சியோமி மி நோட் 2 - லீக் தகவல்கள்..!
சமீபத்தில் சியோமி நிறுவனம் அதன் புதிய கருவிகளானமி 5எஸ் மற்றும் மி 5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது அதனை தொடர்ந்து மிக விரைவில் மற்றொரு மி கருவி வெளியாகலாம் என்றும், அது சார்ந்த வதந்திகளில் அக்கருவியானது மி நோட் ஆக இருக்கலாம் என்ற தகவல்கள் கிடைத்துள்ளன.

இது சார்ந்து இண்டர்நெட்டில் கசிந்துள்ள ஒரு புதிய படத்தில் வெளியாகப்போகும் புதிய ஸ்மார்ட்போன் பற்றிய அதிக தகவல்களை கண்டறிந்துக்கொள்ள முடியவில்லை என்கிற போதிலும் அதில் ஒரு இரட்டை கேமரா அமைப்பு இடம்பெறும் என்பது உறுதிப்படுத்த முடிகிறது.

சியோமியின் சமீபத்திய மி 5எஸ் பிளஸ் கருவியும் ஒரு இரட்டை கேமரா அமைப்பில் வெளியானது என்பதும் சியோமி மி ன் ஓட் 2 கருவியின் இரட்டை கேமிரா அமைப்பானது ஐபோன் 7 பிளஸ் கருவியில் இருப்பது போன்று கருவியின் ஒரு மூலையில் அமைக்கப்பட்டுள்ளது.
முன்பு வெளியான சியோமி மி நோட் 2 லீக் தகவல்களில் இருந்து எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் :
ப்ராசஸர் : ஸ்னாப்டிராகன் 821
ரேம் : 6ஜிபி
டிஸ்ப்ளே : 5.5 அல்லது 5.7இன்ச் (1440 x 2560 பிக்சல் ரெசெல்யூஷன்)
முன்பக்க கேமிரா : 5 எம்பி
பின்பக்க கேமிரா : 16 எம்பி
உள்ளடக்க சேமிப்பு : 128ஜிபி (256 ஜிபி கொண்ட கருவியும் எதிர்பார்க்கப்படுகிறது)
பேட்டரி : 4000எம்ஏஎச்
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சியோமி இந்த மாதம் தனது ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. உடன் சாதனம் பற்றி எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளையும் நிறுவனம் அளிக்கவில்லை.
மேலும் படிக்க :
அமேசான் சிறப்பு விற்பனை : எக்ஸ்சேன்ஜ் சலுகையில் கிடைக்கும் புதிய ஸ்மார்ட்போன்கள்!


Click it and Unblock the Notifications