சிறந்த அம்சங்களோடு Mi Notebook 14(IC) லேப்டாப் அறிமுகம்: விலை இவ்வளவுதானா?

|

சியோமி எம்ஐ நோட்புக் 14 ஐசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை குறித்து பார்க்கலாம்.

சியோமி எம்ஐ நோட்புக் 14 ஐசி

சியோமி எம்ஐ நோட்புக் 14 ஐசி

சியோமி எம்ஐ நோட்புக் 14 மாடலை அறிமுகப்படுத்தியதன் மூலம் 2019 ஆம் ஆண்டில் இந்திய மடிக்கணினி சந்தையில் சியோமி நுழைந்தது. இந்த மடிக்கணினி விலைக்கேற்ற அம்சம் என்றாலும் இதில் வெப்கேம் இல்லை என்பது முக்கிய குறைபாடாக இருந்தது. இந்த சிக்கலை தீர்க்க சியோமி யூஎஸ்பி வெப்கேமை இலவசமாக வழங்கியது. இந்த நிலையில் இதை முழுமையாக போக்க சியோமி எம்ஐ நோட்புக் 14 ஐசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சியோமி எம்ஐ நோட்புக் 14 ஐசி: அம்சங்கள்

சியோமி எம்ஐ நோட்புக் 14 ஐசி: அம்சங்கள்

சியோமி எம்ஐ நோட்புக் 14 ஐசி இன்டெல் யுஎச்டி கிராபிக்ஸ் 10-வது ஜெனரேஷன் இன்டெல் கோர் 5-10210 யு குவாட் கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த லேப்டாப் இரண்டு வகைகளில் கிடைக்கிறது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஹை-எண்ட் வேரியண்ட் என கிடைக்கிறது.

720பி எச்டி வெப்கேம்

720பி எச்டி வெப்கேம்

எம்ஐ நோட்புக் 14 ஐசி லேப்டாப் 14 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே முழு எச்டி (1920 x 1080p) தெளிவுத்திறனை கொண்டுள்ளது. இதன் காட்சிக்கு மேல் ஒரு வெப்கேம் பொருத்தப்பட்டுள்ளது. இதில் வழக்கமான மடிக்கணினிகளை போலவே இது 720பி எச்டி வெப்கேமை கொண்டுள்ளது. இது வீடியோ கான்பரன்சிங் மற்றும் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள தாராளமானது.

எம்ஐ நோட்புக் 14 ஐசி இணைப்பு ஆதரவுகள்

எம்ஐ நோட்புக் 14 ஐசி இணைப்பு ஆதரவுகள்

எம்ஐ நோட்புக் 14 ஐசி லேப்டாப் இரண்டு யூஎஸ்பி-ஏ 3.1 ஜெனரேஷன் 1 போர்ட்கள், எச்டிஎம்ஐ போர்ட் ஆகிய ஆதரவுகளை கொண்டுள்ளது. எம்ஐ நோட்புக் 14 போல் விசைப்பலகை நோட்புக் 14 ஐசி வழங்கப்படவில்லை. இந்த லேப்டாப்பில் யூஎஸ்பி டைப்-சி போர்ட் வழங்கப்படவில்லை. எம்ஐ நோட்புக் 14 ஐசி இணைப்பு ஆதரவுகளாக ப்ளூடூத் 5.0, இரட்டை வைஃபை ஆதரவுகள் உள்ளது. இரட்டை 2 வாட்ஸ் ஸ்பீக்கர்களும் வழங்கப்படுகின்றன. இந்த லேப்டாப்பில் 3660 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. 10 மணிநேர பேட்டரி ஆயுள் வழங்கப்படுகிறது.

சியோமி எம்ஐ நோட்புக் 14 ஐசி: விலை

சியோமி எம்ஐ நோட்புக் 14 ஐசி: விலை

சியோமி எம்ஐ நோட்புக் 14 ஐசி மூன்று வகைகளில் கிடைக்கிறது. 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் இன்டெல் யுஎச்.டி கிராபிக்ஸ் கார்டு கொண்ட அடிப்படை மாடலின் விலை ரூ.43,999. மிட்-ரேஞ்ச் மாடலான 8 ஜிபி ரேம், 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் இன்டெல் யுஎச்.டி கிராபிக்ஸ் உள்ளன. இதன் விலை ரூ .46,999 ஆகும். 8 ஜிபி ரேம், 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் என்விடியா எம்எக்ஸ் 250 2 ஜிபி ஜிபீயு கொண்ட ஹை எண்ட் மாடலின் விலை ரூ .49,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Xiaomi Mi Notebook 14 IC Laptop Launched in India: Price, Specifications

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X