யாரு சாமி நீ.. Xiaomi ஸ்மார்ட் டம்பெல்ஸ் LED டிஸ்பிளேவுடன் அறிமுகம்.. இது ரொம்ப புது ஐடியாவா இருக்கே..
சியோமி (Xiaomi) நிறுவனம் அதன் ஸ்மார்ட் கேட்ஜெட்ஸ் வரிசையில் மிகவும் புதுமையான ஒரு ஸ்மார்ட் டம்பெல்ஸ் (Smart Dumbbells) சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. ஆம் மக்களே, சரியாக தான் படித்தீர்கள். சியோமி நிறுவனம் மிஜியா ஸ்மார்ட் டம்பெல்ஸ் (Mijia Smart Dumbbells) என்ற புதிய கருவியை உலகிற்கு அறிமுகம் செய்துள்ளது. உடற்பயிற்சி (Excercise) செய்ய உதவும் இரும்பினால் ஆன டம்பெல்ஸ்களை தான் இதுவரை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால், இப்போது உங்கள் ஒட்டுமொத்த உடற்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி முறைகளை கண்காணித்து, உங்களுக்கு அட்வைஸ் வழங்கும் ஒரு டம்பெல்ஸ் சாதனத்தை தான் சியோமி உருவாக்கியுள்ளது.
சியோமி மிஜியா ஸ்மார்ட் டம்பெல்ஸ் (Xiaomi Mijia Smart Dumbbells) சாதனம் ஒரு புதுமையான அதிநவீன ஹோம் வொர்க் அவுட் ஸ்மார்ட் கேட்ஜெட்ஸ் சாதனமாக வெளிவந்துள்ளது. இந்த ஸ்மார்ட் டம்பெல்ஸ் சாதனம் மிகவும் துல்லியமான தகவலை கணிக்கும் சிக்ஸ் ஆக்சிஸ் மோஷன் சென்சார் (high-precision six-axis motion sensor), 3 ஆக்சிஸ் கிரோஸ்கோப் (three-axis gyroscope) மற்றும் 3 ஆக்சிஸ் ஆக்சிலேரோமீட்டர் (three-axis accelerometer) அம்சங்களுடன் வருகிறது.

யாரு சாமி நீ.. Xiaomi ஸ்மார்ட் டம்பெல்ஸ் LED டிஸ்பிளேவுடன் அறிமுகம்:
இந்த சியோமி ஸ்மார்ட் டம்பெல்ஸ் (Xiaomi Smart Dumbbells) சாதனம் மிகவும் துல்லியமான மூவ்மெண்ட் டிராக்கிங் (Accurate Movement tracking) அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டம்பெல்ஸ் இல் உள்ள அதிநவீன சென்சார் தொழில்நுட்பத்தின் மூலம் உங்கள் உடற்பயிற்சி டேட்டா (exercise data) சேகரிக்கப்பட்டு, அது Mi ஹோம் ஆப்ஸ் (Mi Home App) மூலம் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சியோமி மிஜியா ஸ்மார்ட் டம்பெல்ஸ் (Xiaomi Mijia Smart Dumbbells) சாதனம் 32mm டையாமீட்டர் அளவுடன் ஆன்டி-ஸ்லிப் மேட் பினிஷ் (anti-slip matte finish) உடன் மிகவும் உறுதியான கிரிப்பை வழங்குகிறது. இந்த டம்பெல்ஸ் வேகமாக எடையுடன் இணையும் ஒரு பிரத்தியேகமான அம்சத்துடன் இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 1 கிலோ அல்லது 2 கிலோ வரையிலான எடையை நீங்கள் சில நொடியில் மாற்றிக்கொள்ள முடியும்.
சியோமி மிஜியா ஸ்மார்ட் டம்பெல்ஸ் (Xiaomi Mijia Smart Dumbells):
இதை எளிமையாக செய்து முடியா, சியோமி நிறுவனம் டிட்டாச் செய்ய அனுமதிக்கும் 0.5 கிலோ எடை கொண்ட வெயிட் பிளாக்ஸ்களை (0.5kg detachable weight blocks) கொண்டுள்ளது. இவற்றை தனியாக நீங்கள் வாங்கிக்கொள்ளலாம். இந்த ஸ்மார்ட் டம்பெல்ஸ் LED டாட் மேட்ரிக்ஸ் டிஸ்பிளேவுடன் (LED dot-matrix display) வருகிறது. இது நிகழ்நேரத்தில் உங்கள் உடற்பயிற்சி தொடர்பான மெட்ரிக்ஸ் (exercise metrics) தகவல்களை காண்பிக்கிறது.
நீங்கள் எத்தனை முறை டம்பெல்ஸை பயன்படுத்தினீர்கள், எத்தனை முறை தூக்கி இறக்கியுள்ளீர்கள், எவ்வளவு கலோரிகளை நீங்கள் பயன்படுத்தியுள்ளீர்கள் என்பது போன்ற பல தகவல்களை இந்த டம்பெல்ஸ் உங்களுக்கு காண்பிக்கிறது. இந்த டம்பெல்ஸ் இரண்டு AAA பேட்டரி(AAA batteries) உடன் 177 நாட்கள் நீடிக்கும் பேட்டரி ஆயுளை (177 days of usage) வழங்குகிறது. இது ஸ்லீக் பெய்ஜ் நிறத்தில் வெளிவந்துள்ளது.
சியோமி மிஜியா ஸ்மார்ட் டம்பெல்ஸ் விலை (Xiaomi Mijia Smart Dumbbells Price):
இன்னும் பல வித்தியாசமான அம்சங்களை இந்த சியோமி மிஜியா ஸ்மார்ட் டம்பெல்ஸ் சாதனம் பேக் செய்துள்ளது. இந்த டம்பெல்ஸ் தற்போது 2 விதமான காண்பிகிரேஷன் உடன் வருகிறது. இதில் 2Kg வெர்ஷன் $14 டாலர் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 1 கிலோ எடை கொண்ட 2 டம்பெல்ஸ்கள் கிடைக்கிறது. மறுபுறம், இதே டம்பெல்ஸ் உடன் கூடுதல் வெயிட் பிளாக்ஸ்கள் சேர்த்து கிடைக்கிறது.
4 எண்ணிக்கை கொண்ட 0.5Kg எடை கொண்ட இணைப்புடன் இந்த Mijia Smart Dumbbells $22 டாலர் விலையுடன் வாங்க கிடைக்கிறது. இந்திய மதிப்பின் கீழ், இதன் விலை முறைப்படி ரூ. 1199 மற்றும் ரூ. 1885 விலையில் விற்பனைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications








