Home
News

அதுல இருந்து இது., இதுல இருந்து அது: அனைத்து சிறப்புகளை ஒன்று சேர்த்து வருகிறது சியோமி எம்ஐ பேட் 5!

சியோமியின் எம்ஐ பேட் 5 தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த சாதனம் எப்போது வேண்டுமானாலும் வரக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த சாதனம் 11 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே மற்றும் ஸ்னாப்டிராகன் 800 சீரிஸ் சிப்செட் உடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச் 29 அறிமுகமாகும் என எதிர்பார்ப்பு

மார்ச் 29 அறிமுகமாகும் என எதிர்பார்ப்பு

சியோமி எம்ஐ பேண்ட் 6 உடன் இணைந்து எம்ஐ 11 தொடர் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதேபோல் மார்ச் 29 ஆம் தேதி நடைபெற்றது. அதேநிகழ்வில் நிறுவனம் சிறந்த வசதியுடன் கூடிய டேப்லெட்டை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது, இருப்பினும் அது நடைபெறவில்லை.

புதிய எம்ஐ பேட் 5

புதிய எம்ஐ பேட் 5

இந்தநிலையில் வெய்போ வெளியிட்ட தகவலில் சியோமியின் புதிய எம்ஐ பேட் 5 என அழைக்கப்படும் டேப்லெட் குறித்த சில முக்கிய அம்சங்களை வெளிப்படுத்தியது. கசிந்த தகவலின்படி, டேப்லெட் எம்ஐ மிக்ஸ் மடிப்பில் இருந்து காட்சி அம்சங்களை பெற்றிருக்கும் என கூறப்படுகிறது. எம்ஐ பேட் 5 என்பது கையடக்கு பிசி பயன்முறையாகும், இது பேரலல் விண்டோஸ், டூயல் ஸ்க்ரீன் பயன்முறை மற்றும் டிராப் உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

11 இன்ச் எல்சிடி 2கே டிஸ்ப்ளே

11 இன்ச் எல்சிடி 2கே டிஸ்ப்ளே

எம்ஐ பேட் 5 சாதனமானது 11 இன்ச் எல்சிடி 2கே டிஸ்ப்ளேவுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டேப்லெட் ஆனது 144 ஹெர்ட்ஸ் உயர் புதுப்பிப்பு வீதம் மற்றும் 480 ஹெர்ட்ஸ் டச் மாதிரி வீதத்தை கொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் டிப்ஸ்டர் தகவலின் காட்சியின் பிக்சல் அடர்த்தி மிக அதிகமாக இருக்காது என தெரிவித்துள்ளது.

ஸ்னாப்டிராகன் 800 சீரிஸ் சிப்செட்

எம்ஐ பேட் 5 சாதனமானது ஸ்னாப்டிராகன் 800 சீரிஸ் சிப்செட் உடன் வரும் எனவும் இது 7என்எம் உற்பத்தி செயல்முறையின் அடிப்படையில் ஆக்டோ கோர் சிப்செட் ஆகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இது அட்ரினோ ஜிபீயு உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சிப்செட் அனைத்து 5ஜி மற்றும் வைஃபை 6 பேண்ட்கள் ஆதரவைக் கொண்டுள்ளது.

மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்

மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் சமீபத்திய பட்டியலில் சியோமி நிறுவனம் இணைந்துள்ளது. சியோமி நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ள பல்வேறு புதிய அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி தற்போது சியோமி நிறுவனம் ஃபோல்ட் மாடல் ஸ்மார்ட்போன் தளத்தில் அடியெடுத்து வைத்துள்ளது.

புதிய உள்நோக்கி மடிப்பு சாதனம்

சமீபத்திய தொழில்நுட்பத்துடன் சாதனங்களை அறிமுகம் செய்வதில் சியோமி நிறுவனம் மிகவும் புகழ்பெற்றது. சியோமி நிறுவனம் தற்போது புதிய உள்நோக்கி மடிப்பு சாதனத்தை கொண்டு வருகிறது. சியோமி நிறுவனம் ஒரு யூ-வடிவ மடிப்பு அமைப்புமுறையை உருவாக்கியுள்ளது. இது மற்று மடிப்பு சாதனங்களை விட 27% இலகுவானதாகும். இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வகைகளில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் கொரில்லா கிளாஸ் அமைப்போடு வருகிறது.

கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு

கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் நிலையான பீங்கான் அமைப்பு முறையை கொண்டுள்ளது. பீங்கான் கருப்பு நிற பின்புறத்தோடு லேசர் வேலைப்பாடுகளுடன் கூடிய கோல்ட் மிட் பிரேம் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. சியோமி எம்ஐ மிக்ஸ் மடிப்பு இரண்டு பதிப்புகளில் முன்னதாகவே சீனாவில் முன்கூட்டிய ஆர்டருக்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

180 ஹெர்ட்ஸ் டச் மாதிரி வடிவமைப்பு

எம்ஐ மிக்ஸ் மடிப்பு ஸ்மார்ட்போனின் வெளிப்புற டிஸ்ப்ளே அளவு குறித்து பார்க்கையில், இது 6.52 இன்ச் மற்றும் 840x2520 பிக்சல் தீர்மானத்தோடு வரும் அமோலெட் பேனலாகும். இந்த ஸ்மார்ட்போன் 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே புதுப்பிப்பு வீதம் மற்றும் 180 ஹெர்ட்ஸ் டச் மாதிரி வடிவமைப்போடு எச்டிஆர் 10+ ஆதரவையும் கொண்டுள்ளது. இது டால்பி விஷன், உள் டிஸ்ப்ளே க்யூஎச்டி ப்ளஸ் தெளிவுத்திறனோடு வருகிறது.

சுவாரஸ்யமான தொழில்நுட்பம்

எம்ஐ மிக்ஸ் மடிப்பில் பயன்படுத்தப்படும் டிஸ்ப்ளே தொழில்நுட்பம் சுவாரஸ்யமாக இருந்தாலும் இதன் கேமரா வடிவமைப்பானது கணிசமான வித்தியாசத்தை பெற்றிருக்கிறது. எம்ஐ மிக்ஸ் மடிப்பு உலகின் முதல் லிக்விட் லென்ஸ் டெலிஃபோட்டோ கேமராவை பயன்படுத்துகிறது என்பது கூடுதல் சுவாரஸ்யம். இந்த சாதனம் 108 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 13 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் கேமரா என மூன்று கேமரா வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இந்த சாதனம் 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, 5020 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi Pad 5 May Launching with Snapdragon 800 Series
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X