தீபாவளி சலுகை: சிறந்த தள்ளுபடியுடன் சியோமி சாதனங்கள்!

|

இகாமர்ஸ் தளங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு தீபாவளி சலுகையை அறிவித்து வருகின்றன. அதேபோல் தங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்வதில் பிரபலமடைந்த தனித்துவ பிராண்ட் நிறுவன தளங்களும் சலுகைகளை அறிவித்துள்ளது. இதில் சியோமி நிறுவன தயாரிப்புகளுக்கு கிடைக்கும் தள்ளுபடிகள் குறித்து பார்க்கலாம்.

எம்ஐ தீபாவளி விற்பனை

எம்ஐ தீபாவளி விற்பனை

எம்ஐ தீபாவளி விற்பனையை தங்கள் தயாரிப்புகளுக்கு அறிவித்துள்ளது. இதில் ஸ்மார்ட்போன்கள், டிவிகள், ஸ்மார்ட்பேண்ட்கள், மடிக்கணினிகள் என ஏராளமான தயாரிப்புகள் அடங்கும். இந்த விற்பனை சில தினங்களுக்கு மட்டுமே கிடைக்கும். எம்ஐ, ரெட்மி போன்ற சியோமி தயாரிப்புகளுக்கு கவர்ச்சிகரமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

எம்ஐ டிவிகளுக்கு சலுகை

எம்ஐ டிவிகளுக்கு சலுகை

எம்ஐ டிவி வாங்க திட்டமிட்டிருந்தால் இது சரியான நேரம். ரூ.4000 தள்ளுபடியில் எம்ஐ ஆண்ட்ராய்டு ஓஎஸ் இயக்கமுறை டிவிகள் கிடைக்கின்றன. எம்ஐ டிவிகள் சந்தையில் குறைந்த விலையில் அட்டகாச அம்சங்களோடு கிடைக்கிறது. இந்த டிவிகளுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட்பேண்டுகள் ரூ.4000 தள்ளுபடி

ஸ்மார்ட்பேண்டுகள் ரூ.4000 தள்ளுபடி

ஸ்மார்ட்பேண்டுகள் ரூ.4000 தள்ளுபடியில் கிடைக்கிறது. சந்தையில் கிடைக்கும் பட்ஜெட்விலையில் சிறந்த அம்சங்கள் கொண்ட பேண்டுகளில் சியோமி முன்னணித்துவம் வாய்ந்தவை. பேண்ட்களில் எம்ஐ ரகத்திற்கு எப்போதும் நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்பேண்ட்களுக்கு ரூ.4000 வரை தள்ளுபடி கிடைக்கிறது.

"டனுக்கு ரிட்டக்கு ரிட்டக்கு டும்டும்" வாட்ஸ்அப்பில் வைரலாகும் ஸ்டேட்டஸ்: காரணம் இதுதான்?

ஸ்மார்ட்வாட்ச்களுக்கு ரூ.6000 தள்ளுபடி

ஸ்மார்ட்வாட்ச்களுக்கு ரூ.6000 தள்ளுபடி

ஸ்மார்ட்வாட்ச்களுக்கு ரூ.6000 தள்ளுபடி கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களில் இயங்கும் எம்ஐ ஸ்மார்ட்வாட்ச் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவின் முதல் எம்ஐ ஸ்மார்ட்வாட்ச் தற்போது பல வகையில் ஏணைய இடங்களில் கிடைக்கின்றன. எம்ஐ ஸ்மார்ட்வாட்ச் இந்த தீபாவளி விற்பனையில் ரூ.6000 தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

சியோமி மடிக்கணினிகள்

சியோமி மடிக்கணினிகள்

10வது ஜெனரேஷன் இன்டல் கோர் செயலி மூலம் இயக்கப்படும் சியோமி எம்ஐ மடிக்கணினிகள் இந்திய சந்தையில் கிடைக்கின்றன. இந்த மடிக்கணிக்கு ரூ.9000 வரை தள்ளுபடி கிடைக்கிறது. இந்த மடிக்கணினி முழு எச்டி தெளிவுத்திறன் டிஸ்ப்ளே மற்றும் மெட்டல் யூனிபாடி வடிவமைப்போடு வருகிறது. சியோமி அனைத்து வகையான நுகர்வோரும் அணுகக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இயர்போன்கள் மற்றும் ஹெட்செட்கள்

இயர்போன்கள் மற்றும் ஹெட்செட்கள்

இயர்போன்கள் மற்றும் ஹெட்செட்களுக்கு ரூ.4000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. சியோமி ஹெட்செட்கள் மற்றும் இயர்போன்கள் சிறந்த தரம் வாய்ந்தவையாக இருக்கும். பொதுவாகவே மலிவு விலையில் கிடைக்கும் சியோமி சாதனங்களைபோல் இதுவும் குறைந்த விலையில் சிறந்த அம்சங்களோடு கிடைக்கிறது. சமீபத்தில் வெளியான டிடபிள்யூஎஸ் சாதனம் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது சியோமி இயர்போன்களுக்கு ரூ.4000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Xiaomi Mi Products Getting Offers During Diwali Sale

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X