Home
News

சியோமி பிரியர்களே, இதோ உங்களுக்காகவே ஆன்லைனில் லீக் ஆன மி மிக்ஸ் நானோ.!

5.5 அங்குல டிஸ்ப்ளே கொண்ட சியோமி மி மிக்ஸ் நானோ கருவியும் மற்றும் ஒருவெள்ளை நிற வேரியண்ட் மாறுபாடும் ஆன்லைனில் கசிந்துள்ளது.

By Muthuraj

கடந்த மாதம் சியோமி நிறுவனம் அதன் எட்ஜ்-லெஸ் டிசைன் கொண்ட மி மிக்ஸ் கருவியை வெளியிட்டது. இப்போது அதன் வெள்ளை நிற வேரியண்ட் படங்களுடன் சேர்த்து ஒரு புதிய 5.5-இன்ச் மி மிக்ஸ் நானோ கருவி சார்ந்த வதந்தியானது இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது.

தற்போதைய மி மிக்ஸ் கருவியானது ஒரு 6.4-அங்குல (2040 x 1080 பிக்சல்கள் தீர்மானம்) ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே கொண்ட, ஈர்க்கக்கூடிய 91.3 சதவீகித ஸ்க்ரீன்-டூ-பாடி ரேஷியோ கொண்ட ஒரு கருப்பு வேரியண்ட் பதிப்பில் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. வெளியாகியிருக்கும் லீக் தகவலின்படி சியோமி மி மிக்ஸ் நானோ கருவி என்னென்ன அம்சங்கள் கொண்டிருக்கும் என்பதை பற்றிய தொகுப்பே இது.

ஸ்னாப்டிராகன் 821 செயலி

ஸ்னாப்டிராகன் 821 செயலி

வீபோ கசிவு தகவல்களின்படி, மி மிக்ஸ் நானோ கருவியானது 64ஜிபி சேமிப்பு வசதி இணைந்து 5.5 அங்குல டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 821 செயலி மற்றும் 4ஜிபி ரேம் கொண்டு வெளியாகலாம். வெளியான புகைப்படம் தெளிவாக இல்லாத காரணத்தால் கூடுதல் தகவல்களை பெற இயலவில்லை.

பேசெல்-லேஸ் மற்றும் ஆல் சேராமிக் பாடி

பேசெல்-லேஸ் மற்றும் ஆல் சேராமிக் பாடி

ஒரு வெள்ளை நிற மி மிக்ஸ் படங்கள் கொண்டு மற்றொரு கசிவு தகவலும் கிஸ்மோசீனாவில் வெளியானது. சியோமியை பொருத்தமட்டில் மி மிக்ஸ் இன்னும் ஒரு கான்செப்ட் தொலைபேசி தான். ஆனால், அதன் பேசெல்-லேஸ் மற்றும் ஆல் சேராமிக் பாடியானது தற்போது கவனத்திற்கு வந்துள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

க்வாட்-கோர் ஸ்னாப்டிராகன் 821

க்வாட்-கோர் ஸ்னாப்டிராகன் 821

சியோமி மி மிக்ஸ் கருவியானது அட்ரெனோ 530 ஜிபியூ இணைந்த ஒரு க்வாட்-கோர் ஸ்னாப்டிராகன் 821 செயலி மூலம் இயக்கப்படுகிறது. உடன் 4ஜிபி ரேம் / 128ஜிபி ரோம் மற்றும் 6ஜிபி ரேம் / 256ஜிபி ரோம் ஆகிய இரண்டு வகைகளில் கிடைக்கிறது.

கேமிரா

கேமிரா

இக்கருவி ஒரு எப் /2.0 அப்பெர்ச்சர், இஐஎஸ், டுவல் எல்இடி ஃப்ளாஷ் மற்றும்பேஸ் டிடெக்ஷன் ஆட்டோ போகஸ் கொண்ட ஒரு 16 எம்பி பின்புற கேமிரா மற்றும் 8எம்பி முன்பக்க கேமிரா கொண்டுள்ளது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

க்விக் சார்ஜ் 3.0

க்விக் சார்ஜ் 3.0

இரட்டை சிம் வசதி கொண்ட மி மிக்ஸ் கருவியின் எடை 209 கிராம் ஆகும் மற்றும் நீக்க முடியாத ஒரு பாரிய 4400 எம்ஏஎச் லி-அயன் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. க்விக் சார்ஜ் 3.0 மூலம் 30 நிமிடங்கள் 83 சதவீதம் பேட்டரி சார்ஜை நிகழ்த்த வல்லது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஸ்னாப்டிராகன் 835, 6ஜிபி ரேம் உடன் சாம்சங் கேலக்ஸி எஸ்8.!

Best Mobiles in India

English summary
Xiaomi Mi Mix Nano with 5.5-inch display, and a white variant spotted online. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X