Home
News

Xiaomi வாட்டர் கன்.. நொடிக்கு 25 முறை ஹை-ஸ்பீட் ஷூட்டிங்.. பவர்புல் பர்ஸ்ட் மோட் உடன் இந்தியா வருகிறதா?

சியோமி இந்தியா (Xiaomi India) நிறுவனத்தின் மார்க்கெட்டிங் எக்சிகியூடிவ் வெளியிட்ட புதிய எக்ஸ் பக்க போஸ்ட் இந்தியர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட சியோமி வாட்டர் கன் (Xiaomi water gun) இப்போது ஒரு இந்தியர் கையில் உள்ளது.

சியோமி வாட்டர் கன் (Xiaomi Water Gun): மார்ச் மாத இறுதியை நெருங்கிவிட்டோம். இன்னும் மூன்று நாட்களில் ஹோலி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. மார்ச் 25, 2024 ஹோலி பண்டிகை கொண்டாடப்பட இருப்பதை முன்னிட்டு, சியோமி நிறுவனத்திடம் இருந்து ஒரு புதிய போஸ்ட் எக்ஸ் பக்கம் வழியாக வெளிவந்துள்ளது. எக்ஸ் என்பது டிவிட்டர் தளத்தின் மாற்றப்பட்ட புதிய பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.

Xiaomi வாட்டர் கன்.. நொடிக்கு 25 முறை ஹை-ஸ்பீட் ஷூட்டிங் பவர்புல் கன்

சியோமி மிஜியா பல்ஸ் வாட்டர் கன் (Xiaomi Mijia Pulse Water Gun):

எக்ஸ் பக்கம் வழியாக சியோமி இந்தியாவின் விற்பனை நிர்வாகி சந்தீப் சர்மா அவர் கையில் சியோமி மிஜியா பல்ஸ் வாட்டர் கன் (Xiaomi Mijia Pulse Water Gun) உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். சியோமி மிஜியா பல்ஸ் வாட்டர் கன் பற்றி தெரியாதவர்களுக்கு, இதுவொரு ஆட்டோமேட்டிக் ஷூட்டிங் வாட்டர் கன் ஆகும். இதில் 3 ஷூட்டிங் மோட் உள்ளது.

சூப்பர் ஹீரோ மூவி தோற்றத்தில் வாட்டர் கன்: இந்த சியோமி மிஜியா பல்ஸ் வாட்டர் கன் சாதனம் ஹை-டெக் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த டிசைன் ஒரு சூப்பர் ஹீரோ திரைப்படத்தில் இருந்து தழுவிய உள்ளடக்கத்தை பெற்றுள்ளது. இந்த வாட்டர் கன் பார்ப்பதற்கே மிகவும் கூலான பியூச்சர்ஸ்டிக் தோற்றத்தை கொண்டுள்ளது. இதன் தோற்றம் மட்டும் பியூச்சர்ஸ்டிக் இல்லை, இதன் செயல்பாடுகளும் பியூச்சர்ஸ்டிக்காக தான் இருக்கிறது.

10-15 வினாடியில் வாட்டர் ரீசார்ஜ்: இந்த சியோமி மிஜியா பல்ஸ் வாட்டர் கன் சிங்க் செய்யப்பட்ட ஷூட்டிங் லைட்டிங் உடன் வருகிறது. அதாவது இந்த வாட்டர் துப்பாக்கியில் இருந்து நீங்கள் சுடும் பொழுது, உங்கள் சுடுதலுக்கு ஏற்றார் போல இந்த வாட்டர் கன் இல் லைட்டிங் விளக்குகள் ஒளிக்கும். இந்த வாட்டர் கன் உள் இருக்கும் வாட்டர் டேங்க் வெறும் 10 - 15 வினாடிகளுக்குள் ஆட்டோமேட்டிக் உறிஞ்சும் மோட்டார் மூலம் நிரப்பப்படுகிறது.

Xiaomi வாட்டர் கன்.. நொடிக்கு 25 முறை ஹை-ஸ்பீட் ஷூட்டிங் பவர்புல் கன்

3 ஷூட்டிங் மோட்: இந்த வாட்டர் கன் இல் தண்ணீர் நிரப்பப்பட்ட பிறகு, இதை நீங்கள் 3 சுடுதல் மோட் மூலம் சுட முடியும். இடைவெளி இல்லாமல் சுட அனுமதிக்கும் ஒரு கன்டினியூயஸ் ஷூட்டிங் மோடை கொண்டுள்ளது. பிறகு, குறிவைத்து தாக்கும் சிங்கிள் பிரீசைஸ் டார்கெட் மோடை கொண்டுள்ளது. இறுதியாக மோட்டார் சார்ஜ்ஜை ஒன்று திரட்டி ஒரே ஷாட்டில் சுட அனுமதிக்கும் பவர்புல் பர்ஸ்ட் மோடையும் இது கொண்டுள்ளது.

வினாடிக்கு 25 முறை ஷூட்டிங் ஸ்பீட்: இந்த சியோமி மிஜியா பல்ஸ் வாட்டர் கன் 9 முதல் 9 மீட்டர் தூரம் வரை சுட கூடிய தன்மையை கொண்டுள்ளது. இது ஒரு நொடிக்கு 25 முறை வேகமாக சுட கூடிய சக்தியை கொண்டுள்ளது. இந்த சியோமி மிஜியா பல்ஸ் வாட்டர் கன் ஒரு விளையாட்டு கேட்ஜெட் ஆகும். இது சீனாவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தியாவில் அறிமுகமா? இதை வைத்து மக்கள் கார் கழுவுவது, வீட்டை சுத்தம் செய்வது போன்ற வேடிக்கையான செயல்களை செய்த வீடியோகளும் இணையத்தில் வைரல் ஆனது. இந்த சியோமி மிஜியா பல்ஸ் வாட்டர் கன் இப்போது இந்திய சியோமி விற்பனை நிர்வாகி கையில் கிடைத்துள்ளதனால், இதன் அறிமுகம் இந்தியாவிலும் நிகழும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு: காரணம், சந்தீப் சர்மா வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில் "இந்த சூப்பர் கூல் Xiaomi தயாரிப்பு என் கைகளில் கிடைத்துள்ளது. வரும் வெள்ளிக்கிழமை மிகவும் வேடிக்கையாக இருக்க போகிறது. விரைவில் கூடுதல் தகவல்களை வழங்குகிறேன் அதுவரை காத்திருங்கள்" என்று குறிப்பிட்டிருக்கிறார். இது இந்த சாதனத்தின் அறிமுகத்தை குறிப்பதாக சியோமி ரசிகர்கள் எதிர்பார்புடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Mijia Pulse Water Gun Spotted In Hands Of Xiaomi India Marketing Executive Sandeep Sarma
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X