Mijia Sonic Vibration Electric Toothbrush Pro) சாதனம் டிசம்பர் 3, 2024 ஆம் தேதி முதல் சீனாவில் விற்பனைக்கு வருகிறது. இதன் விலை இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.2879 ($34) என்ற அசல் விலையுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சியோமி மிஜியா சோனிக் வைப்ரேஷன் எலக்ட்ரிக் டூத்ப்ரஷ் ப்ரோ (Xiaomi Mijia Sonic Vibration Electric Toothbrush Pro):
ஆனால், அறிமுக சலுகையின் ஒரு பகுதியாக, இந்த புதிய மிஜியா சோனிக் வைப்ரேஷன் எலக்ட்ரிக் டூத்ப்ரஷ் ப்ரோ சாதனத்தை நிறுவனம் இப்போது வெறும் ரூ. 2286 ($27) என்ற விலையில் விற்பனை செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புதிய சியோமி எலக்ட்ரிக் டூத்ப்ரஷ் (Xiaomi electric toothbrush) சாதனம் கலர் டிஸ்பிளேவுடன் பல்வேறு ஸ்மார்ட் அம்சங்களை கொண்டுள்ளது. அது என்ன என்பதை விளக்கமாக பார்க்கலாம்.
இந்த புதிய மிஜியா சோனிக் வைப்ரேஷன் எலக்ட்ரிக் டூத்ப்ரஷ் ப்ரோ (Xiaomi Mijia Sonic Vibration Electric Toothbrush Pro) சாதனம் 6 ஆக்சிஸ் மோஷன் சென்சார் உடன் பிரஷ் ஆங்கிள் மற்றும் பொசிஷனை உங்கள் பற்களுடன் கச்சிதமாக பொருத்தி சுத்தம் செய்கிறது. உங்கள் பற்களில் இதுவரை பிரஷ் படாத இடங்களை கூட இந்த எலெக்ட்ரிக் பிரஷ் சென்றடைந்து சுத்தம் செய்கிறது.
4 மோடில் சிறப்பாக சுத்தம் செய்யும் புது வகை எலெக்ட்ரிக் டூத்ப்ரஷ்:
இந்த பிரஷில் அட்வான்ஸ்டு இன்டலிஜெண்ட் வைப்ரஷன் டெக்னாலஜி தொழில்நுட்பம் இருக்கிறது. மிதமான அதிர்வுகளுடன் உங்கள் பற்களுக்கு மசாஜ் செய்வதோடு, அழுக்குகளை நீக்க உதவுகிறது. இந்த பிரஷ் 2 வகையான பிரஷ் ஹெட்ஸ் உடன் வருகிறது. ஒரு பிரஷ் ஹெட் டீப் கிளீனிங் செய்ய அனுமதிக்கும் ரோபஸ்ட் பிரிஸ்டல்களை கொண்டுள்ளது. மறுபுறம், சென்சிட்டிவ் பற்களை கொண்டவர்களுக்காக மற்றொரு பிரஷ் ஹெட் மிகவும் மிருதுவான பிரிஸ்டல்களை கொண்டுள்ளது.
இந்த புதிய மிஜியா சோனிக் வைப்ரேஷன் எலக்ட்ரிக் டூத்ப்ரஷ் ப்ரோ (Xiaomi Mijia Sonic Vibration Electric Toothbrush Pro) சாதனம் 4 வெவ்வ்ரு விதமான பல் துலக்கும் மோட்களை ஆதரிக்கிறது.
1. ஜென்டில் கிளீனிங் மோட் (Gentle cleaning mode): சென்சிடிவ் பற்களை உடையவர்களுக்கான பல் துலக்கும் மோட் இது.
2. ஸ்டாண்டர்ட் கிளீனிங் மோட் (Standard cleaning mode): தினசரி பல் துலக்க ஏற்ற நார்மல் கிளீனிங் மோட் /
3. டீப் கிளீனிங் கிளீனிங் மோட் (Deep cleaning mode): அடர்ந்த கறைகளை சுத்தம் செய்ய மற்றும் பிரஷ் எட்டாத இடங்களுக்குள் புகுந்து சுத்தம் செய்யும் மோட்.
4. இன்டலிஜெண்ட் கிளிங் மோட் (Intelligent cleaning): உங்கள் பற்களின் இயல்பு நிலைக்கு ஏற்றார் போல சுத்தம் செய்யும் பாதுகாப்பான கிளீனிங் மோட் இது.
அடேங்கப்பா 180 நாள் பேட்டரி லைஃப்:
இந்த எலக்ட்ரிக் டூத்ப்ரஷ் (Electric toothbrush) ஜென்டில் மோடில் சுமார் 180 நாட்கள் வரை நீடிக்கும் லாங் லாஸ்டிங் பேட்டரியை கொண்டுள்ளது. அதே ஸ்டாண்டர்ட் மோடில் 100 நாள் நீடிக்கும் ஆயுளை வழங்குகிறது. இந்த சாதனம் முழுமையாக சார்ஜ் ஆக 6 மணி நேரம் எடுத்துக்கொள்கிறது. இது IPX8 கிரேட் வாட்டர்ப்ரூப் பாதுகாப்புடன் வருகிறது என்பதனால் நீரில் தாராளமாக பயன்படுத்தலாம். விரைவில் இந்த சாதனம் இந்தியாவிற்குள் வருகிறது.


Click it and Unblock the Notifications








