மார்க்கெட்டே மிரளுது..Xiaomi வெளியிட்ட ஸ்மார்ட் போர்வை.. இது என்ன செய்யும்? இதன் விலை என்ன?
சியோமி (Xiaomi) நிறுவனம் சியோமி மிஜியா ஸ்மார்ட் எலெக்ட்ரிக் ப்ளாங்கெட் (Xiaomi Mijia Smart Electric Blanket) என்ற வித்தியாசமான ஸ்மார்ட் போர்வையை அறிமுகம் செய்துள்ளது. இது டூயல்-ஜோன் ஹீட்டிங் தொழில்நுட்பத்துடன் வருகிறது. இதன் விலை மற்றும் முழு விபரம் இங்கே.
உறக்கம் (Sleep) என்பது மனித உடல் (Human body) சீராக செயல்படுவதற்கு முக்கியமான ஒன்றாகும். சரியான உறக்கம் இல்லையென்றால் உடல் நிலை, மன நிலை என்று இரண்டுமே பாதிப்படையும். ஒரு மனிதன் சரியான உறக்கத்தை பின்பற்ற உண்ணும் உணவு (Food), சுற்றுப்புறம் (Surrounding), வெப்பநிலை (Temprature) ஆகியவை முக்கிய காரணிகளாகும்.

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பிறகு மனிதனின் உறக்கத்தை சீராக்க உதவி செய்யும் வகையில் ஃபேன் (Fan), ஏசி (Air Conditioner), (AC) போன்ற சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பத்தின் (Technology) அடுத்த கட்ட வளர்ச்சியாக, ஸ்மார்ட்போன்கள் (Smartphone) தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக இருக்கும் சியோமி (Xiaomi) ஒரு புதிய கண்டுபிடிப்பு ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது.
சியோமி மிஜியா ஸ்மார்ட் எலெக்ட்ரிக் ப்ளாங்கெட் (Xiaomi Mijia Smart Electric Blanket):
குளிர்காலங்களில் இதமாக உறங்க உதவும் இந்த கண்டுபிடிப்பு பற்றிய சுவாரசியமான தகவல்கள் இதோ. உலகின் பல பகுதிகளில் குளிர்காலங்களில் வெப்பநிலை மைனஸில் இருக்கும், அந்த மாதிரியான சூழ்நிலையை சமாளிக்க அறையை வெப்பமூட்டும் கருவியை அந்த பகுதி மக்கள் பயன்படுவது வழக்கம். இதனை மனதில் கொண்டு வெப்பமூட்டும் ஸ்மார்ட் படுக்கை விரிப்பை (Smart Blanket) சியோமி நிறுவனம் கண்டுபிடித்து அறிமுகம் செய்யவுள்ளது.
சியோமி மிஜியா ஸ்மார்ட் எலெக்ட்ரிக் ப்ளாங்கெட் (Xiaomi Mijia Smart Electric Blanket) என்று அழைக்கபடும் இந்த படுக்கை விரிப்பின் அம்சங்கள் பற்றி தெரிந்தால் நீங்களே அசந்து போவேர்கள். 140W பவர் மூலம் இயக்கப்படும் இந்த ப்ளாங்கெட் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பகுதிகளிலும் தனித்-தனியாக வெப்பநிலையை செட் செய்துகொள்ளலாம்.
இரண்டு வித்தியாசமான விருப்பங்கள் இருப்பவர்கள் கூட இணைந்து இந்த ப்ளாங்கெட்டை சுலபமாக பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பது இதன் ஒரு சிறப்பம்சம் என்றே கூறலாம். பொதுவாக மின்னணு சாதனங்களை பயன்படுத்த சிறிது அச்சம் எப்போதும் இருக்கும். அதுவும் இந்த ப்ளாங்கெட்டில் இரவு முழுவதும் படுத்து உறங்க வேண்டும் என்றிருக்கும் போது, நமது மனதில் 1000 எதிர்மறை எண்ணங்கள் தோன்றி மறையும்.
அத்தகைய கவலை எதுவும் வேண்டாம் என்று சியோமி கூறுகிறது. இதில் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மூன்று அடுக்கு இன்சுலேஷன் (Insulation) கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், அதிக வெப்பநிலையை கண்டறியும் இயல்பு (over-temperature), ஷாட் சர்க்யூட் (short circuit), ஓவர்லோட் (overload), ஓவர் கரண்ட் (overcurrent), லைட்டனிங் ஸ்ட்ரைக் (lightning strike), சைல்டு லாக் (child lock protection) போன்ற பாதுகாப்பு அம்சங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
ஆட்டொமெடிக் ஸ்டான்பை மோடில் (Automatic Standby mode) சுமார் 15 மணிநேரம் வரை இந்த ப்ளாங்கெட் செயல்படுமாம். இதில் இருக்கும் மற்றொரு சிறப்பம்சம், இதன் ஹீட்டிங் வயர் 25000 மடங்கு வளையும் தன்மையுடன் உருவாக்கப்பட்டிருப்பது. இதன் காரணமாக வாஷிங் மெஷினில் கூட இந்த ப்ளாங்கெட்டை சலவை செய்யலாம். இந்த ஸ்மார்ட் ப்ளாங்கெட்டை மிஜியா ஆப் மூலம் சியோமி ஸ்மார்ட் டிவைஸ்களுடன் இணைத்து கண்ட்ரோல் செய்ய முடியும்.
அது மட்டுமின்றி வாய்ஸ் கண்ட்ரோல் அம்சமும் உள்ளது. இந்த ப்ளாங்கெட்டில் ஆறு லெவல் வெப்பநிலை செட்டிங் மற்றும் கிருமிகளை அகற்றுவது, ட்ரையிங் மோட், டிஜிட்டல் ஹான்ட் கன்ட்ரோல் ஆகிய அம்சங்கள் உள்ளது. பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட இந்த ஸ்மார்ட் ப்ளாங்கெட் 32 டாலருக்கு (சுமார் ரூ. 2600) விற்பனை செய்யப்படும். ஆனால் 20 முதல் 27 டிசம்பர் வரை 27 டாலருக்கு (ரூ. 2200) இந்த ப்ளாங்கெட்டை முன்பதிவு செய்துகொள்ளலாம். இந்தியாவுக்கு இது விரைவில் வரும்.


Click it and Unblock the Notifications








