Home
News

சூப்பர் ஸ்டார் ஸ்டைல்.. இனி கண் டாக்டர் வேண்டாம்.. இது Xiaomi கூலிங் கிளாஸ் இல்லை.. ஆனா? வேற ஒன்னு செய்யும்..

பல்துலக்கும் எலெக்ட்ரிக் டூத்பிரஷ் (Electric Toothbrush) முதல் படுத்து உறங்க தேவையான ஸ்மார்ட் பெட் (Smart bed) வரை எல்லா விதமான ஸ்மார்ட் கேட்ஜெட்களையும் (Smart Gadgets) சியோமி (Xiaomi) நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இந்த வரிசையில், தற்போது சியோமி நிறுவனம் ஒரு புத்தம் புதிய மற்றும் வித்யாசமான சியோமி மிஜியா ஸ்மார்ட் ஐ மசாஜார் கேட்ஜெட் (Xiaomi Smart Mijia Eye Massager Gadgets) சாதனத்தை கூலிங் கிளாஸ் (Coolers) வடிவில் அறிமுகம் செய்துள்ளது. இப்படி ஒரு கேட்ஜெட் (Gadgets) அவசியம் தானா? என்று உங்களில் சிலர் கேளிக்கையாக கூட கேள்வி கேட்பீர்கள்.

சூப்பர் ஸ்டார் ஸ்டைல்.. இனி கண் டாக்டர் வேண்டாம்.. இது என்ன செய்யும்?

ஆனால், இப்படி ஒரு சாதனம் இந்த காலக் கட்டத்தில் மிகவும் அவசியம் என்கிறது சியோமி நிறுவனம். வேகமாக வளர்ந்து வரும் இந்த டிஜிட்டல் உலகத்தில், பெரும்பாலான மக்கள் ஸ்மார்ட்போன் (Smartphone), லேப்டாப் (Laptop), டெஸ்க்டாப் (Desktop), கம்ப்யூட்டர் (Computer), கேமிங் மானிட்டர் (Gaming Monitors), டிவி (டவ), ஸ்மார்ட் டிவி (Smart Tv) என்று பலதரப்பட்ட டிஸ்பிளேவுடன் அதிக நேரத்தை செலவிடுகின்றனர்.

சியோமி மிஜியா ஸ்மார்ட் ஐ மசாஜார் கேட்ஜெட் (Xiaomi Mijia Smart Eye Massager Gadgets):

இதனால், அவர்களுடைய கண்கள் சோர்வாகின்றன. இன்னும் சிலருக்கு அதிக டிஸ்பிளே டைம் காரணத்தினால் கண்களில் சில கோளாறுகள் கூட ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்த கோளாறுகளை சரி செய்ய சீனா போன்ற நகரங்களில் மருத்துவர்களை பார்ப்பது வழக்கமாக உள்ளது. குறிப்பாக அக்குபஞ்சர் (Acupuncture) டாக்டர்கள் மாத்திரை மருந்து இல்லாமல் கண்களில் உள்ள கோளாறுகளை கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்துவிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இனி மக்களுக்கு கண் சோர்வு அல்லது கண்களில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால், இனி கண் மருத்துவரை (Eye Specilaised doctor) உடனே நாடுவதற்கு பதிலாக சியோமி மிஜியா ஸ்மார்ட் ஐ மசாஜார் சாதனத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று சியோமி விளம்பரம் செய்துள்ளது. காரணம், இந்த மிஜியா ஐ மசாஜார் அக்குபஞ்சர் அம்சத்துடன் இன்னும் ஏராளமான அம்சங்களை பேக் செய்துள்ளது. இது பற்றிய கூடுதல் விபரங்களை இப்போது பார்க்கலாம்.

சூப்பர் ஸ்டார் ஸ்டைல்.. இனி கண் டாக்டர் வேண்டாம்.. இது என்ன செய்யும்?

இந்த ஐ மசாஜார் மனிதர்களின் கண் அமைப்பிற்கு ஏற்றார் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 7 பகுதிகளாக (regions) மற்றும் 4 ஏர் வால்வ்ஸ்களுடன் (air valves) வருகிறது. இந்த வால்வுகள் உங்கள் கண்களில் உள்ள 8 அக்குபஞ்சர் புள்ளிகளை ஆக்டிவேட் செய்து, மசாஜ் செய்கிறது. இதனால், உங்கள் கண்களில் இரத்த ஓட்டம் சீராக்கப்பட்டு, உங்கள் கண்களில் ஏற்பட்ட சோர்வுகள் நீங்குகிறது.

இந்த மசாஜார் 5 பெரிய ஏர் பேக் (Air bags) மற்றும் 4 சிறிய ஏர் பேக் உடன் வருகிறது. இது 3 லெவல் அட்ஜஸ்ட்மென்ட் உடன் வெவ்வேறு விதமான அழுத்தத்தை கண்களில் வழங்குகிறது. இந்த மசாஜாரின் மைய பகுதி டிரான்ஸ்பரென்ட் கண்ணாடியால் (Transparent glass) ஆனது என்பதனால், உங்களால் மசாஜ் பெரும் நேரத்தில் வெளியே என்ன நடக்கிறது என்பதையும் பார்க்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

சியோமி மிஜியா ஐ மசாஜார் சாதனம் விலை என்ன? (Xiaomi Mijia Smart Eye Massager Price):

இந்த சியோமி மிஜியா ஐ மசாஜார் சாதனம் 3 விதமான வெப்பத்துடன் வருகிறது. இது கண்களுக்கு கதகதப்பான வெப்பத்துடன் மசாஜ் செய்து, உங்களை கிறங்கடிக்க செய்கிறது. இந்த மசாஜார் சாதனம் Xiaomi Mi Home App கட்டுப்பாட்டுடன் வருகிறது. இந்த சாதனத்தை நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போன் மூலமாகவும் கட்டுப்படுத்தலாம். இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.5,220 ஆகும். இந்தியாவிற்கு இது விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Mijia Eye Massager Launched With 8 Acupuncture Point Activation and 3 Warming Massage Feature
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X