Xiaomi தாறுமாறு.. வெறும் ரூ.2000 விலையில் இப்படி ஒரு மாடர்ன் வேக்யூம் கிளீனர்-ஆ? எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
சியோமி (Xiaomi) நிறுவனம் புதிதாக மிஜியா கார்ட்டட் வேக்யூம் கிளீனர் (Mijia Corded Vacuum Cleaner) சாதனத்தை சீன சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. அப்கிரேட் செய்யப்பட்ட சைக்லோன் மோட்டார் (upgraded cyclone motor) உடன் அதிகப்படியான சக்ஷன் பவர் உடன் இந்த புதிய சியோமி மிஜியா கார்ட்டட் வேக்யூம் கிளீனர் (Xiaomi Mijia Corded Vacuum Cleaner) சாதனத்தை நிறுவனம் மிகவும் குறைந்த விலையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சியோமி வேக்யூம் கிளீனர் விலை என்ன? மற்றும் இதன் அம்சங்கள் என்ன என்பதை தெரிந்துகொள்ளலாம் வாங்க.
சியோமி நிறுவனம் தனது தயாரிப்பு சாதனங்களின் பட்டியலில் புதிதாக சியோமி மிஜியா கார்ட்டட் வேக்யூம் கிளீனர் (Xiaomi Mijia Corded Vacuum Cleaner) என்ற குட்டி சைஸ் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த சாதனம் சியோமி நிறுவனத்தால் 20222 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட வேக்யூம் கிளீனர் மாடலில் இருந்து பல்வேறு மேம்படுத்தல்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Xiaomi தாறுமாறு.. வெறும் ரூ.2000 விலையில் இப்படி ஒரு மாடர்ன் வேக்யூம் கிளீனர்-ஆ?
சியோமி வெளியிட்டுள்ள தகவலின் படி, புதிய மிஜியா கார்ட்டட் வேக்யூம் கிளீனர் (Mijia Corded Vacuum Cleaner) சாதனம் 16kPa சக்ஷன் பவருடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் அப்கிரேட் செய்யப்பட்ட சைக்லோனிக் ஏர்ஃப்ளோ டிசைன் (upgraded cyclonic airflow design) மற்றும் 600W ஹை-பெர்பார்மென்ஸ் மோட்டார் (600W high-performance motor) போன்ற அம்சங்களை சியோமி நிறுவனம் வழங்கியுள்ளது.
இந்த சாதனம் பல்வேறு வகையான தூசி, குப்பை மற்றும் துகள்களை பல விதமான இடங்களில் இருந்து சுத்தம் செய்யும் திறனை கொண்டுள்ளது. இந்த மிஜியா வேக்யூம் கிளீனர் சாதனம் பார்ப்பதற்கு துப்பாக்கி போன்ற தோற்றத்தை (gun-style design) கொண்டுள்ளது. இதை கையில் பிடித்து சுத்தம் செய்ய எளிதாக இருக்கும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இது 0.5L அளவு கொண்ட டஸ்ட் கப் (0.5L transparent dust cup) பிரிவை கொண்டுள்ளது.
மிஜியா கார்ட்டட் வேக்யூம் கிளீனர் (Mijia Corded Vacuum Cleaner):
ஒரு கையில் மிகவும் எளிமையாக டஸ்ட் கப்பை பயனர்கள் கழட்டி மட்டும் படி சியோமி இந்த டஸ்ட் கப்பை உருவாக்கியுள்ளது. இந்த சாதனம் 5 லேயர் பில்டரேஷன் சிஸ்டத்துடன் (5-layer filtration system) வருகிறது. இது 99.7% தூசி துகள்களை உறிஞ்சும் திறன் கொண்டுள்ளது. இது 0.3 மைக்ரான் அளவு கொண்ட தூசியை கூட உறுஞ்சு சுத்தம் செய்யும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கம் போல, ஒரு வேக்யூம் கிளீனர் என்றாலே, அதனுடன் வழங்கப்படும் அட்டச்மெண்ட் கருவிகள் முக்கியமானவை. இந்த மிஜியா கார்ட்டட் வேக்யூம் கிளீனர் (Mijia Corded Vacuum Cleaner) சாதனம் ப்ளோர் பிரஷ், கிரேவிஸ் நாசல், பிரிஸ்டல் பிரஷ் போன்ற இணைப்பு கருவிகளுடன் வருகிறது. இந்த வேக்யூம் கிளீனர் சாதனம் மிகவும் உறுதியான ABS மேட்டரில் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
சியோமி மிஜியா கார்ட்டட் வேக்யூம் கிளீனர் விலை (Xiaomi Mijia Corded Vacuum Cleaner Price):
சியோமி அறிமுகம் செய்துள்ள இந்த புதிய மிஜியா கார்ட்டட் வேக்யூம் கிளீனர் (Mijia Corded Vacuum Cleaner) சாதனத்தின் விலை பற்றி பேசுகையில், சீன சந்தையில் இந்த சாதனத்தை சியோமி நிறுவனம் வெறும் 189 யுவான் (yuan) என்ற விலையில் அறிமுகம் செய்துள்ளது. அமெரிக்க மதிப்பில் இதன் விலை வெறும் $26 ஆகும். இந்திய மதிப்பில் இதன் விலை வெறும் ரூ.2,232 மட்டுமே. இந்தியாவில் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








