இருக்கு பெரிய ட்ரீட் இருக்கு: அதுமட்டும் வரல இதுவும் வருதாம்- வேறலெவல்., சியோமி ரசிகர்களே என்ஜாய்!

|

சியோமி 12 டிசம்பர் 12 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படலாம் எனவும் சியோமி 12 ஸ்னாப்டிராகன் 898-ல் இயங்கக்கூடும் சாதனமாக இருக்கும் எனவும் தொடர்ந்து வதந்திகள் பரவின. இது குவால்காம்-ன் சமீபத்திய சிப்செட் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சியோமியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சியோமியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி 12-ல் இருந்து வரவிருக்கும் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் குறித்து தொடர்ந்து பல வதந்திகள் கசிந்து வருகின்றன. இருப்பினும் தற்போது வரை சியோமியிடம் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்றாலும் தயாரிப்பாளர்களிடம் இருந்து சமீபத்திய சாதனம் டிசம்பர் 12 ஆம் தேதி அன்று வெளியிடப்படலாம் என சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. சியோமி 12 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 898-ல் இயங்கக்கூடும் என கடந்த கால வதந்திகள் தெரிவித்தன. சியோமி 12 ஸ்மார்ட்போந் ஸ்னாப்டிராகன் 898 மூலம் இயக்கப்படும் என வதந்தி தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குவால்காம்-ன் சமீபத்திய சிப்செட் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சியோமி 12 ஸ்மார்ட்போன் உடன் சியோமி 12 எக்ஸ் ஸ்மார்ட்போனும் அறிமுகப்படுத்தப்படும் என வதந்திகள் தெரிவிக்கின்றன.

சியோமி 12 மற்றும் சியோமி 12 எக்ஸ்

சியோமி 12 மற்றும் சியோமி 12 எக்ஸ்

சியோமி 12 மற்றும் சியோமி 12 எக்ஸ் சாதனத்தின் எதிர்பார்க்கப்படும் விவரக்குறிப்புகள் குறித்து பார்ப்பதற்கு முன்னதாக டிசம்பர் நடுப்பகுதியில் அதாவது சீனாவில் நடக்கும் ஷாப்பிங் திருவிழாவான டிசம்பர் 12 அன்று வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குவால்காம் அதன் வரவிருக்கும் ஸ்னாப்டிராகன் 898-ஐ அறிமுகப்படுத்த இருக்கிறது. அறிக்கைகளின்படி, சியோமி 12 ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் எஸ்எம்8450-ல் இயங்கும் எனவும் ஸ்னாப்டிராகன் 898 ஆக அது இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

50 மெகாபிக்சல் பின்பக்க கேமரா

50 மெகாபிக்சல் பின்பக்க கேமரா

சியோமி 12 ஸ்மார்ட்போனானது 50 மெகாபிக்சல் பின்பக்க கேமரா உள்ளிட்ட பலவற்றைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 50 மெகாபிக்சல் சாம்சங் ஜிஎந்5 முதன்மை கேமராவை கொண்டிருக்கும் என ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இது 200 மெகாபிக்சல் ஸ்னாப்பரைக் கொண்டிருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. முதன்மை கேமராவுடன் கூடுதலாக 48 மெகாபிக்சல் கேமரா, 2 எக்ஸ் 5 எக்ஸ் மற்றும் 10 எக்ஸ் ஜூம் திறன் உடன் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதில் பாதுகாப்பு அம்சத்துக்கு இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் வசதி இருக்கும் எனவும கூறப்படுகிறது.

டிசம்பர் 12 அன்று அறிமுகம்

டிசம்பர் 12 அன்று அறிமுகம்

சியோமி 12 எக்ஸ் டிசம்பர் 12 அன்று சியோமி 12 உடன் வெளியிடப்படும் என எதிர்பார்க்கபடுகிறது. சியோமி 12 எக்ஸ் ஸ்மார்ட்போன் 6.28 இன்ச் (1,080x2,400 பிக்சல்கள்) OLED டிஸ்ப்ளே உடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஓசி மூலம் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எம்ஐ11எக்ஸ் தொடர்ச்சியாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட்போனில் உள்ள கேமரா அமைப்பு குறித்து பார்க்கையில் இது 50 மெகாபிக்சல் பிரதான கேமரா முன்புறத்தில் 20 மெகாபிக்சல் செல்பி கேமரா உடன் வரும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட்ஸ் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. அதோடு 67 வாட்ஸ் வயர்டு சார்ஜிங்கை கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

ஸ்னாப்டிராகன் 898 சிப்செட் ஸ்மார்ட்போன்

ஸ்னாப்டிராகன் 898 சிப்செட் ஸ்மார்ட்போன்

அதேபோல் வெளியான தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில், ஸ்னாப்டிராகன் 898 ஸ்மார்ட்போனில் இடம்பெற்றிருந்தால் இது குவால்காம் செயலியின் பெரிய அளவிலான செயல்திறனை கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பேட்டரி ஆயுள் வெப்பக் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு அணுகல் ஆதரவை இது கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்னாப்டிராகன் 8 ஜெனரேஷன் 1 செயலி

ஸ்னாப்டிராகன் 8 ஜெனரேஷன் 1 செயலி

குவால்காம் அதன் முதன்மையான ஸ்னாப்டிராகன் 8 ஜெனரேஷன் 1 செயலியை நவம்பர் 30 ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது. இந்த சக்தி வாய்ந்த செயலியை ரியல்மி, சியோமி, ஒப்போ மற்றும் விவோ போன்ற பிராண்டுகளின் உயர்நிலை ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்னாப்டிராகன் 8 ஜெனரேஷன் 1 எஸ்ஓசி-ஐ பயன்படுத்தும் முதல் ஸ்மார்ட்போன்களில் ரியல்மி ஜிடி2 ப்ரோ இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் இந்த ஸ்மார்ட்போன் உலகின் சக்தி வாய்ந்த ஆண்ட்ராய்டு போனாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரியல்மி ஜிடி2 ப்ரோ

ரியல்மி ஜிடி2 ப்ரோ

ரியல்மி ஜிடி2 ப்ரோ இஎன்டி பெஞ்ச்மார்க் தளத்தில் புதிய சாதனையை படைத்துள்ளது. இது ஒரு மில்லியனுக்கும் அதிகமான புள்ளிகளை பெற்ற முதல் ஸ்மார்ட்போனாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கசிந்த ஸ்க்ரீன்ஷாட் தகவலின்படி, ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போனானது பெஞ்ச்மார்க் இணையதளத்தில் 1025,215 புள்ளிகளைப் பெற்றிருக்கிறது. எனவே ஸ்மார்ட்போன் சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 ஜெனரேஷன் 1 சிப்பை கொண்டிருக்கும் என வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீடியாடெக் டைமன்ஷென் 9900 எஸ்ஓசி

மீடியாடெக் டைமன்ஷென் 9900 எஸ்ஓசி

ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி மூலம் இயங்கும் பிற ஸ்மார்ட்போன்களை விட ரியல்மி ஜிடி 2 ப்ரோ குறைந்தது 15 சதவீதம் வேகமாக இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்னாப்டிராகன் 8 ஜெனரேஷன் 1 மட்டுமின்றி மீடியாடெக் டைமன்ஷென் 9900 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டதோடு பெயர் தெரிவிக்கப்படாத இந்த ஸ்மார்ட்போன் ஒரு மில்லியனுக்கும் அதிகமான புள்ளிகளை பெஞ்ச்மார்க்கில் பெற்றிருக்கிறது.

இரண்டு சிப்செட்களுக்கு இடையிலான செயல்திறன்

இரண்டு சிப்செட்களுக்கு இடையிலான செயல்திறன்

ஸ்னாப்டிராகன் 8 ஜெனரேஷன் 1 ஆனது மீடியாடெக் டைமன்ஷென் 9000 எஸ்ஓசி-ஐ விட சற்று முன்னோக்கி இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இரண்டு சிப்செட்களுக்கு இடையிலான செயல்திறனில் இருக்கும் வேறுபாடு மிகக் குறைவாக இருந்தாலும் செயல்திறனில் சிறந்த மாறுபாடு இருக்கும் என கூறப்படுகிறது. ஸ்னாப்டிராகன் 8 ஜெனரேஷன் 1 சிப்செட் மற்றும் மீடியாடெக் டைமன்ஷென் 9000 எஸ்ஓசி சக்தி வாய்ந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi Might Launching xiaomi 12 With Xiaomi 12X on December 12

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X