Home
News

சியோமி அறிமுகம் செய்த ஆர்கானிக் டி-ஷர்ட்! விலை என்ன தெரியுமா?

சியோமி நிறுவனம் ஸ்மார்ட்போன் முதல் மாசுபாடு முகமூடி வரை அனைத்தையும் இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் தற்பொழுது சியோமி நிறுவனம் மி ஆர்கானிக் டி-ஷர்ட்களை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது.

100% ஆர்கானிக் டி-ஷர்ட்

100% ஆர்கானிக் டி-ஷர்ட்

சீன நிறுவனமான சியோமி நிறுவனம், 100% ஆர்கானிக் பருத்தியிலிருந்து தயாரிக்கப்பட்ட இரண்டு டி-ஷர்ட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆர்கானிக் டி-ஷர்ட்டுகள் இரண்டு நிறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆர்கானிக் டி-ஷர்ட்கள் உலகளாவிய ஆர்கானிக் டெக்ஸ்டைல் தரநிலைகளால் சான்றளிக்கப்பட்டுள்ளது.

ரிஃப்லெக்ட்டிங் மி லோகோ

ரிஃப்லெக்ட்டிங் மி லோகோ

இந்த சியோமி மி டி-ஷர்ட்டின் அதிகாரப்பூர்வ பட்டியலின் படி, நச்சுகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தாத ஆர்கானிக் பருத்தியைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சியோமி மி டி-ஷர்ட்டின் பின்புறத்தில் மற்றும் அதன் ஸ்லீவிலும் ரிஃப்லெக்ட்டிங் மி லோகோக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

டி-ஷர்ட்டிலும் விதை

டி-ஷர்ட்டிலும் விதை

நீங்கள் வாங்கும் ஒவ்வொரு டி-ஷர்ட்டிலும் விதையுடன் கூடிய ஒரு பை பொருத்தப்பட்டிருக்கும். இந்த விதைகளை நீங்கள் நேரடியாக மண்ணில் விதைக்கலாம். விதைகள் விதைக்கப்பட்ட சில நாட்களில் பாஸில் செடிவளர ஆரம்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டி-ஷர்ட் உடன் பருத்தி கோரா பை ஒன்றும் வழங்கப்படுகிறது.

விலை என்ன தெரியுமா?

விலை என்ன தெரியுமா?

மி ஆர்கானிக் டி-ஷர்ட்கள் கருப்பு மற்றும் வெள்ளை என இரண்டு வண்ணங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கிடைக்கிறது. இதன் அளவு சிறியது முதல் பெரியது வரை வெறும் ரூ. 499 என்ற விலையில் சியோமியின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வழியாகக் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Mi Organic Solid T-shirt for Rs. 499 in India : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X