அடுத்த போட்டி ஐபாட் உடன்: சியோமி எம்ஐ பேட் 5 குறித்த முக்கிய விவரங்கள்!

|

120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத காட்சி மற்றும் 5ஜி திறன்கள் போன்ற அம்சங்கள் உடன் ஸ்மார்ட்போன் வெளியாகின்றன. இந்த அம்சங்களானது ஐபாட் ப்ரோ போன்ற குறைந்த எண்ணிக்கையிலான டேப்லெட்களில் மட்டுமே இடம்பெறுகின்றன. சியோமி நிறுவனம் விரைவில் தனது எம்ஐ பேட் 5 சாதனத்தை ஆப்பிள் நிறுவனத்திடம் போட்டியிடும் வகையில் அறிமுகம் செய்ய உள்ளது.

டேப்லெட், ஸ்மார்ட்போன், லேப்டாப்

கோவிட்-19 தொற்றுநோய் பரவல் காரணமாக டேப்லெட், ஸ்மார்ட்போன், லேப்டாப் பயன்பாடுகள் அதிகரித்து வருகின்றன. எனவே அதிகமான ஓஇஎம் வசதியோடு டேப்லெட் கணினிகள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்படுகின்றந. சியோமி நிறுவனம் ஒரு புதிய உயர்நிலை டேப்லெட்டை அறிமுகப்படுத்த உள்ளது. இது ஸ்னாப்டிராகன் 860/870 மூலம் இயக்கப்படுகிறது.

சியோமி எம்ஐ பேட் 5 விவரக்குறிப்புகள்

சியோமி எம்ஐ பேட் 5 விவரக்குறிப்புகள்

சியோமி எம்ஐ பேட் 5 விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில், ஐபாட் வரிசையைப் போன்றே சியோமி எம்ஐ பேட் 5 பல அம்சங்களை கொண்டுள்ளது. இந்த சாதனமானது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத காட்சி, 5ஜி இணைப்பு மற்றும் வேகமான சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. வேகமான சார்ஜிங் என்று குறிப்பிடுகையில் இதில் 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இடம்பெற்றுள்ளது. இந்த மாடல் 11 இன்ச் டிஸ்ப்ளே கொண்டதாக இருக்கிறது. இது 2கே தீர்மானம் மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத காட்சிகளோடு வருகிறது. இந்த டேப்லெட்களானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஓசி செயலி மூலம் இயக்கப்படுகிறது. இது 6 ஜிபி ரேம் அம்சம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இதில் பெரிய டிஸ்ப்ளே வடிவமைப்பு இருப்பது இதன் மேம்படுத்தல் அம்சமாக இருக்கிறது. இந்த சாதனமானது MIUI 11 உடன் Android 11 OS மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இந்த டேப்லெட்டில் 48 எம்பி அல்லது 12 எம்பி உயர் தெளிவுத்திறன் கேமரா இடம்பெறலாம் என கூறப்படுகிறது. அதோடு இந்த சாதனம் 8720 எம்ஏஎச் பேட்டரி அம்சத்தோடு வரும் எனவும் இதை சார்ஜ் செய்ய 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது. சார்ஜர் இணைப்பு சாதனமாக வரும் எனவும் கூறப்படுகிறது. ஒருமணி நேரத்தில் பெரிய திறன் வசதி பேட்டரியோடு வரும் என கூறப்படுகிறது.

அதிவேக பேட்டரி அம்சம்

அதிவேக பேட்டரி அம்சம்

சியோமி எம்ஐ பேட் 5 எதிர்பார்க்கப்படும் வெளியீடு குறித்து பார்க்கையில், இந்த சியோமி எம்ஐ பேட் 5 சீனாவில் முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த சாதனம் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இது எம்ஐ பேட் 5 அடுத்த சில வாரங்களில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இந்த டேப்லெட் இந்தியாவில் 2021 ஆம் ஆண்டு இறுதிக்குள் கிடைக்கும் என கூறப்படுகிறது.

விலை உயர்ந்த டேப்லெட்

விலை உயர்ந்த டேப்லெட்

சியோமி எம்ஐ பேட் 5., ஐபாட் ப்ரோவை விட குறைவாகவே செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்ஐ பேட் 5 நிச்சயமாக சியோமி தளத்திலேயே விலை உயர்ந்த டேப்லெட்டாக இருக்கும் என கூறப்படுகிறது. இதில் முதன்மை தர விவரக்குறிப்புகளோடு வரும் என கூறப்படுகிறது. அதேபோல் சியோமி குறிப்பாக குறைந்த விலையிலேயே இருப்பதால் இதுவும் குறைந்த விலை சாதனமாகவே இருக்கும் என கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi Pad 5 May Compete With Ipad- Specs Leaked

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X